இப்பொல்லாத காலத்தின் தேவன் Jeffersonville, Indiana USA 65-0801M 1சகோ. நேவில் அவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானம் வாசிக்கப்பட்டது - ஆசி. 2யாவும் கைகூடிடும் நம்பிடுவேன் நம்பிடுவேன் நம்பிடுவேன் யாவும் கைகூடிடும் நம்பிடுவேன்... நாம் தலைகளை வணங்குவோம். அன்புள்ள பரம பிதாவே நாங்கள் விசுவாசிக்க முடிந்ததற்காக, இந்த காலை நேரத்திற்காக, நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அது உமது குமாரனாகிய இயேசு சிந்திய இரத்தத்தினால் சாத்தியமாகிறது. மேலும், சிலுவை மரணத்திற்கு இயேசு கீழ்ப்படிந்ததின் மூலமாக, நாங்கள் அவருடைய கிருபைக்கு பங்காளிகளாகவும், தேவனுடைய புத்திரராகவும், புத்திரிகளாகவும் ஆகும்படியும் சாத்தியமானது. அவருடைய உயிர்த்தெழுதலிலும், அவரிலும், நாங்கள் வைத்துள்ள விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டோம். மேலும் இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் எங்கள் உள்ளங்களில் ஊற்றப்பட்டிருக்கிறார். ஆண்டவரே, இந்த காலை நேரத்தில் நாங்கள் எங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும், உமது வார்த்தையை வாசிப்பதின் மூலமாகவும், சங்கீதங்களைப் படிப்பதின் வாயிலாகவும், பாடல்களைப் பாடிக்கொண்டு, சாட்சி சொல்லி, தொழுது கொள்ளவும், எங்கள் மனதின் கருத்துக்களைத் தெரிவிக்கவும் நாங்கள் கூடி வந்திருக்கிற இவ்வேளைக்காக நன்றி செலுத்துகிறோம். இந்த நேரத்திற்காக நியமிக்கப்பட்ட செய்தியை பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு அளிக்கும்படி, அவரை நோக்கி பயபக்தியுடன் காத்திருக்கிறோம். அதை எங்களுக்குத் தாரும், கர்த்தாவே. நாங்கள் இங்கு இருப்பதினிமித்தம் பயன் அடைவோமாக, நாங்கள் இக்கட்டிடத்தை விட்டு புறப்படும் போது, “அவர் நம்மோடு இக்காலையில் பேசுகையில் நமது இருதயங்கள் நமக்குள் கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று எம்மாவூருக்குப் போன சீஷர்கள் கூறியது போல், நாங்களும் கூறும்படி செய்தருளும். நித்தியமான தேவனே, இவைகளை எங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அளித்தருளும். ஆமென். (உட்காருங்கள்). இக்கூடாரத்தில் கூடிவந்திருக்கிற நண்பர்களே! மேற்குக் கடற்கரைப் பிரதேசம், கிழக்குக் கடற்கரைப் பிரதேசம் மற்றும் தேசத்தின் வடக்கு தெற்கு ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு, தொலைபேசி இணைப்புக்கள் மூலமாக இவ்வாராதனையில் பங்கு பெறுகிற நண்பர்களே! உங்கள் யாவருக்கும் எனது அன்பான காலை வணக்கங்கள் உரித்தாகுக. இன்று, இந்த நாளானது, இந்தியானாவில், சற்று மேகமூட்டமாகவும், குளுமையாகவும் இருந்து, அருமையாக இருக்கிறது. இக்கூடாரமானது உள்ளிலும் வெளியிலும் மக்களால் நிறைந்து காணப்படுகிறது. இன்று கர்த்தர் நம்மை சந்திக்க வேண்டி, மகத்தான எதிர்பார்ப்போடு நாம் இருக்கிறோம். நீங்கள் எங்கிருந்த போதிலும், தேவன் உங்களுக்கு ஒரு அருமையான நாளைக் கொடுத்திருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். கர்த்தர் இந்த நாளைக் கொடுத்திருக்கிறபடியினால், அது உண்மையில் ஒரு நல்ல நாள்தான். காலநிலை எவ்வாறிருப்பினும், இது ஒரு நல்ல நாள் தான். நாம் இங்கு இருப்பதற்காக, அதிலும் இயேசு கிறிஸ்துவில் நமக்குள்ள விசுவாசத்தை உலகுக்கு தெரியப்படுத்த கிடைத்துள்ள இந்நல்ல தருணத்திற்காக, நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். மேலும், அவருடைய அன்பைப் பற்றியும் அவர் எங்களுக்குச் செய்துள்ளவைகளைப் பற்றியும் எடுத்துரைப்பதற்காக, எங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விழைகிறோம். 3சிறிது நேரத்திற்கு முன்பு, அறிவிக்கும்படியான சில அறிவிப்புகள் என்னிடம் கொடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு, நான் பேச வேண்டிய சில காரியங்கள் என்னிடம் உள்ளன. அவ்வறிவுப்புக்களில் ஒன்று என்னவெனில், அன்றிரவு நடைபெற்ற சபையின் நிர்வாக சபைக் கூட்டம் பற்றியதாகும். நமது சபையில் உதவிக்காரராக இருக்கும் நமது உயரிய சகோதரன் காலின்ஸ் என்பவர் அரிசோனாவில் தனது வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவர் அவ்வாறு இங்கு இல்லாத வேளையில், அவருடைய ஸ்தானத்தை நிரப்பத் தக்கதாக சகோதரன் சார்லி காக்ஸ் என்பவரை நியமித்துள்ளார்கள். சகோதரன் காலின்ஸ் அவர்கள் இல்லாத நேரத்தில் சபையின் நிர்வாக சபையில் ஏற்படும் காலியிடத்தை நிரப்பத் தக்கதாக சகோதரன் சார்லி காக்ஸை சபையின் தர்மகர்த்தாக்கள் (Trustees) அல்லது உதவிக்காரர்களின் குழு (Deacon Board) நியமித்துள்ளது. 4உங்களில் சிலர் சுகமளிக்கும் ஆராதனைக்கு முன்பாகவே இங்கிருந்து சென்றுவிட இருப்பதால், கொடுக்கப்பட்ட அருமையான அன்பளிப்புக்களுக்காகவும், பரிசுகளுக்காகவும் நான் மீண்டும் உங்கள் யாவருக்கும் நன்றி செலுத்துகிறேன். நாங்கள் இங்கு வந்ததிலிருந்து, எங்களுக்கு ஏராளமான உணவு கொண்டு வரப்பட்டுள்ளது. நானும், எனது மனைவியும், மற்றும் குடும்பத்தாரும் அதை உண்மையாகவே பாராட்டுகிறோம். சில சமயங்களில் கொடுக்கப்படுகிறவைகளைப் பற்றி நன்றி சொல்லவும், நான் மறந்துவிடுகிற அளவுக்கு பல அலுவல்கள் இருந்து விடுகின்றன. அதை நீங்கள் அறிவீர்கள். எப்பொழுதும் என் சிந்தையானது வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. காரணம், இங்குள்ள மக்கள் மட்டுமல்ல, உலக முழுவதிலும் உள்ள மக்களைப் பற்றியும் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இக்காரியம் எப்படிப்பட்டது என்பதை உங்களால் எண்ணிப் பார்க்க முடியும். எனவே இவ்வாறு பல காரியங்களைப் பற்றி நான் என் கவனத்தைச் செலுத்துவதால், மிகவும் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறேன். யாரோ ஒருவர், குழந்தைகள் பிரதிஷ்டை, மற்றும் ஞானஸ்நானம் ஆகியவைகளைச் செய்ய வேண்டுவது பற்றி என்னிடம் குறிப்பிட்டார். அவைகளைச் செய்வது அருமையானது தான். அவைகளைச் செய்ய வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். ஆனால் எனக்கு அவைகளுக்கென்று நேரம் கிடைப்பதில்லை. இச்செய்தியின்பால் நான் அதிக கவனம் செலுத்த வேண்டியவனாக உள்ளேன். வேதத்தில் அப்போஸ்தலர்கள் இவ்வாறு கூறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் கூறியதாவது: “...பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழு பேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்...'' (அப்போஸ்தலர்: 6:3,4) என்று கூறினார்கள். பில்லி என்னிடம், ''நீங்கள் இந்தத் தடவை குழந்தைகளை பிரதிஷ்டை செய்யப் போகிறீர்களா?'' என்று கேட்டான். நான், அதற்கு, “அடேயப்பா” என்றேன், பார்த்தீர்களா? அது சரி. அப்படி அவர்கள் பிரதிஷ்டைக்காக காத்துக் கொண்டிருப்பார்களானால், நான் போய்த் திரும்ப வந்து, குழந்தைகள் பிரதிஷ்டைக்காக ஒரு நாளை விசேஷித்து ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கும். எனவே, நான் அதைச் செய்யவிரும்புவேன். 5நானும் எனது மனைவியும், மற்றும் எனது குடும்பத்தாரும் எங்களது இதயபூர்வமான நன்றியை உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் எங்களுக்கு, டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களையும், புதிய பட்டர் பீன்ஸ், முலாம்பழம், கேண்டலூப்ஸ் (ஒருவகையான முலாம்பழம்) ஸ்ட்ரா பெர்ரீ (ஒரு வகை ருசியுள்ள சிவப்பான பழம் - தமிழாக்கியோன்) ஆகியவைகளையும் மற்றும் மனதில் நினைத்ததையெல்லாம் கொண்டு வந்தீர்கள். ஒரு விலையேறப்பெற்ற சகோதரனும், சகோதரியும், அன்றொரு நாள் எங்களுக்கு ஒரு பெரிய வான்கோழியைக் கொண்டு வந்தார்கள். அதின் இறைச்சி இன்னமும் எனக்குப் புசிக்கக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து நான் புறப்படும் முன்னர் நான் அதைப் புசித்து முடித்தாக வேண்டும் எனக் கருதுகிறேன். அப்படி நான் சாப்பிட்டு முடிக்க முடியவில்லையெனில், என் மனைவி எங்களோடு அதில் மீதியானதை எடுத்துக் கொண்டு வருவாள். ஆகவே, நாங்கள் நிச்சயமாகவே, இப்படிப்பட்ட ஈவுகளுக்காக பாராட்டுகிறவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்ட ஈவுகளைக் கொடுப்பவர்களில் அநேகரை எனக்குத் தெரியும். சிலரை எனக்குத் தெரியாது. நாங்கள் உள்ளே வருகையில், அவைகள் முகப்பு மண்டபத்தில் இருந்து கொண்டிருக்கும். எனவே நான்அதை நிச்சயமாக பாராட்டுகிறேன். அநேகரை நான் அறிவேன். அநேகரை நான் பார்த்திருக்கிறேன். இன்னும் அநேகரை நான் கண்டதில்லை. நான் ஒவ்வொருவரையும் சந்திக்க விரும்புகிறேன் என்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். ஆனால் நான் ஒரேயொருவன்தான். எனவே என்னால் யாவரையும் சந்தித்துவிட இயலாது. எந்தவொரு காரியத்தையும் எவ்வாறு செய்ய வேண்டுமென நான் அறிந்திருக்கிறேனோ அப்படியே நான் செய்துக் கொண்டிருக்கிறேன். 6தேவன் உங்களோடிருப்பாராக. இயேசு கிறிஸ்துவாகிய ஒருவரே உங்களோடு இருப்பார் என்பதை நான் நிச்சயித்திருக்கிறேன். அவர் உங்களோடிருக்க முடியும். அவர் ஒருவரே எங்கும் நிறைந்திருக்கிறவரும், சர்வ வல்லமையுள்ளவருமாயிருக்கிறார். எனவே அவரால் ஒவ்வொரு தேவையையும் சந்திக்கமுடியும். அவர் சர்வ ஞானியாகவுமிருக்கிறார். எனவே அவர் உங்களது தேவைகள் என்ன என்பதையும் அறிந்திருக்கிறார். நான் காண முடியாத ஒவ்வொருவரையும்... மெச்சுகிறேன். நான் இங்கு காலையில் வந்ததிலிருந்து முடிந்த அளவுக்கு யாரையெல்லாம் பார்க்க முடியுமோ அவர்களையெல்லாம் வேகமாக பார்த்துவிட்டேன். ஆனால் யாரையாவது நான் பார்க்க முடியாமல் போய்விடுமானால், சர்வ வியாபியான தேவனானவர் மகிமையில் உள்ள தமது ஐசுவரியத்தின்படியே உங்கள் தேவைகளை அருளிச் செய்வாராக. இங்கிருக்கிற இந்த விசேஷித்த அறிவிப்பை எனது மகன் பில்லி எழுதித் தந்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில், இதை என்னால் நன்றாக படிக்க முடியவில்லை. அவன் என்னைப் போலவே எழுதுகிறான். என்னுடைய எழுத்தை என்னாலேயே வாசிக்க இயலவில்லை. இங்கு நான் எழுதி வைத்துள்ள குறிப்புகளை நீங்கள் வாசிப்பீர்களென்றால், உங்களால் புரிந்துக் கொள்ள முடியும் என நீங்கள் எண்ணுகிறீர்களா? நான் எனக்கென்றே பிரத்தியேகமாக ஒரு சுருக்கெழுத்தை வைத்துக் கொண்டுள்ளேன். (சகோதரன் பிரான்ஹாம் ஒரு அறிவிப்பைப் படிக்கிறார் - ஆசிரியர்). 7நான் இப்பொழுது இன்னொரு அறிவிப்பை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். இன்றிரவு சுகமளித்தல் ஆராதனை இருக்கும் என்பதே அவ்வறிவிப்பாகும். இன்றிரவு நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். நீங்கள் இங்கு இருப்பீர்களென நான் நம்புகிறேன். இன்று காலையில் தேவன் ஆசீர்வதிக்கும்படி, தேசமெங்கிலும் உள்ளவர்க்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்களை நாம் அனுப்புகிறோம். உங்களில் சிலருக்கு நேரமானது மதிய நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் இப்பொழுது கிட்டத்தட்ட மதிய நேரமாயிருக்கிறது; மேற்குக் கடற்ரையில், அரிசோனாவில் காலை 7 மணி தான் ஆகிறது. இங்கே நாம் அவ்விரு நேரங்களுக்கும் மத்தியில் இருக்கிறோம். ஆகவே செய்தியைக் கேட்கையில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 8நான் இங்கு இருக்கையில், இவ்வூரில் உள்ள பொது மன்றங்களில் (Auditoriums) கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை. இறுதியில், ஒரு கூட்டம் மட்டும் நடத்திக்கொள்ள அவர்கள் ஒரு வகையான அனுமதியளித்தார்கள். ஆனால், வியாதியஸ்தருக்காக மட்டும் ஜெபிக்கக் கூடாது எனக் கூறப்பட்டது. வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது எனது ஊழியமாயிருக்கிறது. அதை நான் எனது பொறுப்பாக என்மேல் சுமத்திக் கொண்டிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் எனக்குச் சொல்வதையே நான் செய்ய வேண்டியவனாக இருக்கிறேன். எனவே வியாதியஸ்தருக்காக ஜெபிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் அந்த பொது மன்றத்தை அனுமதித்ததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பரிசுத்தாவியானவர் எனக்குச் சொல்வதை நான் செய்யத் தக்கதாக நான் சுதந்தரமுள்ளவனாக இருக்க விரும்பினேன். ஆகவே, எப்படியாயினும், இக்கூடாரத்தில் இன்னுமொரு நாள் அதற்காக வைத்துக் கொள்ளலாம் என நான் எண்ணினேன். இக்காலையானது குளுமையாக இருக்கிறது. கர்த்தர் இந்நாளை நமக்கு மிகவும் அருமையானதாக ஆக்கித் தந்திருக்கிறார். அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 9வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி ஏழு கலசங்களைப் பற்றியும், ஏழு எக்காளங்களைப் பற்றியும், ஏழு இடி முழக்கங்களைப் பற்றியும் உங்களுக்குப் போதிக்கும் நோக்கத்துடன் இங்கு வந்திருக்கிறேன். அவைகளை, திறக்கப்பட்ட ஏழு முத்திரைகள் ஏழு சபைகள் இவற்றைப் பின்பற்றி, நாம் வாழும் இந்தச் சமயத்தில் ஒன்றாகப் பிணைத்துப் பார்க்கவேண்டும். அவைகளைப் பிரசங்கிக்க இங்கு இடம் போதாது. அதை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக, அதற்கென போதிய இட வசதி உள்ள ஒரு இடத்தை நாம், இங்கோ, நியூ அல்பேனியில் உள்ள லூயிவில்லிலோ, எடுத்துச் செய்வோம். அல்லது, இதற்கென ஒரு பெரிய கூடாரத்தை அமைத்துக் கொண்டு, அங்கு கர்த்தர் நம்மை நடத்துகிற வரையிலும் தங்கியிருந்து அவற்றைக் கேட்போம். ஆனால், இப்பொழுதோ, மக்களுக்கு தேவனில் உள்ள எனது நம்பிக்கையைப் பற்றியும், விசுவாசத்தைப் பற்றியும் எடுத்துரைக்கவும்! நாம் வாழ்கிற நேரத்தின் காரியத்திற்கு உங்களைக் கொண்டு வரவும் இத்தருணத்தை எடுத்துக் கொள்கிறேன். இதனால், அக்காரியமானது, எந்தவொரு மனிதனுக்கென்றும் மதக் கோட்பாட்டுக்கெனவும் பிரத்தியேகமாக கையளிக்கப்பட்டவொன்றல்ல, தேவனுடைய வார்த்தையை நான் பார்க்கிறதின்படி அப்படியே அளிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வார்த்தையின் மேல் மிகவும் அருமையானதொரு ஆவியின் ஊற்றப்படுதல் உண்டாயிருந்தது. அவ்வாராதனை மிகவும் நீண்ட நேரத்திற்கு இருந்தது. அவ்வாறு மிகவும் அதிகமான நேரம் இருப்பதை நான் விரும்பாதவன். ஆயினும், அவ்வாறான ஆராதனைக்காக நாம் கடைசியாக எப்பொழுது கூடப் போகிறோமோ நமக்குத் தெரியாது. “தேவனுடைய ஆலோசனைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்கவில்லை...'' (அப். 20:26) என்று பவுல் கூறியது போல் நான் இருக்க விரும்புகிறேன். இயேசு தமது சீஷர்களிடத்தில் எதையும் சொல்லாமல் விட்டு வைக்கவில்லை என்று கூறினார். நேரமானது என்னவென்றும், நேரத்திற்குரிய செய்தியானது என்னவென்றும் அறிந்துகொள்ளும்படி நான் பரிசுத்தாவியின் அபிஷேகத்தின் கீழ் தங்கியிருக்க கவனமாயிருக்கையில், சில சமயங்களில், கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்ற முறையில் நான் செய்ய வேண்டிய சில கடமைகளைச் செய்வதற்காக, அதை விட்டு விட்டு வெளியே வரத் தவறி விடுகிறேன். ஆனால் எனக்கு அத்துறைகளில் உதவி செய்வதற்காக முயலும் பலர் உள்ளனர். அப்படிப்பட்ட எனது சக ஊழியக்கார சகோதரருக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 10நான் மக்களை அதிக நேரம் காக்க வைக்க விரும்பவில்லை. மக்கள் சபைக் கட்டிடத்தின் வாசல் நடைகளிலும், நர்சரிகளிலும், வெளியிலும், பஸ்களிலும், ட்ரெயிலர்களிலும் (ஒரு மோட்டார் வாகனத்தால் இழுத்துச் செல்லப்படும் அதின் துணை வண்டி - தமிழாக்கியோன்) மற்றும் மோட்டார் வாகனங்களிலும் வந்திருப்பதை நீங்கள் காணலாம். அதின் பிரச்சினை என்ன என்பதை நீங்கள் உணரலாம். ஒவ்வொரு ஆராதனைக்கும் அநேகர் வாகனங்களில் பல்வேறு இடங்களிலிருந்தும் வருகிறார்கள். ஆனால் அவர்களால் இங்கு உள்ளே வந்து அமர முடியவில்லை. மக்கள் சௌகரியமாக அமருவதற்காக இங்கே இன்னும் போதிய இடம் நமக்கு தேவையாயிருக்கிறது. அவ்வாறு மக்கள் செளகரியமாக அமர முடியுமானால், தங்களுடைய நோட்டுப் புத்தகங்களுடனும், வேதாகமத்தோடும், பென்சிலுடனும் இருந்து, நான் மிகவும் இன்றியமையாததாகக் கருதுகிற இச்செய்தியை கவனமாகக் கேட்க முடியும். அதைப் பற்றிய குறிப்புகளையும் எடுத்துக் கொள்ள முடியும். நாம் வாழும் இந்த நேரத்தைப் பற்றிய விஷயத்தை மீண்டும் பார்க்கலாம் என நான் எண்ணினேன். ஏனெனில் நீங்கள் சந்திக்கவிருப்பதான காரியங்களைப் பற்றிய காரியங்களை நீங்கள் அறிந்து கொள்வது உங்களுக்கு அவசியமாயிருக்கிறது. 11இன்றோ அல்லது இன்னொரு நாளோ, நானோ அல்லது இன்னொரு ஊழியக்காரரோ, இந்த நாளுக்கென்று உள்ள நான் விசுவாசிக்கிற செய்தியை அல்லாமல், நம்மைப் போல் மரித்துக் கொண்டிருக்கிற ஜனங்களுக்கு, இக்கடைசிக் காலத்தில் உங்களுக்குப் பிரியமானதாகக் காணப்படுகிற காரியம் என்னவென்று - அறிந்திருக்கிற வேறொரு செய்தியை அளித்தாலோ, அல்லது கூட்டத்தை கூட்டுவதற்கென்று ஒரு செய்தியை நான் அளித்தாலோ அது தேவனுடைய வார்த்தைக்கு எதிரானதாக இருக்கும். நானும் மாய்மாலக்காரனாயிருப்பேன். ஒரு கிறிஸ்தவ ஊழியக்காரன் இருக்க வேண்டிய நிலைக்கு ஏற்புடையதல்ல அக்காரியம். நான் இன்றோ அல்லது நாளையோ மரித்துவிட்டாலும், நான் அளிக்கும் செய்தியானது, உங்களுக்கு மிக இன்றியமையாத பயனுள்ளதாக இருக்கவும், அது உங்கள் உள்ளங்களில் நங்கூரமிடப்பட்டு, தொடர்ந்து முன்னேறி, நீங்கள் தேவனை சேவிக்கச் செய்யும் அளவுக்கு இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். 12இப்பொழுது, ஏதோ ஒரு காரியம் சம்பவிக்க ஆயத்தமாயிருக்கிறது என்கிற விஷயத்தை நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன், நான் அதை அறிவேன், நான் அரிசோனாவிற்கு புறப்பட்டுப் போகு முன்னர், தான் கண்ட ஒரு சொப்பனத்தைப் பற்றி கூறும்படி சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன் என்னிடம் வந்ததைப் பற்றி நீங்கள் யாவரும் நினைவில் வைத்துள்ளீர்கள். அது விசித்திரமான தொன்றாகும். அதை எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்துள்ளீர்கள்? கர்த்தர் அதற்கான அர்த்தத்தை நமக்கு கொடுத்தார், அச்சொப்பனமானது ஒவ்வொரு எழுத்தின்படியும் அப்படியே நிறைவேறிற்று. இப்பொழுது, அவர் வேறொரு சொப்பனமும் கண்டிருக்கிறார். இதில் வினோதமானது என்னவெனில், என்னைப் பற்றி ஒன்றும் அறியாததொரு மனிதர் ஒரிகனில் இருந்து அன்றொரு நாள் இங்கு வந்திருந்தார். சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன் கண்ட அதே சொப்பனத்தையே அவரும் கண்டு, அதை என்னிடம் கூறினார். அச்சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாது. அதற்காக நான் கர்த்தருக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது தேவனிடத்திலிருந்து வரும் காரியமாயிருக்கிறது என்று நான் அறிவேன். அதை நினைவில் கொள்ளுங்கள், அது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பதாக இருக்கிறது, தேவனிடத்திலிருந்து வருகிறதாயிருக்கிறது. அது என்னவென்று நான் அறியேன். அது உண்மையில் குறிப்பிடத் தக்கதாக, மிகவும் விசேஷித்ததாக இருக்கிறது. வெளிப்படையாக கூறுமிடத்து, அவ்விரு சொப்பனங்களைக் கண்ட அவ்விருவரில் ஒருவர் பாப்டிஸ்ட் அல்லது ப்ரெஸ்பிடேரியன் என நினைக்கிறேன். ஒரு வேளை அவர் இங்கு அமர்ந்திருக்கக் கூடும், அவரை நான் அறியமாட்டேன்; அன்றொரு நாள் அவர் இங்கு இருந்தார். ஆனால் அவர் தன் கண்களில் கண்ணீர் மல்க என்னிடம் அச்சொப்பனத்தை விவரித்தார். அது அவரை வெகுவாக அசைத்திருந்தது. அதை விவரிப்பதற்காகவே அவர் ஓரிகனிலிருந்து வந்திருந்தார். சகோதரன் ஜாக்ஸனும் இக்காலையில் அதே விதமான சொப்பனத்துடன் வந்தார். ஒரே விதமான சொப்பனத்தை இவர்கள் இருவரும் கண்டிருக்கின்றனர். இவ்விருவரும், ஒருவருக்கொருவர் ஆயிரக்கணக்கான மைல்கள் தூர வித்தியாசமான இடங்களில் வசிக்கின்றனர்; அவர்கள் ஒருவரையொருவர் முன்பின் அறிந்தவர்கள் அல்ல - பரிசுத்த ஆவியானவர் அச்சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்காமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார். அம்மனிதனுக்கு என்ன கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் நான் அறிவேன், தேவன் ஏதோ ஒரு காரியத்தைச் செய்யவிருக்கிறார்; அது நம் கண்களுக்கு முன்பாக மகத்துவமாக இருக்கும் என்பதே அது. 13இப்பொழுது இக்காலைக்கான செய்திக்காக, நான் கலாத்தியர் நிருபத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். இது ஞாயிறு பள்ளி பாடமாயிருக்கிறது. இப்பொழுது சுவரோரமாக நின்று கொண்டிருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர் எவரேனும், தங்களது இருக்கைகளை அவர்கள் உட்காரும்படி விட்டுக் கொடுக்க விரும்பினால், எனக்கு இடைஞ்சல் இல்லாதவாறு, பயபக்தியுடன், அமைதியாக அப்படிச் செய்து கொள்ளுங்கள். தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகள் அழுதால், அவைகளை பிள்ளைகளைக் கவனிப்பதற்கென ஆயத்தம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு (Nursery) கொண்டு போங்கள்; அதற்கு வசதியாக, அங்கு இருப்பவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்று உதவுங்கள். நாம் இப்பொழுது வாசிக்கப் போகிற வேத வாக்கியங்களைக் குறித்துக் கொள்ள ஆயத்தமாக உங்களது பென்சில், வேதாகமம் இவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ கட்டுண்டவர்கள் போல் நீங்கள் உணர நான் விரும்பவில்லை. உட்காரவும், வாசிக்கவும் சுதந்திரமாக நீங்கள் இருக்கும்படி நான் விரும்புகிறேன். நான் இக்காலையில், இத்தேசத்தினூடே, இந்த வேளைக்காக கர்த்தராகிய இயேசுவினால் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த செய்தியை விசுவாசிப்பவர்கள், இப்பொழுது என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை வேத வாக்கியங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளும்படி, பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களில் சிலர் அவற்றை ஒத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடும். 14கடந்த ஞாயிற்றுக்கிழமை, “கடைசி காலத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்” என்ற பொருளில் பேசினோம். (வால்யூம் 5 எண்: 3-தமிழாக்கியோன்) டேப்புகளில் செய்திகளைக் கேட்கும் வழக்கம் உடையவர்கள் அந்த செய்தி அடங்கிய ஒலிநாடாவை வாங்குவதற்கு கவனமாயிருங்கள். டேப்புகளை விற்க வேண்டும் என்று விரும்பி நான் அப்படிச் சொல்லவில்லை. அவ்விதமான எண்ணம் எனக்கில்லை, செய்தி எங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம்தான் உள்ளது. டேப்ரிக்கார்டர் உங்களிடத்திலிருந்தால் ஒரு கூட்டம் மக்களை உங்களிடத்தில் கூட்டிக் கொண்டு, செய்தி ஒலிநாடாவைப் போட்டு கவனமாக கேளுங்கள். ''அபிஷேம் பண்ணப்பட்டவர்கள். கடைசி நாட்களில் கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி இவ்வடையாளங்களைச் செய்வார்கள்... என்று வேதம் கூறுகிறது'' என்று மக்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். (மத்தேயு: 24-24 - தமிழாக்கியோன்) (அது சரியான வேத வாக்கியந்தான்). அப்படியெனில் அவ்வேத வாக்கியம் எங்கே பொருந்துகிறதாயிருக்கிறது? அதை சரியான முறையில் பொருத்த வேண்டும். இன்றிரவு, கர்த்தருக்குச் சித்தமானால், ''தமது சொந்த வார்த்தையில் தேவன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்'' என்ற பொருளில் பேச விரும்புகிறேன். எவ்வாறு கண்ணானது காது இருக்கும் இடத்தில் பொருத்தப்பட முடியாது என்பதைப் பற்றி பேசுவேன். முழு வேதாகமத்தையும் அச்சிடுவதும், வேதாகமம் முழுவதிலும் இயேசு கிறிஸ்து சித்தரிக்கப்படுவதுமான காரியம் அது. கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு நான் அதைப் பற்றி பேச விரும்புகிறேன். இப்பொழுது பேச இயலாவிடில், இன்னொரு தேதியிலாவது அதைப் பற்றி பேசுவேன். 15கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம் 4-ம் அதிகாரம் 1 முதல் 6-ம் வசனம் முடியவும், கலாத்தியர் 1-ம் அதிகாரம், 1 முதல் 4-ம் வசனம் முடியவும் உள்ள வேதவாக்கியங்களை நான் இப்பொழுது வாசிக்க விரும்புகிறேன். முதலாவதாக கலாத்தியர் 1:1-4. ''மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசு கிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும், (விரைவாக, இவ்விடத்தில் நிறுத்தி சொல்லப்பட்டுள்ளதை கவனியுங்கள். 'அப்போஸ்தலன்' என்றால் அனுப்பப்பட்டவன் அல்லது ''மிஷனரி'' என்று பொருள்.) என்னுடனே கூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின் படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்தார்“ (கலாத். 1:1-4). 16இப்பொழுது, 2 கொரிந்தியர் 4-ம் அதிகாரம் 1 முதல் 6-ம் வசனங்கள் முடிய வாசிப்போமாக. இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை. வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப் பண்ணுகிறோம், எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். (இவ்வசனம் முன்குறித்தலைப் பற்றியே பேசுகிறதேயல்லாமல் வேறல்ல.) தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (ஏதேன் தோட்டத்தில் அவர்கள் ஜீவ விருட்சத்தைத் தொடாதபடி அவர்கள் துரத்தப்பட்டது போல்). நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ, இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம். இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப் பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்“ கொரி. 4:1-6. 17(ஆமென்! வேத வசனம் இவ்வாறு கூறுகிறது). இப்பொழுது இக்காலையில், நான் பேச எடுத்துக் கொள்ளும் பொருளானது, ''இப்பொல்லாத காலத்தின் தேவன்“ என்பதாகும். நாம் வேதவாக்கியங்களில் வாசித்த வண்ணமாக, இப்பிரபஞ்சத்தின் தேவன்'', ”இப்பொல்லாத காலத்தின் தேவன்''... இப்பொழுது இந்த செய்தியானது இப்பொல்லாத காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்திற்குச் சரியாக பொருந்தி, இப்பொல்லாத காலத்தின் தீமைகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. அந்தந்த காலத்தில் வாழும் விசுவாசிக்கென வேதாகமமானது, வேதத்தில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு காலத்திற்கும் உரிய, ஒவ்வொரு பதிலையும் உடையதாக இருக்கிறது என்பது எனது நம்பிக்கையாகும். இவ்வேதாகமத்தில் நமக்கு அத்தியாவசியமான காரியங்கள் யாவும் எழுதப்பட்டுள்ளன என நான் விசுவாசிக்கிறேன்; அவை பரிசுத்தாவியானவரால் வியாக்கியானப்படுத்தப் பட வேண்டியுள்ளன. தேவ வார்த்தைக்கு இப்பூமியில் உள்ள எந்தவொரு மனிதனும் தனது சொந்த வியாக்கியானத்தை கொடுக்க உரிமை இருக்கிறது என்று நான் நம்பவில்லை. தேவன் தமது சொந்த வார்த்தையை வியாக்கியானிப்பதற்கு, அவருக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. அவரே அவரது வார்த்தைக்கு வியாக்கியானியாயிருக்கிறார். அவர் தாம் அதைச் செய்வேன் என்றுரைத்திருக்கிறார், அவர் அதைச் செய்கிறார். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி... என்ற வார்த்தைகளை தேவன் ஒரு தீர்க்கதரிசியின் உதடுகள் மூலம் விளம்பினார். அவ்வாறே ஒரு கன்னிகை கர்ப்பவதியானாள்”! அவ்வசனத்தை யாரும் வியாக்கியானிக்க வேண்டியிருக்கவில்லை. இதைப் பற்றி நான் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு ஆதியிலே, “வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்று தேவன் உரைத்தபொழுது, வெளிச்சம் உண்டாயிற்று! அதை ஒருவரும் வியாக்கியானிக்க வேண்டியிருக்கவில்லை. கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் அவர் தமது ஆவியை ஊற்றுவார் என்றுரைத்தபடி அவர் ஊற்றினார். அதற்கு எந்தவொரு வியாக்கியானமும் தேவையில்லை. கடைசி நாட்களில் இன்னின்ன காரியங்கள் சம்பவிக்கும் என்று தேவன் முன்னுரைத்துள்ளவை அப்படியே சம்பவிக்க நாம் காண்கிறோம். அதற்கு எந்த வித வியாக்கியானமும் தேவையில்லை. அது ஏற்கனவே வியாக்கியானிக்கப்பட்டுவிட்டது. பார்த்தீர்களா? 18இப்பொழுது நாம் வாழ்கிற இந்தப் பொல்லாத காலத்தின் தேவனைப் பற்றி, வார்த்தையிலிருந்து நாம் படிக்கையில், மிகவும் கவனமாக கவனியுங்கள். கிருபையின் காலத்தில், தேவன் தமக்கென ஒரு மணவாட்டியை, ஒரு ஜனத்தை தமது நாமத்திற்காக தெரிந்தெடுக்கையில், இக்காலமானது, “பொல்லாத காலம்” என்று அழைக்கப்படுவது மிகவும் விசித்திரமாகத் தோன்றலாம். தேவன் கிருபையினால் தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை அழைப்பிக்கும் அதே காலமானது, பொல்லாத காலம் என அழைக்கப்படுகிறது. 'பொல்லாத காலம்' என்று தேவனால் சொல்லப்பட்டது இக்காலம் தான் என்பதை வேதத்தைக் கொண்டு இப்பொழுது நிரூபிப்போம். 'பொல்லாத காலம்' என அழைக்கப்பட்டுள்ள இப்படிப்பட்ட காலத்திலிருந்து தேவன் தமது மணவாட்டியை அழைப்பார் என்கிற காரியத்தை எண்ணிப் பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமாகத் தான் இருக்கிறது. 'ஒரு ஜனத்தை' என்று தான் அவர் கூறியிருக்கிறார். ஒரு சபையை அல்ல. ஏன்? அது சபை என்றழைக்கப்பட்ட போதிலும் அவர் ஒரு ஜனத்தைத்தான் அழைப்பார். ஒரு சபை என்னப்படுவது, பல்வேறு அமைப்புகளாக உள்ள அநேக மக்களின் கூடிவருதல் தான். ஆனால், தேவன் ஒரு ஜனத்தைத்தான் அழைக்கிறார். அவர் ''நான் மெத்தோடிஸ்ட்டுகள், பாப்டிஸ்ட்டுகள், பெந்தெகொஸ்தேயினர் ஆகியவர்களை அழைப்பேன்“ என்று சொல்லவில்லை. ”ஒரு ஜனத்தை அழைப்பேன்'' என்றது எதற்காக? அவரது நாமத்திற்காக. ஒரு ஜனம். மெதோடிஸ்டிலிருந்தும், பாப்டிஸ்டிலிருந்தும், லூத்தரனிலிருந்தும், கத்தோலிக்கரிலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட ஒரே ஜனம். ஆனால் அவர் ஒரு சபைக் குழுவை அழைக்கவில்லை; அவரது நாமத்தை ஏற்றுக் கொள்கிறவர்களும், அவரது நாமத்தில் ஈடுபட்டிருக்கிறவர்களும், அவரோடு விவாகம் செய்து கொண்டு, முன்குறித்தலினாலே அவருடைய ஒரு பாகமாக ஆகப்போகிறவர்களுமாகிய ஒரே ஜனத்தையே அவர் அழைக்கிறார். எவ்வாறு ஒரு புருஷன் தனது சரீரத்தின் ஒரு பாகமாக இருப்பதற்கு குறிக்கப்பட்ட சரியான மனைவியைத் தெரிந்து கொள்வதைப் போல் அது இருக்கிறது. அச்சரீரத்தின் ஒரு பாகமாக இருக்கும்படி ஆதிமுதற்கொண்டு தேவனால் முன் குறிக்கப்பட்டு இப்பொழுதும் எப்பொழுதும் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருப்பவர்களே அந்த ஒரே ஜனம் ஆகும். பார்த்தீர்களா? வேத வாக்கியங்கள் எத்தனை ஐசுவரியமாயும், தேனைப்போல மதுரமுள்ளதாயும் இருக்கிறது! 19எவரோ ஒருவர் கூறியதாகவோ, அழைத்ததாகவோ அல்ல, கவனியுங்கள். ஆனால், தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னர் தெரிந்தெடுத்ததாகும் அது; அந்த ஜனங்களை தேவன் இக்கடைசி நாட்களில் அழைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மத ஸ்தாபனத்தை அல்ல, தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தையே அவர் அழைக்கிறார். தேவன் இதைச் செய்கையில், இக்காலமானது பொல்லாத வஞ்சக காலமாயிருக்கிறது. கடந்த வாரத்தில் மத்தேயு: 24ம் அதிகாரத்திலிருந்து, எல்லாக் காலங்களிலும் இக்காலமே மிகவும் வஞ்சிக்கும் காலம் என்பதைப் பார்த்தோம். வஞ்சகக் காலங்களில், ஏதேன் தோட்டத்தின் காலத்திலிருந்து தொடங்கி பார்க்கையில், இக்காலத்தைப் போல் கொடிய வஞ்சகக் காலம் எதுவுமில்லை. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாக கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்வார்கள். அவைகள், வெறும் குளிர்ந்து போயுள்ள சம்பிரதாயமான, வெளியாசாரமான, மனிதனால் உண்டாக்கப்பட்ட சமயாச்சாரக் கோட்பாடுகளையுடைய (Theology) சபைகளாகும்! அவைகளுக்கு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தமாட்டார்கள். ஆனால் அவைகளோ சற்றேறக்குறைய அசலான அந்த ஒன்றைப் போலவே காணப்படுகிறது. ஒரு வசனத்தை விட்டுவிட்டாலும், அப்படிப்பட்ட தொரு நிலையை நீங்கள் அடைந்துவிடுவீர்கள். இக்காலத்தைப் பற்றி மகத்தானதொரு வேளை வாக்குரைக்கப்பட்டிருக்கிறது. எங்குமுள்ள கிறிஸ்தவரே! நாம் வாழும் இக்காலத்தைப் பற்றி கவனத்தில் கொள்ளுங்கள். இதைக் குறித்துக் கொண்டு வாசித்து, கவனமாக செவிகொடுங்கள். 20தமது நாமத்திற்காக தேவன் ஒரு ஜனத்தை அழைப்பதின் காரியமானது என்ன? அவரது மணவாட்டியை பரீட்சிப்பது என்பது தான் அதன் காரணம் ஆகும். அவள் தோன்றச் செய்யப்படும்பொழுது, அவள் பரீட்சிக்கப்பட்டு சாத்தானுக்கு முன்பாக மெய்ப்பிக்கப்படுகிறாள் (அல்லது நிரூபிக்கப்படுகிறாள் - தமிழாக்கியோன்). ஆதியில் நடைபெற்றது போல் முடிவிலும் இருக்கும். ஒரு வித்தானது பூமியில் விதைக்கப்பட்டு பூமியிலிருந்து முளைக்க ஆரம்பிக்கும், அதிலுள்ள ஜீவனானது தண்டு, இலை இவற்றால் சுமந்து மேலே கொண்டு வரப்பட்டு, முடிவில், அதே விதையின், அதாவது முதலில் பூமியில் போடப்பட்ட விதையைப் போல, தோற்றத்தைப் பெற்று முடிவடைகிறது. அவ்வாறே, ஏதேன் தோட்டத்தில் வஞ்சகத்தின் விதையானது விழுந்து, இக்கடைசி நாட்களிலும் அவ்வாறே முடிவுறுகிறது. சுவிசேஷமானது எவ்வாறு ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் ஒரு மதஸ்தாபனத்தில் விழுந்து, முடிவில் ஒரு பிரம்மாண்டமான மதஸ்தாபனத்தில் முடிவுறுகிறதோ அதைப் போல் இருக்கிறது. சபையின் வித்தானது ஆதியில் அற்புத அடையாளங்களோடு விழுந்து, கிறிஸ்து அவர்களுக்குள் ஜீவித்து இருக்க, முடிவிலும் அவ்வாறே, மல்கியா: 4-ம் அதிகாரத்தின் ஊழியத்தோடு, ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசம் திரும்ப கிடைக்கப்பெற்ற நிலையில் அது முடிவுறுகிறது. 21மணவாட்டியானவள் ஏவாளைப் போன்ற ஸ்திரீ அல்ல என்பதை சாத்தானுக்கு ருசுப்படுத்துவதற்காகவே இப்பொல்லாத காலம் இருக்கிறது என்று நாம் இப்பொழுது காண்கிறோம். ஆதாமின் மணவாட்டியானவள் (ஏவாள்) வார்த்தையினால் பரீட்சிக்கப்பட்டது போலவே, அவருடைய மணவாட்டியும் அவருடைய வார்த்தையினால் பரீட்சிக்கப்படுவாள். ஆதாமின் மணவாட்டியானவள் வார்த்தையின் எல்லாவற்றையும் விசுவாசித்தாள். ஆனால் ஒரேயொரு வாக்குத்தத்தத்தின் பேரில் குழம்பி, முகமுகமாக சத்துருவின் சோதனையின் கீழ் விழுந்து போனாள். இப்பொழுது, அவருடைய நாமத்திற்காக அழைக்கப்பட்ட ஜனங்கள் தான் மணவாட்டியானவர்கள். அவள் தானே, வெறும் மத ஸ்தாபனக் கொள்கைகளினால் அல்ல; தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் மீண்டும் ஒன்றிப்படைய வேண்டியவளாக இருக்கிறாள். வேதத்தின் ஆதியில், பிழைக்கும்படியாக, மனிதனுக்கு தேவனுடைய வார்த்தை கொடுக்கப்பட்டது. சர்ப்பம் என்றழைக்கப்பட்ட ஒரு மிருகத்தில் இருந்த நபராகிய (அல்லது ஆள் - தமிழாக்கியோன்) சாத்தான் என்றழைக்கப்பட்ட மனிதன், ஒரு வார்த்தையை தவறாக வியாக்கியானித்தான். இந்த மிருகத்துக்குள் இருந்த சாத்தானால் ஏவாளிடத்தில் பேச முடிந்தது; அவன் அவளுக்கு வார்த்தைக்கு தவறான அர்த்தம் கற்பித்து, அதன் விளைவாக அவள் இழந்து போகப்பட்டாள். பார்த்தீர்களா? அது ஒவ்வொரு வார்த்தையுமாக இருக்கிறது. 22வேதத்தின் மத்தியில், இயேசுவானவர் வந்து, அவர் சாத்தானால் சோதிக்கப்படுகையில், ''மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்“ என்று கூறினார். இப்பொழுது இக்கடைசி நாட்களில், தேவனானவர் நமக்கு கூறுவது யாதெனில்; இப்பிரபஞ்சத்தின் தேவன் கடைசி நாட்களில் எழும்புவானென்றும், எவரொருவர் தேவனுடைய வார்த்தையோடு ஒன்றைக் கூட்டினாலும், அல்லது அதிலிருந்து ஒரு வசனத்தை நீக்கிப் போட்டாலும், அவனுடைய பங்கை ஜீவ புஸ்தகத்திலிருந்து தேவன் எடுத்துப் போடுவார் என்பதே. தேவன் நம்மிடம் இரக்கமாயிருப்பாராக. இணங்காத் தன்மையுள்ளவர்களாகவோ, அல்லது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு எல்லாம் அறிந்தவர்கள்போல் வணங்காமுடிகளாகவோ நடக்காமல், நாமுங்கூட ஒரு காலத்தில் கீழ்ப்படியாமையில் கிடந்தோம் என்று அறிந்தவர்களாக நடப்போமாக. நாம் கிருபையோடும், இரக்கத்தோடும், தேவனைப் பற்றிய உணர்வை இருதயத்தில் கொண்டவர்களாக, கிருபாசனத்தண்டையில் தாழ்மையோடு வருவோமாக. 1900 ஆண்டுகள் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு வந்த பிறகும் கூட, இப்பொழுது உள்ள இந்த உலக அமைப்பு, ஆண்டவர் இவ்வுலகத்தில் இருந்த நாட்களைவிட பொல்லாங்கானதாக இருப்பது விசித்திரமாகத்தான் இருக்கிறது. இவ்வுலக அமைப்பானது மிகவும் பொல்லாததாயிருக்கிறது. உலகமானது ஒரு பெரிய உச்ச கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் அதை அறிவீர்கள். எல்லாப் பட்சத்திலும் தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். 23நேற்றைய தினம், நான், எனது மனைவி, திருமதி உட், சகோ. ராய் ராபர்சன், சகோ. உட் வந்து கொண்டிருக்கையில், அந்த யங்ஸ்டவுன் ஷாப்பிங் சென்டர் என்ற நிறுவனத்தில் நிறுத்தி, அங்கு சகோதரி உட்டுக்காக ஒரு பொருளை வாங்க நுழைந்தோம். அவ்வாறு அதற்காக நாங்கள் அங்கு நின்று கொண்டிருக்கையில், அங்கே எனக்கு புதியவனாக இருந்த ஒரு வாலிபன் தன்னை எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான். இன்னொருவனும் அங்கே வந்து, தாங்களிருவரும் ஜியார்ஜியாவிலிருந்து வருவதாகக் கூறினான். ஏனெனில் நான் அவர்களிடம், நமது சகோதரன் வெல்ஷ், ஈவான்ஸ்-ஐ தெரியுமா எனக் கேட்டிருந்தேன். சில நிமிட நேரங்கள் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நான் புறப்படுவதற்கு இருந்தபோது, முதலாவதாக பேசிய அந்த இளைஞன் என்னை உற்று நோக்கினான். மற்ற இளைஞனும் அவனுடைய சிறு பையனும் அங்கிருந்து நடந்து போய்விட்ட பிறகு, இந்த இளைஞன் என்னிடம், “ஒரு காரியம் நான் கூற விரும்புகிறேன்” என்றான். ''நீ ஒரு விசுவாசியா, நீ ஒரு கிறிஸ்தவனா'' என்று நான் வினவினேன். அவன், “இல்லை, ஐயா” என்று பதிலுரைத்தான். 24அவன் உரைத்த அதே வார்த்தையை நான் இங்கே மேற்கோள் காட்டக் கூடாது, ஆனால் அவன் சற்று அவிசுவாசமுள்ளவனாயிருந்தான். கர்த்தருடைய தூதன் தோன்றுவதான காரியத்தைப் பற்றி அவனிடம் கேட்டேன். அவன் அதைப் பற்றி கேள்விப்பட்டதாகக் கூறினான். ஆனால் அவன் இந்த சபைக்கு ஒருபோதும் வந்தவனல்ல. ''நீ அதை விசுவாசிக்கிறாயா?'' என்று கேட்டேன். “ஆம் ஐயா, நான் சில காரியங்களை கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். மக்கள் என்னிடம் இந்த முன்னுரைத்தல்களைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஒலிநாடாவில் நீங்கள், எவ்வாறு கலிபோர்னியா பிளவுண்டுபோகும் என்று முன்னுரைத்ததையும் கேட்டிருக்கிறேன்'' என்று அவன் கூறினான். அவன் மேலும், ''பத்திரிக்கையில் அதைப் பற்றிய செய்தியை பார்த்த போது, நான் அதை விசுவாசித்தேன், இன்று அல்லது நாளை (அது இன்றைய தினமாகும்). நான் முதன்முறையாக சபைக்கு வருவேன்'' என்று கூறினான். நான், “கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, மகனே'' என்று கூறிவிட்டு அவன் கையைக் குலுக்க ஆரம்பித்தேன். அவன், ''ஆனால் நான் ஒரு காரியம் உங்களிடம் கூற விரும்புகிறேன், ஐயா! நான் எந்த அளவு இழந்து போகப்பட வேண்டுமோ அந்தளவுக்கு இழந்து போகப்பட்டுள்ளேன். மணல் குவியலில் புதையுண்டு போன ஒரு நாணயத்தைப் போல் நான் காணாமற் போய்விட்டேன்'' என்று கூறினான். “நீ அதிலேயே நிலைத்திருக்க வேண்டியதில்லை! இப்பொழுது இங்கே, நீ கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆயத்தமாகும் அதே நிமிடத்தில் காணாமற்போன உன்னை கண்டு பிடிக்க ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்” என்று நான் கூறினேன். அவன், ''நான் ஆயத்தமாயிருக்கிறேன்'' என்று கூறினான். ''நீ தலை வணங்குவாயா?'' என்று நான் கேட்டேன். அவன் அதற்கு, ''நான் வெட்கப்படவில்லை'' என்று கூறினான். அது மாத்திரமல்ல, ஊர்திகள் நிறுத்துவதற்காக உள்ள அவ்விடத்திலேயே, மக்களெல்லாருக்கும் முன்பாக அவன் முழங்கால்படியிட்டான். ஜனங்கள் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்; அங்கே நாங்கள் அவன் தன் இருதயத்தை தேவனுக்கு கொடுக்கும் வரையிலும், அவனோடு சேர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தோம். பாவியாக வந்த அவன், தேவ பிள்ளையாக திரும்பிச் சென்றான். ஊர்தியின் அருகில் செத்தவனாக அவன். உயிரடைந்தவனாக எழும்பிச் சென்றான். “நாளைக்கு ஞானஸ்நானத் தொட்டி திறந்திருக்கும்'' என்று நான் கூறினேன். ''இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவதோஷ குற்றமும் நிர்மூலமாகுமே'' “நான், ''எழுந்திருந்து, கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக் கூறி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள். தேவன் உன்னை பரிசுத்த ஆவியால் நிரப்பி, நீ காணத்தக்க வண்ணம் இம்மகத்தான காரியங்களை உனக்குத் தந்தருளுவார்'' என்று கூறினேன். 25உலகமானது ஒரு உச்சகட்டத்தை நோக்கிப் போய்க் கொண் டிருக்கிறது. ஏன்? சட்டவிரோதமான காரியம், ஒழுக்கக்கேடு, விஞ்ஞான பூர்வமான மார்க்கம் இவற்றின் ஆவியானது உலகை, வேதம் கூறுகிறபடி, அசுத்தமும், அருவருப்புமுள்ள கூடாக ஆக்கியிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 18-ம் அதிகாரத்தில் 1 முதல் 5 முடிய உள்ள வசனங்களை வாசிப்போமாக. இந்த விஷயத்திற்கு வரும்போது இவ்வசனங்கள் கிடைத்தன. நான் சரியாகத் தான் குறித்திருக்கிறேன் என எண்ணுகிறேன். இவைகளுக்குப் பின்பு, வேறொருதன் மிகுந்த அதிகார முடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. அவன் பலத்த சத்தமிட்டு; (சொப்பனங்களைக் கண்டவர்களே! இப்பொழுது...) மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. அவளுடைய (சபை) வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள். பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம் பண்ணினார்கள். பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச் செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டுவெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது. அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவு கூர்ந்தார் வெளி. 18:1-5. 26என்னே இவ்வெச்சரிக்கை! அது சபையை சரியாக மீண்டும் வெளிப்படுத்தின விசேஷம் 3:14-க்கு லவோதிக்கேயா காலத்திற்கு கொண்டு போகிறது. அது அநீதியான நிலையில் இருக்கிறது. அது உண்மையாக பக்திமார்க்கத்திலமைந்தது போல் இருந்தாலும், அநீதியானதுதான். “...நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப் படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிற படியால் (வெளி. 3:17). இது சரியாக இக்காலத்திற்கு மட்டுமே பொருந்துகிறதான வேத வாக்கியமாயிருக்கிறது! தானியேலின் காலத்திற்குரியதல்ல, அல்லது, நோவாவின் காலத்திற்குட்பட்டவர்களுக்குரியதல்ல இவ்வசனம். ஆனால் இந்த வசனம் கடைசியான பொல்லாத காலத்திற்குரியதாகும். இங்கு கவனியுங்கள். 'நீ நிர்வாணி' என்ற அந்த வார்த்தை நன்கு ஆழமாக பதியட்டும். இத்தீய காலத்தில் அரைகுறையாக உடுத்திக்கொண்டு அலையும் பெண்களின் முன்னால், எந்த ஒரு கிறிஸ்தவனும் தன் வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது, எதிர்ப்படாமல் இருப்பது கடினமான காரியமாயிருக்கிறது. இந்த என் கருத்தை அநேகர் ஆமோதிக்காமல் இருக்கக் கூடும் என நினைக்கிறேன். 27ஸ்திரீகளே , நான் உங்களுக்குச் சொல்லப் போவதை நீங்கள் சற்று கவனமாகக் கேளுங்கள். புருஷர்களே ஸ்திரீகளே நான் சொல்லப்போவதோடு நீங்கள் ஒத்த கருத்து உடையவர்களாக இல்லாமலிருக்கலாம். ஆனால் இதைச் சொல்ல நான் நடத்தப்படுகிறேன். அவ்விதமாக ஒழுங்காக ஆடையணியாத எந்த ஒரு பெண்ணும் தனது சுவாதீன புத்தியோடு இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அவள் அதை விசுவாசிக்கிறாளோ இல்லையோ, அல்லது அதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறாளோ இல்லையோ, அவள் ஒரு வேசிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அரைகுறையாக உடை உடுத்தும் ஒரு பெண்மணி, தன் கையை தேவனுக்கு நேராக ஏறெடுத்து, தன் கணவனைத் தவிர வேறு எந்த மனிதனாலும் தீண்டப்படவில்லை என்று ஆணையிட்ட போதிலும், அது நேர்மையான உண்மையாக இருந்தாலும் கூட, அவளுடைய அலங்கோல ஆடையணிதல் அவளை வேசி என்ற நிலையில்தான் வைக்கும், இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற! எவனும், அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று...'' என்று கூறினார், அவள் ஒரு வேளை... பாருங்கள், அவள் நிர்வாணி என்றும், ஆனால் அவள் அதை அறியாள் என்றும் வேதம் கூறுகிறது. அவ்வாறான காரியங்களைச் செய்யும்படி அவளை நிரப்புகிறதான ஆவியானது பொல்லாத, விபச்சார ஆவியாயிருக்கிறது. அவள் புறம்பாக, சரீரத்திலும், மாம்சத்திலும் சுத்தமாக இருக்கக் கூடும். அவள் விபச்சாரம் செய்யாதிருந்திருக்கக் கூடும்; மேலும் தேவனுக்கு முன்பாக அதைப் பற்றி தன் மனவுண்மையைக் குறித்து ஆணையிடவும் கூடும், அதெல்லாம் உண்மையாக இருந்தாலுமே, அவளது ஆபாச ஆடை அணிந்து கொள்ளுதலானது, அவளுக்குள் உள்ள வேசித்தன ஆவியை வெளிக்காட்டுகிறதாயிருக்கிறது. நவீன நாகரிக உலகின் தேவனானவனால் அவள் குருடாக்கப்பட்டு, அதினிமித்தம் அவள் தன்னை பால் உணர்வைத் தூண்டும் விதமாக உடுத்துவித்துக் கொள்ளச் செய்து இருக்கிறது. 28அன்றொரு நாள், நானும் சகோதரன் உட்டும், நதியில் படகில் சிறிது நேரம் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்தோம். நதியண்டையில், 'கினிஸ்' (Kinis) என்ற ஒரு வகையான அரை குறையாடை (இரு சிறு துணித் துண்டுகளால் தைக்கப்பட்ட ஒருவகை குளியல் ஆடை அணிந்து கொண்டு பெண்கள் அங்கு வந்தார்கள். இவ்வாறு அவர்கள் எங்கும் வருவதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அது மிகவும் அவமானகரமானதொன்றாகும். நல்ல புத்தி சுவாதீனத்தில் உள்ள எந்தவொரு ஸ்திரீயும் அவ்வாறு உடுத்திக் கொள்ள முடியாது. அவ்வாறு ஒரு பெண் உடுத்திக் கொள்வதின் காரணம் அவள் ஒரு வேசித்தன ஆவியால் நிரப்பப்பட்டிருப்பதேயாகும். இப்பொழுது ஸ்திரீயே, அவைகளை நீ தேவனோடு சரி செய்து ஒப்புரவாகிக் கொள். ஏனெனில், ஒரு நாளில், நீ அது சத்தியம் என்பதை கண்டு கொள்வாய். ஸ்திரீயே உங்களது சரீரமானது எவ்வளவு பரிசுத்தமானது என்று அறிந்தும், இந்நாளில் தெருக்களில் நடந்து செல்லும் இச்சையும் பாவமும் நிறைந்த பிசாசுகளின் முன்னால், உங்களது சரீரத்தைக் காண்பிக்கக் கூடுமோ? தேவ புத்திரர்களெல்லாம் இன்னும் தேவ புத்திரராக இருப்பார்களேயானால், உங்கள் கணவரும் தேவ புத்திரராக இருப்பாரானால், உங்களை சரியான ஆடை அணிந்து கொள்ளச் செய்வார்; அல்லது உங்களை விட்டு விலகிவிடுவார். ஒரு புருஷன் தேவ புத்திரனாக இருப்பானேயானால், அவன் ஒருபொழுதும் இப்படிப்பட்டதான பெண்ணை மணக்கமாட்டான். நீங்கள் எப்படிச் சொன்னாலும், நான் சத்தியத்தையே கூறுகிறேன். ஒரு நாள் சத்தியத்தை நீங்கள் சந்திப்பீர்கள். நிர்வாணியும் விபச்சாரமும் உள்ளவர்கள், ஆனால் அதை அறியாதவர்கள். “ஓ எனது கணவனுக்கு நான் கொடுத்த ஆணையை நான் ஒருபொழுதும் மீறினதில்லை'' என்று நீங்கள் கூறலாம். நீங்கள் அதைச் செய்வது, அல்லது செய்யாததைக் குறித்து உங்கள் கணவனே நிதானிப்பான். ஆனால் தேவனோ, உங்களை, உங்களது சரீரத்தின்படியல்ல, உங்கள் உள்ளான மனிதனில் எந்தவிதமான ஆவியைப் பெற்றிருக்கிறீர்களோ, அதைப் பொறுத்தே நியாயந்தீர்ப்பார். 29சரீரத்தில் உள்ள புறம்பான மனிதன் தனது ஆறு அல்லது ஐம்புலன்களினால் கட்டுப்படுத்தப்படுகிறான். உள்ளான மனிதன் ஒரு ஆவி மனிதனாகும். அவனும் ஐம்புலன்களினாலும், மனச்சாட்சி, மற்றும் அன்பு இவைகளினால் ஆட்கொள்ளப்படுகிறான். புறம்பான மனிதன், பார்த்தல், கேட்டல், உணர்தல், நுகர்தல், ருசித்தல் இவைகளைச் செய்கிறான். ஆனால் அந்த ஆவியின் உள்ளே ஒரு ஆத்துமா இருக்கிறது. அதுதானே உங்களது சுதந்தரமான சித்தத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது . பிசாசு சொல்வதை நீங்கள் ஒருவேளை ஏற்றுக் கொள்ளவோ, அல்லது தேவன் சொல்வதை ஒருவேளை ஏற்றுக் கொள்ளவோ செய்யலாம். இரண்டில் எதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ, அது நீங்கள் எப்படிப்பட்ட ஆவியைப் பெற்றுள்ளீர்கள் என்பதைத் தீர்மானிக்கும். அது தேவ ஆவியாக இருக்குமென்றால், அது ஒருபோதும், தேவனுடைய காரியங்களினாலேயன்றி, உலகத்தின் காரியங்களினால் போஷிக்கப்படமாட்டாது. ''நீங்கள் உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்கள் உள்பாகத்தில் பிரவேசிக்கவில்லை'' என இயேசு கூறியுள்ளார். (1 யோவான் 2:15). சாத்தான் உங்களை வஞ்சித்திருக்கிறான். “மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.'' கவனியுங்கள். இப்பொழுது, அவள் நிர்வாணியும், காம் விகாரமுள்ளவளுமாயிருக்கிறாள் என்று நாம் பார்த்தோம். 30முன்னெப்பொழுதைப் பார்க்கிலும், இப்பொழுது உலகமானது மிக மோசமான அளவுக்கு பொல்லாததாயிருக்கிறது. ஜலப்பிரளயக் காலத்திற்கு சற்று முன்பு உள்ள காலத்தில் தவிர வேறு, எந்தக் காலத்திலும், இந்தக் காலத்தைப் போல் பெண்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளவில்லை. இயேசு அதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். சற்றுப் பொறுத்து நாம் அதைப் பற்றி கவனிப்போம். நான் வியப்பது என்னவெனில், தேவன் தமது ஆதிக்கத்தை இழந்துவிட்டாரா? அல்லது இன்னொரு பிரதிநிதியிடம் ஆதிக்கம் செய்யும்படி ஒப்படைத்துவிட்டாரா? என்பதே. இக்கேள்விக்கு உரிய பதில், என் கருத்துப்படி, இரண்டு எதிரெதிரான ஆவிகள் இன்றைய உலகில் கிரியையில் இருந்து கொண்டிருக்கின்றன. இரண்டு தலைமைகளுக்கு மேலாக கூடுதல் தலைமைகள் இப்பொழுது இருக்க முடியாது. அதில் ஒருவர், கிரியையில் ஈடுபட்டுள்ள பரிசுத்தாவியானவர்; இன்னொருவன், பிசாசின் ஆவியாகும், அது இக்கடைசி நாட்களில் வஞ்சகமாயிருக்கிறது. இப்பொழுது நான் எடுத்துக் கொண்டுள்ள பொருளுக்கு இக்கருத்துக்களை ஆதாரப்படுத்தி இனியுள்ள செய்திக்கு உபயோகிக்கப் போகிறேன். 31இரு ஆவிகளில், ஒன்று தேவனுடைய பரிசுத்த ஆவி, மற்றொன்று வஞ்சகமாக கிரியை செய்யும் பிசாசின் ஆவியாகும். பூமியின் குடிகள் இப்பொழுது தங்களுக்கு விருப்பமானவற்றை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். பரிசுத்தாவியானவர் கிறிஸ்துவுக்கென்று ஒரு மணவாட்டியை அழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மணவாட்டிக்கு இக்காலத்திற்குரிய அவருடைய வாக்குத்தத்த வார்த்தையை உறுதிப்படுத்தி, அது கிறிஸ்து எனக் காண்பித்து கிரியை செய்து கொண்டிருக்கிறார். இக்காலத்தில் விரலானது அசைய வேண்டுமென்றிருக்குமானால், விரல்தான் அசையும். பாதம் தான் இக்காலத்தில் அசைய வேண்டுமென்று இருக்குமானால், பாதமே கிரியை செய்யும். கண்ணானது இக்காலத்தில் காண வேண்டியுள்ளது என இருக்குமானால், அதன்படி கண் பார்க்கும். தேவனுடைய ஆவியானவர், தேவனுடைய பூரண நியமத்திற்குள்ளான வளர்ச்சியை அதற்குள் ஏற்படுத்தியிருக்கிறார். நாம் வாழும் இக்காலத்தில், இந்த வேளைக்கான செய்தியை பரிசுத்தாவியானவர் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் விசுவாசிக்கும் மக்களை இப்பாழ்க்கடிப்பிலிருந்து விடுவிக்கும்படி இவ்வாறு கிரியை செய்துக் கொண்டிருக்கிறார். பிசாசின் அசுத்தமான ஆவியானது, அது ஆதியில் செய்தது போலவே, வழக்கம் போல், வேதவசனத்தைப் புரட்டுவதின் மூலம், பிழையின் மூலம் தனது சபையை அழைத்துக் கொண்டிருக்கிறது. வித்தின் காலத்தில் மீண்டும் அவன் வந்திக்கிறதைப் பாருங்கள். ஏதேனில் இருந்து, இப்பொழுது இங்கே மீண்டும்! அது வந்திருக்கிறது. 32கடந்து போன காலங்களில் நீங்கள் பலவிதமான ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். மத ஸ்தாபனங்களாகிய தண்டுப்பகுதி, தாள் பகுதியானது என்னவாயிற்று? அது உலர்ந்து போகிறது. ஆவியானவர் அதைவிட்டு தொடர்ந்து விலகிச் சென்றார். இறுதியாக உச்சியில் வித்து என்னும் கட்டத்தில் அது முடிவடைகிறது. இருவரின் சோதனையிலும், ஆரம்பத்தில் எப்படியிருந்ததோ, அவ்வாறே இப்பொழுதும் நிகழ்கிறது என்பதை நீங்கள் பாருங்கள். அதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். கவனியுங்கள். 1யோவான் 4-ல் யோவான் கூறுகிறபடி, இவ்வசனத்தை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! ''...வஞ்சக ஆவி...''. ஏவாள் வெறுமனே வெளியே நடந்து போய், மனப்பூர்வமாக, “நான் தேவனில் விசுவாசம் கொள்ளவில்லை'' என்று சொல்லிவிடவில்லை, இல்லை. அவள் ஒரு வஞ்சகத்தை விசுவாசித்தாள். சாத்தானும் “ஓ, நல்லது, அது தேவனுடைய வார்த்தையே அல்ல'' என்று கூறவில்லை. அது தேவனுடைய வார்த்தைதான் என்பதை அவன் ஒப்புக் கொண்டான். ஆனால், அதற்கு தன்னுடைய சொந்த வியாக்கியானத்தைக் கொடுத்தான்; தேவனோ அப்படிச் செய்யலாகாது எனக் கூறியிருந்தார். இவ்வாறு கூறுவதினால் என்ன நேரிடுகிறது? அதுதானே, மக்களை கொடிய வஞ்சகத்திலாழ்த்தி, அதினால் ஒரு பொய்யை விசுவாசிக்கச் செய்து, ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தியது. இப்பொழுது நீங்கள் அதைக் குறித்து வாசிக்க விரும்பினால், 2 தெசலோனிக்கேயர் 2:11-ல் வாசிக்கலாம். இங்கு நான் சில வேத வசனங்களைக் குறித்து வைத்துக் கொண்டுள்ளேன். அவைகள் யாவற்றையும் நானும் வாசிக்க இயலாது. இங்கொன்றும் அங்கொன்றுமாக நான் அவைகளை உங்களுக்கு கொடுப்பேன்... நீங்கள் அதைக் குறித்து வினாவெழுப்புவது ஆச்சரியமாக உள்ளது, உங்களது நன்மைக்காக நாங்கள் அவைகளை எழுதி உங்களுக்கு வாசிப்போம். 33எவ்வாறு அந்த பாவ மனிதன் தோன்றுவானென்றும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து, தன்னைத் தேவனாக காண்பித்துக் கொண்டு, ஒரு பொய்யை விசுவாசிக்கும்படி ஜனங்களை அவன் கொடிய வஞ்சகத்திலாழ்த்துவான் என்றும், அதினால் அவர்கள் ஆக்கினைக்குள்ளாகும்படி செய்வான் என்றும் வேதத்தில் (2 தெசலோனிக்கேயரில்) கூறப்பட்டுள்ளது. ஏவாளிடத்திலும் அவன் அவ்வாறே செய்தான்; அவ்விடத்தில் அவன் ஒருபோதும் தேவனுடைய வார்த்தை சரியல்ல என்று கூறவில்லை, ஆனால் அவள் ஒரு பொய்யை விசுவாசிக்கும்படி அவளுக்கு கொடிய வஞ்சகத்தைக் கொடுத்தான். வஞ்சகத்தின் ஆவியானது பிசாசினுடையதாயிருக்கிறது; பிசாசுகள் இப்பொழுது, கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்து கொண்டிருக்கின்றன. எதற்கு கீழ்ப்படியாமை?இந்நாளில் பிள்ளைகள் எதற்கு கீழ்ப்படியாதவர்களாயிருக்கிறார்கள்? ஆதியில் ஏவாள் செய்ததைப் போல், உண்மையான தேவனுடைய வார்த்தைக்கே கீழ்ப்படியாமலிருக்கிறார்கள், அதைப் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், எபேசியர் 2-ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம்; ஏனெனில், இதில் உள்ள வசனத்தை வாசிப்பது நல்லது எனக் காண்கிறேன். நீங்கள் போவதற்கு அவசரப்படாவிட்டால், ஒரு நிமிடம் சற்று இவ்வசனங்களை வாசிப்போமாக. எபேசியர் 2-ம் அதிகாரம் 1 முதல் 2 முடிய வசனங்கள். அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். ''அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள்''. எபேசியர் 2:1-2. 34(கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்) அந்திகிறிஸ்துவானவன் கீழ்ப்படியாமையின் குழந்தை பிராயத்திலேயே அப்படி ஆரம்பித்தானென்றால், இப்பொழுது, அந்திகிறிஸ்து என்ற புருஷன் ஆக அவன் வளர்ந்திருக்கும் போது அது எத்தகைய நிலையில் இருக்கும்? அது இப்பொழுது எவ்வளவு வஞ்சகமாக இருக்கும்! அந்திகிறிஸ்து தனது குழந்தைப்பிராயத்தில் இருப்பதைவிட, இப்பொழுது அவன் புருஷனாக வளர்ந்திருக்கும்போது எவ்வளவு கொடிய வஞ்சகத்தை உலகுக்குக் கொடுப்பான் “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆவி - வஞ்சகஆவி...'' என்று வசனம் கூறுகிறது, வார்த்தைக்கு கீழ்ப்படியாதவர்கள். ''கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்'' என்ற இந்த பொருளைக் குறித்து சற்று நான் கவனிக்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் ஆரம்பத்தை பற்றி அறிவீர்களா? நீங்கள் உங்கள் முப்பாட்டனாருக்குள் ஜீவித்திருந்திருக்கிறீர்கள் என்கிற காரியத்தை தேவனுடைய வார்த்தையின் மூலம் நான் உங்களுக்கு நிரூபிக்க முடியும். நீங்கள் உங்களுடைய கொள்ளுப்பாட்டனாருக்குள் இருந்து, பிறகு, உங்களுடைய பாட்டனார் மூலமாக உங்கள் தகப்பனுக்குள் வந்து பிறந்தீர்கள். அதை நீங்கள் அறிவீர்களா? இதைப் பற்றி எபிரெயர் நிருபம் 7-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இராஜாக்களைக் கொன்றுவிட்டுத் திரும்புகையில் கொள்ளைகளில் தசம பாகத்தை ஆபிரகாம் மெல்கிசேதேக்குக் கொடுத்தான். ஆபிரகாம் மெல்கிசேதேக்கைச் சந்திக்கையில், அவனது அரையிலிருந்து லேவியும் ஆபிரகாமுக்குள் இருந்து தசமபாகம் கொடுத்தான் என்று பவுல் கூறுகிறார். எனவே ஆபிரகாம் என்னவெல்லாம் செய்தானோ, அப்பொழுது அவனுக்குள் லேவி இருந்தான் என்று காண்கிறோம். லேவிக்கு ஆபிரகாம் கொள்ளுப்பாட்டனாவான். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபோ லேவி முதற் கொண்டு கோத்திரப் பிதாக்களைப் பெற்றான். இப்பொழுது இங்கே தானே, நீங்கள் முன்குறித்தலைப் பற்றிய தெளிவான கருத்தைக் காணலாம். 35இப்பொழுது, பூமியின் மேல்வரும் என்று தேவன் கூறின இச்சாயங்கால வெளிச்சத்தின் செய்தியை நான் உங்களுக்குக் கூறியிருக்கிறேன்; அதின் காரியங்களை இச்செய்திகளில் நான் உங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன். உலகத் தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியின் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராதவர்களாகக் காணப்படுவோர் எவர்களோ, அவர்களை பூமியில் வரப்போகிறதான அந்த மனிதன் - மிருகம் - வஞ்சிப்பான் என்பதைக் கவனியுங்கள். தேவனுடைய சொந்த சிந்தையில்... தேவனாகிய அந்த மகத்தான ஆவி, ஆரம்பம் என்ற ஒன்று இருக்கு முன்னர், ஆதியில் தேவனாயிருந்தார். அப்பொழுது நீங்கள் அவரில் இருந்தீர்கள் என்பதை அறிவீர்களா?நீங்கள் இப்பொழுது ஒரு கிறிஸ்தவராக இருப்பின், அப்பொழுது நீங்கள் அவரில் இருந்திருக்கிறீர்கள். அவ்வாறிருப்பின், தேவத்துவம் முழுவதும், சரீரப்பிரகாரமாக இயேசு கிறிஸ்து என்ற நபரில் (அல்லது ஆளில்) உருவாகியிருந்தது. பிறகு இயேசு மரித்தபொழுது, நானும் அவருடன் மரித்தேன். ஏனெனில் நான் அவரில் முன்னமே இருந்தேன்; அவர்தாமே வெளிப்பட்ட வார்த்தையின் பரிபூரணமாயிருக்கிறார். நாம் பின்பு பிரத்தியட்சமாகித் தோன்றுவோம் என அவர் அறிந்திருந்தார். நாம் அவரோடு கல்வாரியில் இருந்தோம். அவரோடு கல்லறைக்குள் சென்றோம்; அவரோடு உயிர்த்தெழுதலில் எழும்பி, அவருடைய ஆவியால் உன்னதங்களில் கிருபாசனத்திற்கு ஏறிச் சென்று, உன்னதங்களில் கிறிஸ்து இயேசுவில் எப்பொழுதும் உட்கார்ந்திருக்கிறோம். 36இயற்கையில் உள்ள ஜீவனில், ஒரு ஜீவ அணுவானது, முதலில் ஒரு தகப்பனிடத்திலிருந்து தொடர்ந்து, சந்ததிதோறும் கடந்து செல்வது போல் கிறிஸ்துவின் ஜீவனும் உருவாகி கடந்து வருகின்றது. எனவேதான் தேவன் எலியாவின் ஆவியை ஐந்து வெவ்வேறு காலங்களில் உபயோகிக்கிறார். அது என்ன? வெவ்வேறு சந்ததியில் அது அளிக்கப்படுதல். உங்களது மாம்சத்தின்படியான தகப்பனிடத்திலிருந்து இயற்கை பிரகாரமான ஜீவனும், சிறப்பு தன்மைகளும் உங்கள் தகப்பனால் நீங்கள் ஜெநிப்பிக்கப்படும் போது, உங்களுக்குள் எவ்வாறு சுதந்திரமாக வருகிறதோ, அதைப் போலவே, உலகத் தோற்றத்திற்கு முன்னர் முன் குறிக்கப்பட்ட தேவ ஆவியால் பிறந்தவனும் இருக்கிறான். தேவனுடைய சர்வ வார்த்தையும், இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படும் மனித சரீரத்திற்குள்ளாக உருவெடுத்தபோது, அங்கேதானே, தேவன் அவரில் எனது பாவத்திற்காக நான் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தித் தீர்க்கும்படி செய்தார். பின்பு தேவன் என்னை அவரோடு உயிர்த்தெழுதலில் எழும்பச் செய்தார். இப்பொழுது நாம் அவரோடு ஒவ்வொரு பிசாசின் மேலும் வல்லமையோடும் அதிகாரத்தோடும் உட்கார்ந்திருக்கிறோம். ஓ, நீங்கள் மாத்திரம் தேவன் அளித்திருக்கிறவற்றை விசுவாசிக்கக் கூடுமானால்! ஆனால் நீங்கள் அங்கு அமர்ந்திருக்காவிடில் அதைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் அங்கு அமர்ந்திருப்பீர்களானால், அதன் பிறகும் விசுவாசியாமல், கிரியை செய்வதற்கு அஞ்சுவீர்களானால், நீங்கள் ஒருபோதும் அதை பயன்படுத்த மாட்டீர்கள். ஆனால் நீங்கள் அங்கு அமர்ந்திருப்பீர்களானால், நீங்கள் செய்ய வேண்டியவற்றைக் குறித்து முன்குறிக்கப்பட்டுள்ளதால், அதை நீங்கள் உபயோகிப்பீர்கள். அதற்கு மாறாக பார்வோனாக இருக்கும்படியான நோக்கத்திற்காக பார்வோனாவன் எழுப்பப்பட்டான் என்று வேதம் கூறுகிறது. கேட்டின் மகனாக இருக்கும்படி யூதாஸ்காரியோத்து எழுப்பப்பட்டான். இப்பொழுது நாம் அணுகிக் கொண்டிருக்கிற மகத்தான இச்சத்தியங்களை கவனியுங்கள். 37இப்பொழுது, நாம் தானே, சபையானது தங்களை ஆளும்படியாக தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல் அதைப் புறக்கணித்து, அதற்குப் பதிலாக பரபாஸ் என்பவனை ஏற்றுக் கொண்டது என்பதை நாம் பார்த்தோம். அதைக் குறித்ததான வேத வாக்கியம் உங்களுக்கு வேண்டுமானால், மத்தேயு: 27:15 முதல் 23 முடிய குறித்துக் கொள்ளுங்கள். இது எவ்வாறிருக்கிறது? இது எப்படிப்பட்ட நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது? அதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். சபை உலகானது, தனது மத ஸ்தாபனத்தின் வெளிச்சத்தின் படியான நீதியில், தாங்கள் பரிசுத்தர் என்று தாங்களே எண்ணுகிறபடியும், ஜனங்கள் பார்வையில் அப்படி எண்ணப்படுகிறபடியும் உள்ளவர்கள், இயேசுவை சிலுவையிலறைந்து, “இவன் எங்களை ஆளும்படி இவன் எங்களுக்கு வேண்டாம்” என்று கூறினார்கள். 1யோவான் 1-ம் அதிகாரம் கூறுகிறபடி, இயேசுவானவர் தேவனுடைய வார்த்தையின் பரிபூரணமாயிருக்கிறார். “இந்த தேவனுடைய வார்த்தையானவர் எங்களை ஆளும்படி எங்களுக்கு தேவையில்லை'' என்று அவர்கள் கூறினார்கள். அப்படியிருந்தும் அவர் தேவனுடைய வார்த்தையாகவே இருக்கிறார். ஆனால் அவர்கள் கண்களோ அவர் யார் என்பதை அறியக் கூடாதபடி குருடாயிருந்தது. அவரில் நிறைவேற வேண்டியிருந்த ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் அவரே நேரிடையான பதிலாயிருந்தார். இப்பொழுது நாம் யாவரும் அதை விசுவாசிக்கிறோம்; ஏனெனில், அது சம்பவித்ததை பார்க்கும்படி நாம் பின்னால் திரும்பிப் பார்க்கிறோம். ஆனால், தற்போதைய இந்த பொல்லாத காலத்தின் உலகானது அந்தக் கடந்த காலத்தில் இருந்திருக்குமேயானால் அவர்கள் இன்று எப்படி தேவனுடைய வார்த்தையைப் புறக்கணிக்கிறார்களோ, அவ்வாறே அன்றும் செய்திருப்பார்கள். ஏனெனில், அன்றுள்ள அதே வார்த்தையே இக்காலத்திற்குமுரியதாக இப்பொழுதும் பிரத்தியட்சமாயிருக்கிறது. அவர்கள் அதைச் செய்வார்கள். அவர்களால் வேறெதையும் செய்ய முடியாது. அவர்கள் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள், அவர்களுக்கு கொடிய வஞ்சகம் கொடுக்கப்பட்டு, அதினால், ஒரு பொய்யை விசுவாசித்து ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுகிறார்கள். 38சபை உலகானது, அந்த நாளுக்கென பிரத்தியட்சமாகியுள்ள வார்த்தையாகிய இயேசுவை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? ஏனெனில், அவர்கள் அதை வேறுவிதமாக வியாக்கியானித்துவிட்டார்கள். ஆனால் அவர்களோ, அவரே அந்த வார்த்தையானவர் என்று அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், “தேவன் தாம் எதைச் செய்வதாகக் கூறியிருந்தாரோ, அதைச் செய்துவிட்டார். அவர் அவர்களிடத்தில், இந்த நேரத்திற்குரிய வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். நான் செய்யப் போகிறதாக அவ்வசனங்கள் கூறியதின்படி என்னுடைய தகுதி இல்லாவிடில் என்னை விசுவாசிக்க வேண்டாம்'' என்று கூறினார். அவர்கள், “நாங்கள் மோசேயை விசுவாசிக்கிறோம்'' என்று கூறினார்கள். அவர், “நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே” (யோவான் 5:46) என்று கூறினார். அதன் பிறகும் அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை. பரலோகத்தின் தேவன் தாமே சிலுவையில் மரித்துக் கொண்டிருக்கையில், இன்னமும் அவர்களால் அதைக் கண்டுகொள்ள முடியவில்லை. அவர் வந்து என்னென்ன வார்த்தைகளைக் கூறுவார் என தீர்க்கதரிசிகள் முன்னுரைத்திருந்தார்களோ, அவைகளை அப்படியே இயேசு உரைத்த போதிலும்கூட அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை. பார்த்தீர்களா? அவர்கள் அவருடையவர்களல்ல. அவர்கள் வார்த்தையினுடையவர்களல்ல, இருப்பினும் அவர்கள் மிகுந்த பக்தி மார்க்கத்திலமைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். ஆனால் அவர்கள் வார்த்தையைச் சேர்ந்தவர்களல்ல. அப்படியிருப்பின், அந்த வேளைக்குரிய வார்த்தையில் தங்களுடைய ஸ்தானத்தை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டிருப்பார்கள். 39ஒவ்வொரு காலத்திலும், வேத வாக்கியமானது எவ்வளவு அழகாக ஒன்று சேர பொருந்துகிறது என்பதைக் கவனியுங்கள். சபை உலகானது, தங்கள்மேல் ஆளும்படி தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருக்க விரும்பாத போது, அவர்கள் கொலைகாரனான பரபாஸை ஏற்றுக் கொண்டார்கள். இச்செயல் எந்நிலையை ஏற்படுத்தியது? இச்செயல், இப்பொல்லாத காலத்தின் தேவனாகிய சாத்தானை உயர்த்தியது; இந்த ஸ்தானத்தைத் தான் அவன் எப்பொழுதும் விரும்புகிறான். இப்பொழுது கவனியுங்கள். ஏனெனில் சாத்தானானவன் வேறெந்த காலத்திற்குரிய தேவனாக சொல்லப்படவில்லை; இந்தக் காலத்திற்குரிய தேவனாகவே கூறப்பட்டுள்ளான். அவன் நோவாவின் காலத்தின் தேவனாக சொல்லப்படவில்லை; அவன் மோசேயின் காலத்தின் தேவனாக சொல்லப்படவில்லை! எலியாவின் காலத்தின் தேவனாகவும் சொல்லப்படவில்லை. ஆனால் இந்தப் பொல்லாத காலத்தின்! தேவனென்று அவன் கூறப்பட்டுள்ளான். இதை நீங்கள் கவனிக்கத் தவறவேண்டாம்! அவன் தானே கோடானுகோடி மக்களால் தொழுது கொள்ளப்படும் இப்பொல்லாத காலத்தின் தேவனவன். அவர்களோ, அதை அறியமாட்டார்கள். ஆனால், வேத வாக்கியமானது, அவனை அடையாளம் கண்டு கொள்ளும்படி இக்காலையில் அவனது முகத்திரையைக் கிழிக்கட்டும், அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இருதயத்தின் சிந்தைகளைப் பகுத்தறிந்து, அழைக்கும் நமது கூட்டங்களில், பரிசுத்த ஆவியானவர் தேவ வார்த்தையின் மத்தியில் பிரவேசித்து, குறிப்பிட்ட மனிதனை, “இந்த அந்நிய ஸ்திரீயிடம் நீ வாழ்வதற்கு உனக்கு வேலையில்லை, இன்னொரு மனிதனின் மனைவியுடன் நீ பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஓடிப்போனபோது என்ன காரியம் செய்தாய்'' என்று கூறும் போது, ஆவியானவர் என்ன செய்கிறார்? சாத்தானால் கட்டுண்டு, இன்னொரு மனிதனின் மனைவியோடு வாழுபவனின் அல்லது இன்னொருத்தியின் கணவனோடு வாழும் ஒரு பெண்ணின் பாவங்களையும், மற்றும் அவர்கள் செய்த பிழைகளையும் அவர் வெளியாக்குகிறார். அவர்களைக் கட்டி வைத்திருந்த சாத்தானையும் காண்பித்துக் கொடுக்கிறார்; அவர் என்ன செய்கிறார்? வெளிப்படுத்துகிறார். 40மருத்துவர்கள் உபகரணங்களைக் கொண்டு ஒரு மனிதனிடத்தில் என்ன கோளாறு என்று கண்டுபிடிக்க முயலுகின்றனர்; ஆனால் அவர்களால் அது கூடாது. நாமும் கூற முடியாது. ஆனால் அப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் வந்து குறிப்பிட்ட நபர் என்ன நிலையில் உள்ளார் என்பதைத் திறந்து காண்பிக்கிறார். அவ்விதமாகத்தான் தேவனுடைய வார்த்தை இருக்கிறது. இருளில் பிரகாசிக்கிற ஒளியாக அது இருக்கிறது. உங்கள் அறையில் ஏதோ ஒரு சப்தம் கேட்கும்போது, அது முதலில் உங்களுக்கு மர்மமாக இருக்கிறது; அறையில் ஏதோ ஒன்று இருந்து கொண்டு அவ்வாறு சப்தமிடுகிறது, அது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது நீங்கள் விளக்கைப்போடும் போது, சிள் வண்டு (Cricket), மற்றும் கரப்பான் பூச்சி (Roaches) போன்றவைகள் அங்கிருந்து விளக்கு வெளிச்சத்தைக் கண்டதும் சிதறி ஓடி விடுகின்றன. இருளின் பிள்ளைகள் ஒளியைக் கண்டதும் ஓடிவிடுகின்றனர். “...அவர்கள் நம்மை விட்டுப்பிரிந்து போனார்கள், ஏனெனில் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை...” (1யோவான் 2:19) என்று வேதம் கூறுகிறது. அவர்களால் இவ்வுலகிற்கு தேவன் அனுப்பியுள்ள ஒளியில் ஜீவிக்க முடியாது. பரலோகத்தின் தேவன் இக்கடைசி நாட்களில், தமது பிள்ளைகள் இருளில் நடவாமலும், இடறிப் போகாமலும் இருக்கும்படி அவர்களது பாதையை பிரகாசிக்கச் செய்யும்படி, தமது ஒளியை அனுப்பியிருக்கிறார். நேற்றும், இன்றும், என்றும், மாறாத இயேசு கிறிஸ்துவின் பிரகாசிக்கிற ஒளியில் அவர்கள் நடக்கும் படி அவ்வொளியை அனுப்பியுள்ளார். ஆமென்! 41சாத்தானானவன் வேறு எந்தக் காலத்திற்குரிய தேவன் என்று அழைக்கப்படாமல் இக்காலத்திற்குரிய தேவன் என்றே அழைக்கப்பட்டுள்ளான் என்பதைப் பாருங்கள். தேவனைப் போல் ஆக வேண்டுமென்பதே ஆதிமுதற்கொண்டு அவனது விருப்பமாகும். அதைக் குறித்த வசனத்தை வாசிப்போம். இதைப் படிக்க நேரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். ஏசாயா:14-ம் அதிகாரத்தை நான் எழுதியிருக்கிறேன். ஏசாயா:14:12 முதல் 14 முடிய உள்ள வசனங்களில் சாத்தான் என்ற இப்பிரபஞ்சத்தின் தேவன் என்ன செய்தான் என்பதைப் பற்றி தேவன் கூறியுள்ளதை நாம் பார்ப்போம். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழவெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக (அது தேவனுடைய புத்திரர்) என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும் நான் மேகங்கள் மேலாக உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.'' ஏசாயா 14:12-14 . தேவனைப் போல் தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்று சாத்தான் விரும்பினான். வானத்து நட்சத்திரங்களில், மூன்றில் ஒரு பங்கு நட்சத்திரங்களை தன் பட்சம் சாய்த்துக் கொண்டு, அவர்களுக்கு மேலாகத் தன்னை தான் உயர்த்தி அவர்களுக்குப் பிரசங்கித்து, மூன்றில் இருபங்கான அவர்களை வஞ்சித்தான். அதைப் பார்த்தீர்களா? அதுவே அவனது விருப்பம் என்பதைக் கவனியுங்கள். அவன் இப்பொழுது, தனது அறிவில் (பாருங்கள்) தேர்ந்து, தன்னால் மிகவும் கவனமாக தெரிந்து கொள்ளப்பட்ட தனது மணவாட்டியுடன் ஆயத்தமாக இருக்கிறான். அவர்களது பெரிய மத ஸ்தாபனங்களும், அவனது வஞ்சக வர்ணம் பூசப்பட்டு, இருக்கின்றன. அவர்கள் அறிவு மதக் கோட்பாடுகள் உள்ளவர்களாக, புத்திசாதுர்யமாயுள்ளவர்களும், பேரறிஞர்களாகவும், இருக்கிறார்கள். இவற்றால் சாத்தான் உலகை வஞ்சித்து, இவ்வுலகுக்கு தேவனாக ஆவதெற்கென்று உள்ளான். (அதை அவன் செய்துவிட்டான்). இறுதியாக அவன் அந்திகிறிஸ்து என்ற ஆளுக்குள் வருவான். அந்த நபர் ஏற்கனவே, உலக சிநேகம் உள்ள, விஞ்ஞான பூர்வமாக உள்ள அவனது மணவாட்டியால், தேவனுக்குப் பதிலாக உள்ளவர் (Vicar of God) என்ற ஸ்தானத்தில் கிரீடம் சூட்டப்பட்டாயிற்று. அவள் மேதாவிலாசத்தின் எல்லாப் பகட்டோடும், மதக் கல்வியால் நிரம்பியும் காணப்படுகிறாள். அவளும், அவனைப் போலவே பக்தி மார்க்கத்திலமைந்தவளாகக் காணப்படுகிறாள். தேவனுடைய வார்த்தைக்கு அவனளித்த சொந்த வியாக்கியானத்தை ஏவாள் ஏற்றுக் கொண்ட விதமாகவே இவளும் ஏற்றுக் கொண்டு, சாத்தானின் குமாரனாகிய காயீன் செய்த கிரியைகளை இவளும் செய்கிறாள். ''சாத்தானின் குமாரன்“ என்று நீங்கள் கூறுகிறீர்களே என்று நீங்கள் இப்பொழுது கேட்கக் கூடும். 42வேதத்தில் எங்காவது காயீன் ஆதாமின் குமாரன் என்று அழைக்கப்பட்டுள்ளானா என்பதை எனக்குக் காட்டுங்கள். வேதமானது, காயீன் பொல்லாங்கனின் குமாரன் என்றே கூறுகிறது; அதாவது சர்ப்பத்தின் வித்து, சகோதரனே இப்பொழுது கூர்நுனிக் கோபுரத்தின் மேல்பாகம் திறக்கப்பட்டு வெளிப்பாடு நமக்கு காண்பிக்கப்பட்டுவிட்டது. அவன் தனது சிந்தையால் என்ன செய்யப் போகிறானென்பதைப் பாருங்கள். தேவன் லெளகீக அழகில் வாசம் பண்ணுகிறார் என்று அவன் எண்ணினான். அவன் பரலோகத்தில் அதைச் செய்தான். பாவமானது ஏதேனில் ஆரம்பிக்கவில்லை, லூசிபர் ஆகிய விடிவெள்ளியின் மகனானவன், தன்னைத்தான் அழகில் உயர்த்திக் கொண்டு, மிகாவேலின் இராஜ்ஜியத்தை விட மிக அழகான இராஜ்ஜியத்தை அடைய ஆசித்தபொழுது, பரலோகத்திலேயே பாவம் ஆரம்பித்தது. தேவன் அழகில் வாசம் பண்ணுகிறார் என்று அவன் எண்ணினான். காயீனைக் கவனியுங்கள். இரத்தம் உள்ள பலியை அவன் விரும்பவில்லை. அவன் இறங்கி வந்து, தனது பலிபீடத்தின் மேல், அழகுள்ள நிலத்தின் கனிகளை சமர்ப்பித்தான். அவன் ஆபேலைப் போலவே எல்லாவற்றையும் செய்து, மிகவும் பக்திமார்க்கத்திலமைந்தவனாக காண்பித்துக் கொண்டு, தேவனுக்கு முன்பாக எல்லாவிதத்திலும் கீழ்ப்படிதல் உள்ளவனாக இருந்து, தேவனுக்கு முன்பாக பணிந்து காணிக்கை செலுத்தினான். ஆனால் அவன் வார்த்தையைப் பற்றிய வெளிப்பாடு இல்லாதவனாக இருந்தான். தேவனுடைய திட்டத்தின் அநாதியாய், வார்த்தையானவர் இருந்தார். தேவனானவர் வெளிப்படுத்தலினால் தான் வெளிப்படுத்தப்பட்டார். அதை தேவன் உறுதிப்படுத்தி, அது சரியானது தான் என்று வலியுறுத்தினார். அது மதமல்ல, ஒருபீடமல்ல, ஒரு சபையைச் சார்ந்து கொள்ளல் அல்ல; ஒரு பலி செலுத்துதல் அல்ல, உண்மையாயிருப்பது மட்டுமல்ல, தேவனுடைய வார்த்தையைப் பற்றிய வெளிப்படுத்தலினால்தான். ஆபேலுக்கு தேவன் அவனது தாய் ஒரு சர்ப்பம் கொடுத்த வெறும் ஆப்பிள் பழத்தைத் தின்னவில்லையென்றும், அவள், வித்து கலக்கும்படி மிகவும் நெருக்கமாக மனித சாயலில் இருந்த, வெளியின் மிருகங்களிளெல்லாவற்றிலும் புத்தி சாதுர்யமுள்ளதும், தந்திரமுள்ளதுமாகிய ஒரு மிருகத்திற்குள் இருந்த சாத்தான் என்ற ஆளுடன் உடலுறவு கொண்டுவிட்டாள் என்றும் வெளிப்படுத்தியிருந்தார். அம்மிருகம் தன் வயிற்றால் ஊர்ந்து செல்லும் ஒரு ஊர்வன அல்ல. இப்பொழுது விஞ்ஞானமானது அவனைக் கண்டு கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் ஒருபொழுதும் அவனைக் கண்டு கொள்ள மாட்டார்கள், ஏனெனில், அவனது சரீரத்தில் உள்ள ஒவ்வொரு எலும்பும் இப்பொழுது மாற்றப்பட்டுவிட்டது. அவ்வாறே வேதம் உரைத்திருக்கிறது. 43இப்பொழுது இந்த ஆள் என்னசெய்வான் என்பதைக் கவனியுங்கள். இந்த ஆள், சபையாகிய தேவனுடைய ஆலயத்தில் உட்கார்ந்து கொண்டு தன்னைத் தேவனாக காண்பித்துக் கொண்டிருப்பான். இப்பொழுது நீங்கள் அதைக் குறித்த வசனங்களை வாசிக்க விரும்பினால், 2தெசலோனிக்கேயர்: 2:3,4 ஆகிய வசனங்களையும், வெளிப்படுத்தின விசேஷம்: 13:4,11,12 ஆகிய வசனங்களையும் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அவைகளில், பவுல், யோவான் ஆகிய இரு தீர்க்கதரிசிகளாலும், இக்கடைசி நாட்களில் அவன் எப்படியிருப்பான் என்பதைப் பற்றி உரைக்கப்பட்டிருக்கிறது. நேரத்தை மிச்சப்படுத்தத் தக்கதாக, நீங்களே இவ்வசனங்களை வாசித்துக் கொள்ளுங்கள். நாம் வாழும் இந்நாளானது, மனிதனின் நாள் என்று வேதத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இது தேவனுடைய நாள் அல்ல. தேவன் இப்பிரபஞ்சத்தின் தேவனல்ல. வேதமானது, அவர் பரலோகத்தின் தேவன் என்று கூறுகிறது, இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று கூறவில்லை. ஆனால் இது தேவனுடைய நாள் அல்ல; இது தெரிந்து கொள்ளும் நாள் ஆகும், ஒன்று, இன்றைக்காக வாழ்ந்து சாகக்கடவாய்; அல்லது தேவனைத் தெரிந்து கொண்டு ஜீவிப்பாயாக; தேவனே வார்த்தையாயிருக்கிறார். இந்த நேரத்திற்கும் நாளுக்குமென பிரத்தியட்சமாகியுள்ள அந்த வார்த்தை தான் வார்த்தையாகும். 44மனிதனின் நாளைக் கவனியுங்கள். அதைப் பற்றி உள்ள வசனத்தை நான் வாசிக்கவிருந்தேன்; நீங்கள் அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால், 1கொரிந்தியர்: 4:1 முதல் 5 முடிய உள்ள வசனங்கள்; பவுல் இவ்வசனங்களில், மனிதனின் நாளில் மனிதனால் நியாயந்தீர்க்கப்படுவதைப் பற்றி பேசுகிறார். “எதற்காக இதை மனிதனின் நாள் என்று அழைக்கிறீர்கள்?'' என நீங்கள் கேட்பீர்கள். மனிதனின் அறிவால் நடக்கும் கிரியைகள் மகிமைப்படுத்தப்படும் நாளாகும் அது. கம்யூனிஸ்ட்டுகளின் தற்புகழ்ச்சியான பேச்சுகள் என்னவென்று பாருங்கள். எவனோ ஒருவனை நிலவுக்கு அனுப்பும்படி அவர்கள் முயலுகின்றனர். தேவனோ சிலரை பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல முயலுகிறார். பாருங்கள். ஆனால் அவர்கள் எவ்வாறு ஒரு வீணான முயற்சியின் பேரில் கோடானு கோடி டாலர் பணத்தை வீண் விரையம் செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் அங்கே போகும்போது, அங்கே ஒன்றையும் காணப் போகிறதில்லை. அவர்களைப் பற்றிய காரியமானது என்ன? நிலவைப் பற்றி எனக்கு அக்கரையில்லை. நிலவைப் பார்க்கக்கூட இயலாதபடி மிக வேகமாக நிலவைக் கடந்தும், பால்வெளி மண்டலத்தைக் கடந்தும் மேலே, மேலே போகத்தான் விரும்புகிறேன். ஆம்!. 45இன்றைய உலகானது, சாத்தானின் மூலம் வந்த அறிவுக்கென்று என்னை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறது; மனிதனின் நாளானது தேவனுடைய வார்த்தையினால் அல்ல; ஆனால் பிசாசிடம் உள்ள அறிவினால் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பொழுது சிந்தியுங்கள், இவ்விஷயம் உங்களுக்குள் ஆழமாகப் பதியட்டும். இச்செய்தி அடங்கிய இவ்வொலிநாடாவை இன்னொரு சமயம் நீங்கள் போட்டுக் கேட்கும் பொழுது, நான் பேசும் இக்கருத்தைக் கேட்கையில், சற்று நிறுத்திவிட்டு, அதைப் பற்றி சிந்தியுங்கள். சாத்தானின் கிரியைகள், தேவனுடைய வார்த்தைக்கும், அவருடைய பிரத்தியட்சமாக்கப்பட்டுள்ள கிரியைகளுக்கும் மேலாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்பொழுது, நான் கூறப் போவதை செவி கொடுக்கத் தவறவேண்டாம்! இந்த வேளைக்கான உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கும் மேலாக, சாத்தானின் ஞானமானது, மனிதனில், ஆராதனைக்குரிய சிங்காசனத்தளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. தங்களுடைய வேதக் கல்லூரிகள், கல்விச் சாலைகள் இவற்றால், தாங்கள் தேவனுடைய வார்த்தையைவிட அதிகம் கற்று, அதினால் வார்த்தையைப் பற்றி தங்களுக்குத் தெரியும் என நமது சபைகள் நிரூபிக்க விழைகின்றன. அங்கே அவர்களது, டாக்டர் இன்னார் என்றும், போதகர் இன்னார் என்றும், பேராசிரியர் இன்னார், இன்னார் என்றும், சாத்தானிடமிருந்து உள்ள தங்களது அறிவை அவர்களுக்கு முன்பாக மிகவும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வாக்குத்தத்தமாகிய சத்தியத்திற்கு மேலாக உயர்த்துகிறார்கள். மனிதன் அதற்குப் பலியாகிவிட்டான். மனிதன் தனது விஞ்ஞான சாதனைகளால், தேவனுடைய வார்த்தையானது தவறாயிருக்கிறது என நிரூபிக்க முயலுகிறான். அதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மனிதன் தன் மதக்கொள்கைகளுக் கேற்ப தேவனுடைய வார்த்தையை மக்களுக்கு விளக்குகிறான்; அதினால் தேவனுடைய வார்த்தை மக்களுக்குள் அவமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறே அவன் இயேசு பூமியில் தோன்றிய பொழுது இந்த மதஸ்தாபன காலத்திலும் செய்தான். இயேசு, ''மாயக்காரராகிய நாங்கள் உங்கள் பாரம்பரியங்களினால் (அதுவே அவர்களது வியாக்கியானமாயிருக்கிறது). தேவனுடைய வார்த்தையை அவமாக்கிப் போட்டுவிட்டீர்கள்“ என்று கூறினார் (மாற்கு 7:9). தேவனுடைய வார்த்தையை அவமாக்கிப் போடுதலாகிய அதே காரியத்தை இன்றும் அவர்கள் செய்துவிட்டார்கள். 46கவனியுங்கள், ஜனங்கள், தேவனென்னப்படுவது எதுவோ அதற்கும் மேலாக அவனை உயர்த்துகிறார்கள். அவ்வாறு அவர்கள் செய்வார்கள் என்று 2தெசலோனிக்கேயரில் கூறப்படவில்லையா? தேவனை விசுவாசிப்பதைக் காட்டிலும் மேலாக ஜனங்கள் மத ஸ்தாபன அதிகாரத்தையே விசுவாசிக்கிறார்கள். தேவன் வார்த்தையாயிருக்கிறார், ஆனால் அவர்களோ, தேவனுடைய வார்த்தைக்கும் மேலாக, மதஸ்தாபன சித்தாந்தங்களையே பெரிதும் விசுவாசித்து, சாத்தானை தேவனென்னப்படுவதற்கும் மேலாக உயர்த்துகிறார்கள். ஒரே தேவன்தான் உண்டு; அவர்தான் வார்த்தையாயிருக்கிறார். தேவனென்னப்படுவதெதுவோ... ஆகவே அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்துக் கொண்டு, தன்னைத்தான் தேவன் என்று காண்பித்துக் கொண்டு இருக்கிறான்; ஏனெனில், அவன் தன்னை வணங்குவதற்கென ஜனங்களைக் கொண்டவனாக இருக்கிறான். தேவன் வார்த்தையாயிருக்கிறார். அவன், தேவனென்னப்படுவதெதுவோ, அதற்கு மேலாக தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறான். ஓரே தேவன் மாத்திரமே உண்டு, அவரே வார்த்தையாயிருக்கிறார். பார்த்தீர்களா? இக்காலத்தின் தேவனானவன், தன்னைத்தானே உண்மையான, உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கு மேலாக உயர்த்திக் கொண்டான் (அது யோவான்: 1-ன் படி உள்ள காரியம்). அவன் தேவனென்னப்படுவ தெல்லாவற்றிற்கும் மேலாக தன்னை தானே உயர்த்திக் கொண்டுள்ளான். அதனால், அவன் தேவனுடைய ஆலயத்தில் அதிகாரமுடையவனாக (பாருங்கள்) உட்கார்ந்திருந்து, அதற்காக துதிக்கப்படுகிறான். ஓ! தேவனுடைய ஜனங்கள் இந்த வஞ்சகத்தைக் கவனிப்பார்களாக. அதற்காக அவன் துதிக்கப்பட்டு, இப்பொல்லாத காலத்தின் மக்களால் பக்தி! வினயத்துடன் விசுவாசிக்கப்பட்டுள்ளான். இப்பொழுது, இப்பொல்லாத காலத்தின் தேவனையும், அவனது ஊழியக்காரர்களையும் பார்க்கிறீர்களா? 47இப்பொழுது, அது பிரத்தியட்சமாக்கப்படுவதை கவனிப்போமாக. ஒருபோதும் தவறாததான தேவனுடைய வார்த்தைக்கு புறம்பாக சாத்தானானவன், தனது அறிவினால், மக்கள் ஒரு மேலான உலகத்தில் வாழ்வதற்காக அதை உருவாக்குவதாகக் கூறுகிறான். இவ்வுலகினர் வாழ்வதற்கு பொருத்தமான காலம், தேவன் வாக்குரைத்திருக்கிற ஆயிர வருஷ அரசாட்சிக் காலம் தான்; அதைப் பற்றிய உண்மையை மக்கள் அறியாதவாறு சாத்தான் செய்து, அவர்கள் வாழ ஒரு மேலான உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறதாக அவன் கூறுகிறான்; மத ஸ்தாபனங்களிலும் கோட்பாடுகளிலும், விஞ்ஞானம், மற்றும் அறிஞர்களிலும் சாத்தான் ஒன்று கூடி வருதலால், இக்காரியத்தை அவன் நேரப் பண்ணியுள்ளான். இதன் விளைவாக, ஆயிர வருட அரசாட்சியின்போது மாத்திரமே, மக்கள் வாழ்வதற்கு இவ்வுலகம் தகுதி வாய்ந்திருக்கும் என்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவன் நிராகரித்துவிட்டான். அதில் வாழ்வதற்குப் பதிலாக, பாவஞ் செய்யப் பண்ண வசதியான அதற்கேற்றதொரு மேலான உலகையே அவன் உருவாக்கியுள்ளான் என்பது எனது கருத்தாகும். கவனியுங்கள், அவன் அவ்வாறு செய்துள்ளானா? பாவத்தை அவன் சட்டபூர்வமாக்கியுள்ளான். மதுபானம் அருந்துதல் மற்றும் சிகரெட் புகைத்தல் ஆகிய காரியங்களை அவன் சட்ட பூர்வமாக்கியுள்ளான். முடியை குட்டையாக வெட்டிக் கொண்டுள்ள ஸ்திரீகள் சபையில் உறுப்பினராக முடியும் என்ற காரியத்தையும் அவன் சட்டபூர்வமாக்கியுள்ளான். இப்பொழுது, நாம் ஒரு நிமிடம் சற்று நிறுத்துவோம். 48பெண்ணானவள் அரைக்கால் சட்டை அணிதல், வர்ணம் தீட்டிக் கொள்ளுதல் போன்றவை தேவனுடைய வார்த்தைக்கு முரணானவை, ஆனால் இவைகளை அணிந்து கொண்டும் ஒரு ஸ்திரீ அவளுடைய மத குழுவில் சேர முடியும். அவன் சாத்தான் அது சரியென்றே கூறுகிறான். அவனுடைய அறிவை பார்த்தீர்களா? அரைக்கால் சட்டைக்கும் ஸ்திரீக்கும் என்ன சம்பந்தமுள்ளது? விலக்கப்பட்ட கனியை புசித்தல் அல்லது புசியாமலிருத்தல் என்ற காரியத்தில் அவள் தீர்மானம் செய்ய வேண்டுவது போல் இது இருக்கிறது. தேவன் அதைச் செய்ய வேண்டாமென்று கூறினார்; அவளோ அதைச் செய்தாள். அவள் அவனை (சாத்தானை) விசுவாசிக்கிறாள்; அதற்காக அவள் அவனை நேசிக்கிறாள். அவள் தேவனை வெறுக்கிறாள். அவளுடைய கிரியைகள் அவள் தேவனை வெறுப்பதை நிரூபிக்கின்றன. அவள் தேவனை நேசிப்பதாகக் கூறுகிறாள். ஆனால் அவள் சாத்தானிலேயே அன்பு கூறுகிறாள். அவள் இப்பிரபஞ்சத்தின் தேவனாகிய நவீன நாகரீகத்தின் (Fashion) தேவனை தொழுது கொள்கிறாள், ஹாலிவுட் தேவதைகளைத் தொழுது கொள்ளுகிறாள். அவள் சாத்தானை நேசிக்கிறாள்; ஆனால் அவள் உண்மையான ஓர் தேவனுடைய வார்த்தையை வெறுக்கிறாள். “சபைகளில், நமது ஸ்திரீகள், இன்னின்ன காரியங்களையெல்லாம் தாராளமாகச் செய்து கொள்ளலாம்'' என்று அவன் அனுமதியளித்துவிட்டான். ஆனால் அவள் மனந்திரும்பாமற் போனால் ஜீவனுள்ள தேவனுடைய சமூகத்தில் வருவதற்கு அவளுக்கு அனுமதியில்லை. அவன் லெளகீக அழகின் தேவனாயிருக்கிறான்; அவள் அழகாகக் காணப்பட விரும்பினாள். அவனும் ஆதிமுதற்கொண்டு, அழகின் தேவனாயிருக்கிறான். பொல்லாததான் அவனது இந்நவீன காலத்தில், விஞ்ஞானத்தில் உள்ள அவனது அறிவினாலும், பொருட்களினாலும் அவன் அழகுபடுத்த முடியும்; அதைச் சாதித்தும் இருக்கிறான். அவன் அழகுப்படுத்தியிருக்கிறான். 49ஆரம்பத்தில் சேத்தும், அவனது பிள்ளைகளும் ஒருபோதும் விஞ்ஞான பூர்வமான வழியில் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அதைக் கவனியுங்கள். இப்பொழுது சில நிமிட நேரங்கள் நாம் விஞ்ஞானத்தைப் பற்றி பேசப் போகிறோம். என்னுடைய அறியாமையை சாக்காக வைத்து இதை நான் கூறவில்லை. ஆனால் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்கிறவர்கள்தான் மூடர்கள், அறியாமையுள்ளவர்கள். நிச்சயம் அப்படித்தான். அது குறிப்பிடத்தக்க அம்சம். அதைக் கவனியுங்கள். சேத்தின் பிள்ளைகள் விஞ்ஞான பூர்வமான வழியில் போகவில்லை. அவர்கள்தானே, தாழ்மையான எளிய மேய்ப்பர்களும் விவசாயிகளுமாவார்கள். ஆனால் காயீனின் புத்திரரோ விஞ்ஞான பூர்வமான அறிவின் வழியில் சென்றார்கள். ஏன்? அவர்கள் தங்கள் பிதாவாகிய பிசாசினால் ஊக்குவிக்கப்பட்டார்கள். காயீன் தன் தகப்பனாகிய பிசாசின் ஆவியால் உற்சாகமூட்டப்பட்டு, அவ்வாறே, தொடர்ந்து வந்த அவனுடைய சந்ததியும் உற்சாகமூட்டப்பட்டது. ஒவ்வொரு காலத்தின் வழியாகவும் தேவனுடைய வித்தானது வந்து கொண்டிருப்பதையும், இன்று அது எவ்வாறு உருவெடுத்திருக்கிறது என்பதையும் கவனியுங்கள். உண்மையான கிறிஸ்தவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். நிச்சயமாக இல்லை. ஆனால் காயீனோ தனது தந்தையாகிய பிசாசின் பாவத்தின்படி, லெளகீக அறிவு, அழகு விஞ்ஞானம் இவற்றால் நிறைந்து, அதின்படி கிரியை செய்தான். காயீனின் புத்திரர் விஞ்ஞானப் பூர்வமான கல்வி கற்றிருந்தார்கள். அவர்கள் இசைக் கருவிகளில் நேர்த்தியாக வாசிப்பவர்கள்; (ஒவ்வொரு சனிக்கிழமை இரவிலும் இத்தெருவிலுள்ள அந்த பள்ளிக் கூட நிர்வாக சபையினர் ஒரு நவீன எல்விஸ் ப்ரெஸ்லி மற்றும் அவ்விதமான பாடகர் குழுவினரின் இசைக் கச்சேரிக்கு அனுமதிக்கின்றனர்). அவர்கள் நகரங்களைக் கட்டுபவர்களாக இருந்தார்கள்: பிசாசு தான் கொடுக்கும் வர்ணங்களின் மூலம் சுய இச்சைக்காக ஸ்திரீகள் தங்களை அழகுபடுத்தல், அவர்களது முடியை கட்டையாக வெட்டிக்கொள்ளுதல், அரைகால் சட்டை அணிதல், மற்றும் இதுபோன்ற அலங்கோலங்கள், அவனது அசுத்த இச்சைகளுக்காக செய்யப்படுகின்றன. நான் இவ்வாறு கூறுவது மிகவும் வெளிப்படையாக இருக்கலாம். ஆனால் இதைத் தவிர வேறு எவ்விதம் கூறுவது என்று எனக்கு தெரியவில்லை. 50சாத்தானுடைய சுவிசேஷமானது, விஞ்ஞானம், முன்னேற்றம் இவைகளின் சுவிசேஷமாகும் என்று நாம் அறிவோம். சாத்தான் அந்த முன்னேற்றத்திற்குரிய விஞ்ஞானத்தை ஏதேன் தோட்டத்தில் பிரசங்கித்தான். தேவன் அதைப் பிரசங்கிக்கவில்லை. விஞ்ஞானமும், முன்னேற்றமுமே சாத்தானின் சுவிசேஷமாகும். அவற்றால் அவன் இன்று நம்மை எங்கு நடத்தியிருக்கிறான் என்று பாருங்கள் ஏதேன் தோட்டத்தில் சாத்தான் தனது இச்சுவிசேஷத்தை யாருக்கு பிரசங்கித்தான் என்பதைக் கவனியுங்கள். ஆதாமின் மணவாட்டியிடம் அதைப் பிரசங்கித்தான். அவள் அதை ஏற்றுக் கொண்டுவிட்டாள். தேவனுடைய வார்த்தையில் ஒன்றை சந்தேகிக்கும்படி அவளை அவன் வஞ்சித்துவிட்டான். அவன் எவ்விதம் கூறியிருக்கக் கூடும் என்பதைப் பார்ப்போம். அவன், ''இந்த பரிசுத்த சபையில், மரிப்பதென்பது விஞ்ஞானப் பூர்வமானதல்ல என்றும், அல்லது, ''மரணம் என்ற ஒரு விவேகமற்ற காரியத்தை விசுவாசியாமலிருக்க உனக்கு கல்வி பயிற்சி அளிக்கப்படும். தேவனுடைய வார்த்தை மரணத்தைப் பற்றி அவ்விதம் கூறியிருந்தாலும் எனக்கு அக்கரையில்லை; அது விவேகமற்றது என்று கூறியிருப்பான். 51ஓ! இன்று அவனைப் பாருங்கள். “தேவன் ஒரு நல்ல தேவன், நீ அவருடைய பரிசுத்த சபையில் இருக்கிறாய், ஆகவே நீ மரிக்க முடியாது'' என்று அவன் கூறி வருகிறான். ஆனால், தேவன் நீ மரிப்பாய் என்று கூறியிருந்தார். அதுவே நிலைநாட்டப்பட்டதாயிருக்கிறது. இன்று அவனைப் பாருங்கள். ”ஓ, நீ வெறுமனே சபையில் சேர்ந்து விடு, நீ அதைச் செய்கிறாய், இதைச் செய்கிறாய், என்பது ஒரு பொருட்டல்ல, சபைக்கு வா, ஒரு நல்ல அங்கத்தினராக இரு. உனது முடியை வெட்டிக் கொள்வது பற்றி சொல்வது எல்லாம் அர்த்தமற்றது. அரைக் கால் சட்டை அணிவது, வர்ணம் பூசிக் கொள்வது, நடனங்களுக்குச் செல்வது, எப்பொழுதாவது ஒருமுறை கொஞ்சம் மது அருந்துவது, இவையெல்லாம் உன்னை ஒன்றும் பாதிக்கப் போகிறதில்லை. நீ அதில்முழுவதுமாக ஈடுபடாத வரைக்கும் அது பரவாயில்லை, வெளிப்படையாகக் கூறுகிறேன், பிள்ளைகளாகிய நீங்கள், அதைக் கொஞ்சம் பருகிப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் அதை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம் என்று அவன் கூறுகிறான். இப்பொல்லாத காலத்தின் தேவன் அவன்தான். “தேவன் நல்ல தேவன்” எனக் கூறுகிறார்கள். நான் சலித்துப் போகிற அளவுக்கு அதிகமாக இவ்வார்த்தையைக் கேட்டிருக்கிறேன். தேவன் ஒரு நீதியின் தேவனும் கூட. பேரன்கள் சுற்று முற்றும் தள்ளிவிடுவதற்கும் அதினால் அவரது பேரப்பிள்ளைகள் பாவம் ஏதுவுற்றவர்களாயிருப்பதற்கும், தேவன் ஒன்றும் ஒரு வயதான, மனோபலமில்லாத பலவீனமான பாட்டனார் அல்ல; அவர் நீதியின் தேவனும், பரிசுத்தமான தேவனுமாயிருக்கிறார். தமது முதல் பிள்ளைகள் மூலம், அவர் அதை ஏதேன் தோட்டத்தில் நிரூபித்தார். அவரது வார்த்தைகளின் கோட்டை ஒன்றாவது நீங்கள் தாண்டினால் மரித்துவிடுவீர்கள். அதே காரியம் இன்றும் பொருந்துகிறதாயிருக்கிறது. 52அவன் ஆதாமின் மணவாட்டியாகிய ஏவாளிடம், சமூக, விஞ்ஞான பூர்வமான கல்வியின் முன்னேற்றம் பற்றிய சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான். அவள் அதை விசுவாசித்தாள், இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் மணவாட்டி என தன்னை அழைத்துக் கொள்ளும் சபையையும் இவ்விதமான வாக்குவாதங்களினால் நிரப்புவதில் அவன் வெற்றி கண்டுள்ளான், அது சரிதான். “ஓ, அது தேவனுக்குரியதல்ல. தேவன் மிகவும் நல்லவராக இருப்பதால் அதைச் செய்யமாட்டார். நீ சபைக்குப் போய்க் கொண்டிருக்கிற வரைக்கிலும், நீ விசுவாசிப்பாயானால்...'' என்று சாத்தான் கூறுகிறான். பிசாசு விசுவாசிக்கிறான், அவன் விசுவாசிக்கிறதாகச் காட்டிக் கொள்வதில்லை; அவன் வாஸ்தவமாக விசுவாசிக்கவே செய்கிறான். ஆனால் அவன் இரட்சிக்கப்படவில்லை. ''நீ விசுவாசித்தால்...'' அவன் முந்தின ஆதாமின் மணவாட்டியிடம் கூறியது போலவே, பிந்தின ஆதாமின் மணவாட்டியிடமும், ''இப்பொழுது தெய்வீக சுகமளித்தல் என்றொரு காரியமே இல்லை. அதை நம்மால் நிரூபிக்க முடியும், ஒருபொழுதும் அவ்விதமான முறையில் வியாதியுள்ளவர் தெய்வீக சுகம் பெற்றதாக நிரூபிக்க எந்தவொரு சம்பவமும் இல்லை. இயேசுவின் நாமத்தினால் உள்ள இந்த ஞானஸ்நானத்தைப் பொறுத்தமட்டில், “அதை நாம் ரோமாபுரியில் உள்ள நிசாயாவில் தீர்த்து வைத்துவிட்டோம்”. நானே சபையின் மேல் அதிகாரி என்பதை நீ உணரவில்லையா? என்று சாத்தான் கூறுகிறான். நிசாயா ஆலோசனை சங்கத்தின் போதுதான் மிருகத்தின் வாயிலிருந்து கள்ளத்தீர்க்கதரிசி போன்ற மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுச் சென்றன. அவன் மேலும், ''திரித்துவ தேவர்களை நாங்கள் விசுவாசிக்கிறோம்'' என்று கூறுகிறான். ஓ, அது மிகவும் அஞ்ஞானத் தன்மையுள்ளதாயிருக்கிறது. நீங்கள் ஒரு பொழுதும் இப்படிப்பட்ட காரியத்துடன் தேவனுக்கு முன்பாக வந்து அவர் சமுகத்தில் நிற்க முயற்சிக்க வேண்டாம். “ஓ, நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டங்களைக் கூறி கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தை எடுப்பதால், அது எந்தவிதமான வித்தியாசத்தையும் ஏற்படுத்திவிடவில்லை, அது அப்படித்தான் என்ன வேறுபாட்டை உண்டாக்கிவிடுகிறது?'' என்று கூறுகிறார்கள். 53அது நிச்சயமாக அதிகமான வித்தியாசத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது, ஒரு கூட்டம் பாப்டிஸ்டுகளை (அப். 19ன் படி எபேசு பட்டணத்தில் இருந்த, யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்ற சில சீஷர்கள் - தமிழாக்கியோன்) பவுல் கண்டபோது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் மேல் பரிசுத்த ஆவி வருவதற்காக அவர்கள் மீண்டும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றாக வேண்டும் என்று பவுல் கூறினான். அவன் வந்து அவர்களிடத்தில் இவ்வாறு கூறும் வரையிலும் அவர்களுடைய காரியமானது வித்தியாசமாகத்தான் இருந்தது. இதினிமித்தமாகத்தான், பவுல் அப்போஸ்தலன், “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக் கக்கடவன்...'' என்று குரலெழுப்புவதற்கு ஏதுவாயிற்று. நிச்சயமாக தவறான ஞானஸ்நானமானது ஒரு வேறுபாட்டை ஏற்படுத்தத்தான் செய்கிறது. “இந்நாட்களில் பரிசுத்தாவியின் அபிஷேகம் என்று ஒரு காரியமே இல்லை. அது அப்போஸ்தலருக்கு மட்டுமே உரியதாயிருந்தது. அது கடந்து போய்விட்டது. தீர்க்கதரிசிகள் என்ற ஒரு காரியமா? அப்படிப்பட்ட ஒரு காரியமே அறியப்பட்டதல்ல. அற்புதங்களா? அவைகள் விஞ்ஞானப் பூர்வமானதல்ல. மல்கியா: 4-ம் அதிகாரமா? அது வேறொரு காலத்திற்குரியது. யோவான்: 14:12-ஆ? ஓ, இயேசு உண்மையில் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. லூக்கா: 17:30-ஆ? அது ஒரு கட்டுக்கதை. இவை தவறாக வியாக்கியானிக்கப்பட்டுள்ளன. அது மூல வேதாகமத்தில் இல்லை” என்று இவ்வாறெல்லாம் கூறப்படுகிறது. இவ்விதமான அபத்தமான காரியங்களையெல்லாம், சர்வ வல்லமையுள்ள தேவன் நம் மத்தியில் இறங்கி வரும்பொழுது தவறானவை என்று நிரூபிக்கிறார். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்று தேவன் கூறும் பொழுது, அது சரியென்று அவர் நிரூபிக்கிறார். மற்றவர் அதைப் பற்றி கூறாமற் போனால் எனக்கு அக்கரையில்லை; தேவன் தமது சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறவராயிருக்கிறார். இக்கடைசி நாட்களில் இவைகளைச் செய்வதாக வாக்களித்திருக்கிறார். ''...சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்...“ என்று அவர் வாக்களித்தப்படியே தேவனுடைய குமாரனை வெளிப்படுத்துவதற்காக வெளிச்சம் இப்பொழுது இங்கே இருக்கிறது. 54கிழக்கில் உதிக்கும் அதே சூரியன்தான் மேற்கில் அஸ்தமிக்கிறது. ''பகலுமல்ல, அது இரவுமல்ல... (சகரியா 14:7) என்று தீர்க்கதரிசி கூறினார். சூரியனை மேகங்கள் மறைத்து அதினால் பொழுது மந்தாரமாய் இருக்கிற வேளை அது'', ''...சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்...'' என்று கூறப்பட்டுள்ளது. அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிற அதே குமாரன், கிழக்கில் உதித்த அதே குமாரன்தான். இக்கடைசி நாட்களில், நாளானது முடியும் முன்னர், மீண்டும் மேற்கில் எழும்பப் போவதாக முன்னுரைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இவ்வசனத்தை எவ்வாறு வியாக்கியானிக்கிறார்களோ எனக்குத் தெரியாது; ஆனால் தேவன் தமது சொந்த வார்த்தையை அவரே வியாக்கியானிக்கிறவராயிருக்கிறார், அவர் அதை நிரூபிக்கிறார். இது சாயங்கால வேளையாயிருக்கிறது. வருந்தத் தக்கதான காரியம் என்னவெனில், கிறிஸ்துவின் மணவாட்டியென்னப்படுகிறவள் மீண்டும் அதற்கு (வஞ்சகத்திற்கு - தமிழாக்கியோன்). இரையாகிவிட்டாள். அவள், உறுதிப்படுத்தப்பட்ட சுத்தமான தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதற்குப் பதிலாக, ஏதோ, சில வேதக் கல்லூரிப் பிரசங்கியின் மேதாவித்தனமான அறிவை எடுத்துக் கொண்டு, விழுந்துவிட்டாள். 55இப்பொழுது, தேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊழியக்காரர்களே, நீங்கள் என்னோடு கருத்து வேறுபாடு கொள்ளக் கூடும். நான் உங்களை புண்படுத்தவில்லை. நான் எனது சொந்தக் குழுவினருக்கு பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் கண்டு கொண்டுள்ள காரியங்களைப் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டு, அது சரியானது தான் என்று தேவன் அவற்றை நிரூபிப்பதைப் பற்றி அவர்களிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உட் கார்ந்து கேட்க விரும்பினால் அதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். அப்படியானால் அதற்கு செவி கொடுங்கள். இதுவே அந்த வேளையாயிருக்கிறது. வார்த்தையை வியாக்கியானிப்பதற்கு, தேவனுக்கு யாரும் தேவையில்லை. உங்களது உலகப் பிரகாரமான அறிவில் ஒன்றுமில்லை. நீங்கள் ஒரு வேளை பல்வேறு பட்டங்களை உடையவர்களாக இருக்கலாம்; அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல. தேவன் தாமே தமது சொந்த வார்த்தையை வியாக்கினிக்கிறவராயிருக்கிறார். அவர் அதைப்பற்றி வாக்குரைத்திருக்கிறார், அது இங்கே இருக்கிறது. ஆனால், வேதக் கல்லூரிகளின் அறிவு, மதஸ்தாபன பிரச்சாரம் ஆகியவை, இவ்வுலகை, மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படும்படி வைத்திருக்கிறது, அம் மிருகத்தின் சாவுக்கேதுவான காயமானது குணமாகி, அஞ்ஞானத்திலிருந்து போப்பின் மார்க்கத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறது. அவள் எங்கே நோக்கிப் போய் கொண்டிருக்கிறாள் என்று பாருங்கள். அவள் அதை விசுவாசிக்கிறாள்; சாத்தான் அவளுக்குச் சொல்லிக் கொடுக்கிறதான அந்த அறிவை விசுவாசிக்கிறாள். 56இப்பொழுது கவனியுங்கள்! நியமிக்கப்பட்ட இரு மணவாட்டிகளுமே தேவனுடைய வார்த்தைக்கு எதிராக சாத்தான் புகட்டும் அறிவை விசுவாசிக்கிறார்கள். ஆதாமின் மணவாட்டி தேவனுடைய வார்த்தைக்கெதிராக, சாத்தானின் அறிவை விசுவாசித்தாள். கிறிஸ்துவின் மணவாட்டியென்னப்பட்டவளும், தேவனுடைய வார்த்தைக்கெதிராக பேரறிவு படைத்த இந்த பொல்லாத காலத்தில் சாத்தானின் அறிவை விசுவாசித்திருக்கிறாள். மாம்சத்தின்படியான ஏவாள், அதை விசுவாசித்து, முழு மானிட இனத்தையும் மரணத்திற்குள் ஆழ்த்தினாள். பூமியின் மனிதனாகிய மாம்சத்துக்குரிய ஆதாமும், அவன் தன் மனைவியாக ஏவாளை சுவீகரித்துக் கொள்ளும் முன்னர், அவள் முழு மானிட இடத்தையும் மரணத்திற்குள்ளாக்கினாள். அது விஞ்ஞான பூர்வமானதோ அல்லவோ. நாம் மரிக்கிறோம் என்பது உண்மை. ஏனெனில் தேவன் நாம் அவ்வாறு மரிப்போம் என்று கூறியிருக்கிறார். நீங்கள் பரிசுத்த ஏதேனிலிருந்தாலும் சரி, அல்லது பரிசுத்த சபை, பரிசுத்த மத ஸ்தாபனத்திலிருந்தாலும் சரி, அது எப்படியிருந்த போதிலும் உங்களுக்கு தேவனுடைய வார்த்தையானது உறுதிப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ள போது அதை நீங்கள் சத்தியமென்று விசுவாசிக்காமலிருக்கும் நாளில், சாகவே சாவீர்கள். அந்நாளில்தானே நீங்கள் தேவனிடத்திலிருந்து உங்களையே பிரித்துக் கொண்டுவிடுகிறீர்கள். ஒரு வார்த்தையைக் கூட்டவோ, குறைக்கவோ யார் அதைச் செய்தாலும், அந்த நாளில் தானே நீங்கள் சாவீர்கள். 57கவனியுங்கள், ஆதாமின் மணவாட்டியானவள் தனது இனமாகிய மானிடவர்க்கம் இயற்கை மரணம் எய்தக் காரணமாயிருந்தாள். அதேபோல், இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவுக்கு மணவாட்டியாக நியமிக்கப்பட்டவள், முழுச் சபையுமே, மத ஸ்தாபன மரணத்திற்குள்ளாகி விஞ்ஞானப் பூர்வமான, பேரறிவு படைத்த பெரிய மத ஸ்தாபனங்களினால் சபையானது மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளும்படி செய்திருக்கிறாள். நாங்கள் பாப்டிஸ்ட்டுகள், நாங்கள் பிரெஸ்பிடேரியன்கள், நாங்கள் பெந்தெகொஸ்தேயினர் என்று கூறிக் கொள்கின்றனர். ''நாங்கள் இன்னின்னதைப் பெற்றிருக்கிறோம். எங்களுக்கு அதிகம் ஆஸ்திகள் உள்ளன. நாங்கள் அரசின் கவனத்தையே கவர்ந்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் எங்கள் சபை பரவியிருக்கிறது. மேலும் இந்நகரத்தின் நகர்மன்றத் தலைவர் (Mayor) எங்கள் சபைக்குத் தான் வருகிறார். ஏன், ஜனாதிபதி கூட எங்களோடு பூஜைப் பலிக்கு வருகிறார்'' என்று இவ்வாறெல்லாம் கூறுகிறார்கள். இம்முழு உலகத்தின் சபையானது ஒரு ஆவிக்குரிய மத ஸ்தாபன மரணத்திற்குள்ளாக மூழ்கிவிட்டது. அவள் மரித்திருக்கிறாள். நீங்கள் கூறுகிறீர்கள், ''நாங்கள் நிறைய இடங்களில் வியாபித்திருக்கிறோம்“ என்று. இயேசு, “...நோவாவின் காலத்தில் நடந்தது போல மனுஷக்குமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்; அப்பொழுது சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் இரட்சிக்கப்பட்டார்கள்” என்று கூறினார். லோத்தின் நாட்களில் மூன்று பேர் மாத்திரம் சோதோமிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்கள். இப்பொழுது, ஏற்கெனவே ஒரு கூட்டம் அங்கிருந்து வெளியே வந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அன்று மனுஷகுமாரன் வெளிப்பட்டபோது நடந்தது போலவே இப்பொழுதும் நடக்கிறது. உற்று நோக்குங்கள்; எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். 58சாத்தான் ஒரு சபையின் பேரால் அவளுக்குத் தந்திருக்கிறதான கல்வித் திட்டத்தின் கீழாக உள்ள கல்வியின் மூலம், விஞ்ஞானப் பூர்வமான தலைமையை உலகானது ஏற்றுக் கொள்ளும்படி அவள் செய்திருக்கிறாள். இப்பிரபஞ்சத்தின் தேவனை நான் உங்களுக்கு சித்தரித்துக் காட்டுகிறேன். ஏவாள் என்ற முறையில், அவள் தனது கரத்தில், தேவனுடைய வார்த்தையின் நிறைவைப் பெற்றிருந்தாள், அவள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், அவள் அதைப் பற்றி என்ன செய்தாள்? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு அவள் காத்திருப்பதற்குப் பதிலாக, விஞ்ஞானமானது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் சீஷர்களுக்கு மாத்திரம் உரியது என்று தன்னிடம் நிரூபிக்க அவள் விட்டுவிட்டாள். தெய்வீக சுகமளித்தல் தொடர்ந்து நடக்கவிடுவதற்குப் பதிலாக மரித்தோரை அவள் எழுப்பி, மகத்தான அற்புதங்களை அவள் இந்நேரம் செய்து கொண்டிருக்க வேண்டும். மதச்சார்புள்ள மனிதன் தேவனுடைய வார்த்தையை, சாத்தானின் தலைமையின் கீழ் எடுத்துக்கொண்டு, அது இன்னொரு காலத்திற்குரியது என்று கூறும்படி விட்டுவிட்டாள். அவள் அதை விசுவாசித்துவிட்டாள். 59“...நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்...'' என்றும், ”...உலகமெங்கும் புறப்பட்டுப் போய் சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்...'' என்றும், “விசுவாசிக்கிறவர்களைப் பின் தொடரும் அடையாளங்களாவன...'' என்றும் இயேசு கூறினார் (யோவான்: 14:12, மாற்கு: 16:15-17). ஆனால் அவளோ அவை ஒவ்வொன்றையும் மறுதலிக்கிறாள். அவள் எல்லா தெய்வீகமான காரியங்களையும் மறுதலிக்கிறாள். ஏனெனில், அவைகளை வேதத்தைக் குறித்து உலக அறிவு கொண்டுள்ள அபிப்பிராயத்திற்காக விட்டுக் கொடுத்துவிட்டாள். குருமார்கள், பரிசுத்த தந்தை என்றழைக்கப்படுபவர்களும், பிஷப்புகள், ஆர்ச் பிஷப்புகள், மாவட்ட மூப்பர்கள் (District Presbyters) பொது கண்காணிப்பாளர்கள் (General Overseers) என்றெல்லாம் தங்களை அழைத்துக் கொள்வோரும், தங்களது சொந்த வியாக்கியானத்தை வேதாகமத்திற்கு அளித்துவிட்டார்கள். பன்னிரெண்டாம் மணியைப்போல், அவர்கள் அங்கே முழுவதும் மரித்து அமர்ந்திருக்க தேவன் விட்டுவிட்டார். இக்கடைசி நாட்களில், மீதமாயிருப்பதெல்லாம், கொஞ்சம் பெந்தெகொஸ்தேயினர் தான். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அவர்கள் மிக பலத்த சப்தத்துடன் இசைபாடி, மேடைகளில் மேலும் கீழும் ஓடி, அந்நிய பாஷைகளில் பேசி, சப்தமிட்டு, தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டு அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று நீங்கள் அவர்களிடம் கூறிப் பாருங்கள். அவர்கள் உங்களை எள்ளிநகையாடுவார்கள். ஆனால் தேவனோ தமது வார்த்தையைானது அவர் கூறின விதமாகவே இருக்கிறதென்று நிரூபித்துக் கொண்டு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார். 60கவனியுங்கள். சாத்தானானவன், ஏவாளைப் பங்கெடுத்துக் கொள்ளும்படி சொல்லிய மரமானது நன்மை தீமையின் விருட்சமாகும். அது ஒரு கலப்படமான மரமாகும். இப்பொழுது நாம் வாழும் நாளைப் பாருங்கள். அவன் தனக்கு ஒரு மணவாட்டியை அழைத்து ஒரு சபையை அடைந்து கொள்ளுகிறான், அச்சபையானது, தான் நன்மையை செய்கிறதாக கூறிக் கொள்ளுகிறது. ஆனால் வார்த்தையை மறுதலிப்பதின் மூலம் அது தீமையானதாகவே இருக்கிறது; ஒரு கலப்படமான மரம். ''அவர்களுக்கு சமுதாயத்தில் பேர் பெற்றவர்கள் உண்டு, அவர்கள் இன்னின்ன காரியங்களுக்கு உதவி செய்கிறார்கள். செஞ்சிலுவைச் சங்கம் கூட அவைகளை அங்கீகரிக்கிறது. எல்லா கல்விச் சாலைகளும் கூட அங்கீகரிக்கின்றனர்“ என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் ஒரு வார்த்தையை மறுதலித்தால்; நீங்கள் மரிப்பதற்கு செய்ய வேண்டியதெல்லாம் அதுதான். நீங்கள் எவ்வளவு பேரறிவு படைத்தவர்களாயிருந்தாலும், அது எவ்வளவு நன்மையாக இருந்தபோதிலும், சரி, அவை ஒரு பொருட்டல்ல. ”கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்கும்...'' என்று இயேசு கூறியுள்ளார். ஒரு பொட்டு புளிப்பானது பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்கும். ஒரு வேத வசனத்தை நிலைகுலையச் செய்வது, தள்ளிவிடுதல் போன்றவை முழு சித்திரத்தையும் கெடுத்துப்போடும். என் பாதம் இருக்க வேண்டிய இடத்தில் என் புயம் இருந்தால் எப்படியிருக்கும்? என் கை இருக்க வேண்டிய இடத்தில் காது இருந்தால் எப்படியிருக்கும்? கொஞ்சம் புளிப்பு முழுவதையும் புளிப்பாக்கும். “அது சரியென்று நீங்கள் எப்படி அறிவீர்கள்?'' என்று கேட்கப்படுகிறது. அது சரியென்று தேவன் நிரூபிக்கிறார். அதை அவர் உறுதிப்படுத்துகிறார். அவ்விதமாகத்தான், அது சரியா, சரியல்லவா என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். மரிப்பதற்கு, ஒரு வார்த்தையை மறுதலித்தல் போதுமானது. அப்பொழுது முழு மானிட இனத்திற்கும் சரீர மரணத்தை ஒரு வார்த்தையை மறுதலிப்பதானது கொண்டு வந்தது போலவே, இப்பொழுதும் இந்த பொல்லாத காலத்திலும், அதேவிதமாக, ஆவிக்குரிய மரணமாகிய விளைவை அது கொண்டு வந்துள்ளது. 61இக்காலத்தில் மக்கள் தங்கள் புத்தியில் சார்ந்து கொள்ளும்படி, நோவாவின் காலத்தில் காணப்பட்ட அதே விஞ்ஞான யுகத்தை இப்பொழுது மீண்டும் எவ்வாறு சாத்தான் திரும்பக் கொண்டு வந்துள்ளான் என்பதைக் கவனியுங்கள். நீதிமொழிகளில் வேதம், ''உன் சுயபுத்தியின் மேல் சாயாதே“ என்று கூறுகிறது (நீதி.3:5) ”...தேவனே சத்தியபரர் என்றும் எந்த மனுஷனும் பொய்யன் என்றும்...'' (ரோமர்.3:4) ஆனால் சாத்தானோ, ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதிமுதல், தன் அறிவினால் மக்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து கொள்ளச் செய்தான். அவனது அந்த மகத்தான மேக்ஸ் ஃபேக்டர் (Max factor) அழகு சாதனங்களால் அவன் ஸ்திரீகளை அழகுப்படுத்தி, அதன் காரணமாக, தேவபுத்திரர் பாவத்தில் விழுந்து, அவர்களை விவாகம் செய்து கொள்ளும்படி செய்தான். நோவாவின் காலத்தில் ஸ்திரீகள் மிகவும் செளந்தரிமுள்ளவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு தெருவில் போகிற சாதாரண ஸ்திரீயை எடுத்துக் கொள்ளுங்கள். எனது நாளுக்கு முன்பே இருந்த பேர்ல் ஓப்ரையன் (Pearl O' Brien) என்ற உலகிலேயே மிகவும் அழகானவள் என்று கருதப்பட்ட பெண்மணியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் இன்று பள்ளிக் கூடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிற எந்த ஒரு பெண்ணும் அவளைக் காட்டிலும் இருமடங்கு அழகுள்ளவளாக இருக்கிறாள். அது ஏன் அவ்வாறுள்ளது? இக்கடைசி நாட்களில் ஸ்திரீகள் முன்னைவிட அழகாயிருப்பது சம்பவிக்க வேண்டிய ஒன்றாயிருக்கிறது. அவர்கள் தங்கள் முடியை வெட்டிக் கொண்டுள்ளார்கள். சிறு பெண்களின் உடைகளை அவர்கள் அணிகிறார்கள். சட்டைகளையும் 'பிகினிஸ்' (Bikinis) என்றதான இரு சிறு துண்டுத் துணிகளால் ஆன குளியல் ஆடைகளையும் அணிகிறார்கள். தங்கள் உடல்களில் வர்ணங்களைப் பூசிக் கொள்ளுகிறார்கள். உதடுகள், கன்னங்களில் பூசிக் கொள்வதான ஒருவகை சிவப்பு நிற அழகு சாதனங்களை (Rouge) அவர்கள் உபயோகித்து, அவர்களில் இல்லாத ஒரு அழகுக்குள் தங்களை ஆக்கிக் கொள்ள முயலுகிறார்கள். பார்த்தீர்களா? அவர்கள் விஞ்ஞானப் பூர்வமான அறிவினால், இவைகளை சாதித்துக் கொள்ள முடிகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உணவுக்காக செலவிடுவதைப்போல், இரண்டு அல்லது மூன்று மடங்கு, பெண்கள் தங்கள் அழகு சாதனங்களுக்காக செலவிடுகிறார்கள் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அழகு சாதனங்களுக்காக இவ்வாறு செலவிடுவது உண்மையென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 62கவனியுங்கள் தேவபுத்திரர், மனுஷ குமாரத்திகளை - தேவ குமாரத்திகள் அல்ல மனுஷ குமாரத்திகளை செளந்தரியவதிகள் என்று கண்டார்கள். அதுதானே, தேவபுத்திரரை இவ்வஞ்சகத்தில் விழச் செய்து, இவ்விதமான ஸ்திரீகளை அவர்கள் பெண் கொண்டார்கள். இச்செயலானது, இன்றைக்கு இருப்பதைப் போல், வேசித்தனத்தின் காலத்தைக் கொண்டு வந்தது, சோதோமிலும் அவ்வாறான நிலைமை இருந்தது. அவ்வாறு இன்றும் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது ஸ்திரீகளும், ஆண்களும், மனைவிகளையும், கணவன்களையும் மாற்றிக் கொள்கிறார்கள். இந்த மனைவியைப் பிடிக்கவில்லையெனில் நெவாடா மாநிலத்தில் உள்ள ரெனோ (Reno, Nevada) வுக்கு போய் அங்கே ஒரு பெண்ணை மணப்பதும், அவளை பதினைந்து நிமிடங்களுக்குள் விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் வேறொரு பெண்ணை மணப்பதுமாக இப்படியெல்லாம் நடக்கிறது. அவர்களால் மேற்கொள்ள முடியாத அளவுக்கு ஸ்திரீகள் அத்தனை செளந்தர்யமாயிருக்கிறார்கள். அது என்ன? அது பிசாசு! பாருங்கள், சாத்தான் இன்னும் அழகில் இருக்கிறான். கவனியுங்கள்! கவனியுங்கள். அந்தப் பாவம் அவர்களுக்கு மன்னிக்கப்படவேயில்லை. அந்த செளந்தர்யமும், விஞ்ஞான பூர்வமான மிகவும் பொல்லாத்தான காலமானது இப்பூமியிலிராதபடிக்கு தேவனால் நிர்மூலமாக்கப்பட்டது. மனுஷகுமாரன் வருவதற்கு முன்னரும், மீண்டும் இவ்வாறு இருக்கும் என்று இயேசு கூறியுள்ளார். அது சரிதான். கவனியுங்கள் “...நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும் என்று இயேசு கூறினார்”. இப்பொழுது கவனியுங்கள். தேவபுத்திரர் செளந்தர்யமுள்ள மனுஷ குமாரத்திகளை மணந்து கொண்டார்கள். தேவன் அதை ஒருபோதும் மன்னிக்கவேயில்லை. 63பிலேயாமும் அவ்வாறே தனது போதகத்தால், மோவாபியிரான செளந்தர்யமும், அறிவு நிறைந்த விஞ்ஞானப் பூர்வமான ஸ்திரீகளை அனுப்பினான்! அந்த ஸ்திரீகள், தங்களது சரசமாடும் விழிகளாலும், அழகு சாதன வர்ணங்களாலும், பவுடர்களாலும், (முகத்திற்குப் போடும் புட்ட மாவு) மற்றும் அருமையான வாசனை திரவியங்களாலும் தங்களை அலங்கரித்து மயக்கினார்கள், தேவபுத்திரர் தங்களது காய்ந்துப் போன நிலையில் உள்ளதும், தங்களை ஒப்பனை செய்து கொள்ளாமலும் இருந்த சொந்த மனைவிகளுக்கு எதிராக இவ்வாறான கவர்ச்சியில் விழுந்துவிட்டார்கள். அவர்களை இவ்வாறு மயக்கி, ''நாம் ஒருவரையொருவர் மணந்து கொள்வோம். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே இனம் தான்'' என்றார்கள். அது ஒரு பொய்யாகும். அது சாத்தானின் பொய்யும், தேவபுத்திரர் மனுஷ குமாரத்திகளை மணந்து கொள்ளச் செய்வதற்காக அவன் செய்த சாதனையுமாகும். அது கள்ளத்தீர்க்கதரிசியாகிய பிலேயாமுக்கு சாத்தான் கூறிய பொய்யாகும். பிலேயாம் மோசேக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைக்க முயற்சி செய்தான். ''நாம் இரு சாராரும் ஒரே தேவனை தான் விசுவாசிக்கிறோம். ஒரே விதமான பலிகளையே நாம் இருவரும் செலுத்துகிறோம். நாம் யாவற்றையும் ஒரே விதமாகவே செய்கிறோம்'' என்று அவன் கூறி, இரு இனத்தாரையும் ஒன்றுபடுத்த முயன்றான். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்படி அது அசலுக்கு மிகவும் நெருக்கமாயிருந்தது. அவளுடைய ஜனங்களிடத்திலிருந்து பிரிந்து வந்துவிடுங்கள். அவளோடு உங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இருக்கக்கூடாது. 64தேவன் தமது வார்த்தையை காயீனின் பொல்லாத சந்ததிக்கு வியாக்கியானிப்பது சாத்தியமில்லை. தேவன் தம் வார்த்தையை அவர்களுக்கு வியாக்கியானிப்பது இல்லை. கவனியுங்கள் (...ஒலிநாடாவின் முதல் பக்கம் முடிந்து இரண்டாம் பக்கம் முடிவற்று தொடங்குகிறது. ஆசிரியர்)... அவர் அழிப்பதான உலகை மிகவும் அழகுள்ளதாகவும், விஞ்ஞான பூர்வமானதாகவும், பாவம் நிறைந்ததாகவும், அறிவினாலும் நிறைத்து உருவாக்குவாரா? உலகை தேவன் அவ்வாறு செளந்தர்யமுள்ளதாக ஆக்குவாரா? இங்கு கவனியுங்கள், தேவன் தமது குமாரத்திகளை வசீகரமுள்ளவர்களாக்கி, பால் உணர்வைத் தூண்டும் வகையில் அவர்களை உடுத்துவித்து, அதினால் அவரது குமாரர்கள் தேவ குமாரத்திகளைப் பார்த்து, இச்சித்து, விபச்சாரம் செய்யும்படி அவ்விதமான நிலையைத் தேவன் தோற்றுவிப்பாரா? என்ன? தேவன் அவ்விதமானதொரு காரியத்தைச் செய்வாரா? இந்த நிர்வாணமான, தங்களைத் துயில் உரித்துக் கொண்டுள்ள இந்த லவோதிக்கேயினர் இப்பிரபஞ்சத்தின் தேவனை தங்களது கோட்பாடுகளினாலும், கல்வியினாலும், தங்களின் புத்தி சாதுர்யத்தினாலும், அழகினாலும் தொழுது கொள்கிறார்கள். “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்” (வெளி. 18:3) என்று வேதம் கூறுகிறது. ஒவ்வொன்றும் நூறு இராத்தல் எடை உள்ள அத்தனை பெரிய கற்களை தேவன் வானத்திலிருந்து வருஷிக்கப் பண்ணி, அவ்வாறு அவளை கல்லெறிந்தே நிர்மூலமாக்கிவிடுவார். தமது நியாயப் பிரமாணங்களை மீறினவர்களை இவ்வாறு கல்லெறிந்து கொல்வதைப் பற்றி வார்த்தை கூறுகிறது போல் இது சம்பவிக்கும். நல்லது, தேவன் அவ்வாறு இப்படிப்பட்ட ஜனங்களுக்கு தமது வார்த்தையை வெளிப்படுத்தினார் என்றால், அவர் தமது நோக்கத்தை, திட்டத்தை தாமே முறியடிப்பது போலாகிவிடும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு தேவன் ஒன்றும் அறிவில்லாதவரல்ல, அவரே எல்லா ஞானத்தின் உறைவிடம். ஆகவே, இந்த சரக்கு எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா? அது சாத்தானிடத்திலிருந்து வருகிறதாயும், இன்னும் சாத்தானுடையதாகவும் உள்ளது. சபையானது அதை விசுவாசித்துவிட்டது. 65ஸ்திரீகளே, இப்பொழுது தேவனுடைய வார்த்தையை தெளிவாக உங்களுக்கு எடுத்துக்காட்ட நான் என்னால் இயன்றதைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஸ்திரீயானவள் தன் தலை முடியை வெட்டிக் கொண்டாளானால், தன் தலையாகிய கணவனை அவள் கனவீனப்படுத்துகிறாள் என்று வேதம் கூறுகிறது. தேவன் கணவனுக்குத் தலையாயிருக்கிறார். எனவே, அவள் தேவனையும், தன் கணவனையும் கனவீனப்படுத்துகிறாள். இப்பொழுது, இக்காரியம் இவ்வுலகத்தின் சபை அமைப்புக்கு யார் தலையாயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதன் தலை யார் என்பதை இது காட்டுகிறது. அது தானே மேலான (Super) அறிவு படைத்த, மேலான மனிதனின் (Superman) அறிவு கொண்ட சாத்தான்தான். அவர்கள் யாவரையும் விட அவனுக்கு அதிகம் தெரியும். வார்த்தை என்ன கூறுகிறதோ அதைப்பற்றி அக்கரைப்படாமல், அவன் தேவனுடைய வார்த்தைக்கு, இந்த பொல்லாத காலத்துக்கென தன் சொந்த வியாக்கியானத்தை உடையவனாயிருக்கிறான். 66முழு உலகமும் மிருகத்தை வணங்கச் செய்வதற்காக, ஐக்கிய கிறிஸ்தவ மார்க்கத்தின் பெயரால், உலக சபைகளின் ஆலோசனை சங்கம் (World Council of Churches) என்ற ஒரு மகத்தான மத ஸ்தாபன சபையை அவன் கட்டுவதற்கு திட்டமிடுகிறான். அதைக் கவனியுங்கள். அதைக் குறித்து வேதத்தில் நீங்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? வெளிப்படுத்தின விசேஷம் 13:6,8 அதுதான் நவீன பாபேல் கோபுரமாகும். எவ்வாறு, மாய்மாலக்காரனாகிய அந்த நிம்ரோது என்பவன் அந்தப் பெரிய கோபுரத்தைக் கட்டி, சிறிய நகரங்கள் அதற்கு கப்பங்கட்டும் படி செய்தான் என்பது உங்கள் நினைவில் உள்ளதல்லவா? பாபிள், பாபேல் (BABBLE AND BABEL) இரண்டும் ஒன்றேதான். (பாபிள் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ''உளறுதல்“ என்று அர்த்தம் - தமிழாக்கியோன்) அதன் பெயர் நாளாக ஆகமாறிவிட்டது. இப்பொழுது பாபிலோனாக இருப்பது ரோமாபுரியாகும். முழு உலகமும் பாபிலோனிடத்திற்கு உலக சபைகளின் ஆலோசனை சங்கம் மூலம் கொண்டு வரப்படுகிறது. அந்த ஆலோசனை சங்கம், யாவரும்அவளைப் பணிந்து கொள்ளச் செய்துவிடும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அறியாமலேயே மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்வீர்கள். ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ வார்த்தைக்கு செவிகொடுத்து, அதைவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். 67தேவனுடைய வார்த்தைக்கு, மத ஸ்தாபனமானது எவ்வளவு முரணாயுள்ளது! தேவன் ஒருபோதும் ஸ்தாபனத்தை உடையவராயிருக்கவில்லை. எந்த ஒரு சபை ஸ்தாபனத்துடனும் தேவன் ஒருபோதும் தொடர்பு கொண்டதில்லை. எந்தவொரு மத ஸ்தாபனத்திலும் அவர் இடைபட்டதில்லை. ஒரு சபை ஸ்தாபனத்திலிருந்து தீர்க்கதரிசி எப்பொழுதாவது தோன்றியதாக வரலாற்று ஆசிரியர் யாராகிலும் எனக்கு காண்பிக்கக் கூடுமோ! ஒரு சபையானது எப்பொழுதாவது ஒரு மதஸ்தாபனமாக அது நிறுவப்பட்ட பின்பு, தேவனால் அது ஆசீர்வதிக்கப்பட்டதுண்டோ என்று எனக்குக் காண்பியுங்கள். ஸ்தாபனமாக அவள் சபையை ஆக்கியதுமே, அவள் தேவனால் ஒதுக்கித் தள்ளிப் போடப்பட்டாள். தனது தலைவர்கள் பிசாசினிடமிருந்து பெற்றுக் கொண்ட அந்த அதிமேதாவித்தனமான ஞானத்துடன் அவள் மரித்து போய், கிறிஸ்துவின் பரிபூரண வளர்ச்சிக்குள் வளர்ந்து வந்த தேவனுடைய வார்த்தையை நிராகரித்தாள். இப்பொழுது அது தலைப் பகுதிக்கு வந்திருக்கிறது. எவ்வளவு முரணாயிருக்கிறது... சாயங்கால வெளிச்சத்தின் பிள்ளைகளே அவிசுவாசிக்கும் ஏவாளை விட்டு விலகுங்கள். இப்பொல்லாத காலத்தின் தேவனாகிய சாத்தானானவன் இப்பொல்லாத காலத்தின் மக்களுக்கு தனது அறிவை அளித்து, அவர்களைத் தனது கலப்படமான மரமாகிய நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கச் செய்துள்ளான். ஒரு மகத்தானதொரு கிறிஸ்தவ நாகரீகத்தை, தன்னுடைய நன்மை தீமை அறியதக்க அறிவினால் கட்டிக் கொண்டிருக்கிறதாக அவன் கூறுகிறான். ஆனால் கிறிஸ்துவின் எளிய கற்புள்ள கன்னிகையாகிய மந்தை - வார்த்தை மணவாட்டியானவள் - அவனுடைய அறிவைப் பற்றி அக்கரை கொள்வதில்லை. அவள் அவனிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறாள். அது என்ன? அவளைக் குறித்து ஒரு நிமிடம் பேசுவோம். அவள் தனது ஆண்டவருக்காகவும், அவரோடு வாழவிருக்கும் ஆயிரமாண்டு தேன் நிலவுக்காகவும் காத்திருக்கிறாள். அவள் வார்த்தை மணவாட்டியாயிருக்கிறபடியால், வார்த்தை மணவாளனோடு இருப்பாள். 68அறிவு, நாகரீகம் என்பவற்றிற்கும், உண்மையான கிறிஸ்தவத்திற்கும் பொதுவில் ஒன்றுமில்லை. இரண்டுக்கும் இடையில் பொதுவான அம்சமேதும் இல்லை. நாகரீகமானது அறிவினால் உண்டானது. நாம் யாவரும் அதை அறிவோம். அறிவானது ஏதேன் தோட்டத்திலிருந்து புறப்பட்டு வந்தது. அவன் ஏதேனில் பிரசங்கித்ததைக் கொண்டு அதை நிரூபித்திருக்கிறான். அறிவானது மரணத்தைப் பிறப்பிக்கிறது. அது சரிதானே? ஏதேன் தோட்டத்தில் மரணத்தைப் பிறப்பித்தது எது? அறிவுதான். நல்லது, அது தேவனால் உண்டாயிருக்க முடியாது, அப்படியானால் அது பிசாசினால் தான் உண்டானது ஆகும். ஓ, அப்படியென்றால் அது நன்மையானதா? அறிவு, விஞ்ஞானம், கல்வி இவையாவும் தேவனுக்கும் எப்பொழுதும் உள்ள பெரிய தடைகளாகும். அவை பிசாசினால் உண்டானவை. இந்த கருத்தை எதிர்த்து எழுதப்பட்ட கடிதங்கள் சில எனக்கு கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அவைகளை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கலாச்சாரமானது நம்மை இப்பொழுது எதில் கொண்டு போய்விட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். அது என்ன செய்திருக்கிறது என்பதைப் பாருங்கள். நாம் இப்பொழுது எங்கிருக்கிறோம்? நமது விஞ்ஞானத்தினால், நமது சுய புத்தியின் மூலமாக உள்ள காரியங்களுக்கு சாய்ந்துவிட்டோம். “தேவனைப் பற்றி என்ன? அவர் அறியாமையுள்ளவரா? என்று நீங்கள் கேட்கலாம். ஓ, இல்லை, தேவன் பூமியை மீண்டும் தம் கையில் கொள்ளும்போது, அவரது சொந்த நாகரீகத்தை இப்பூமியில் ஸ்தாபிப்பார். இது சாத்தானின் உலகமாயிருக்கிறது; அவன் இப்பொழுது, உலகப்பிரகாரமான, விஞ்ஞான பூர்வமான அறிவின் தேவன். ஆனால் தேவனோ, தமது சொந்த ரகமான நாகரீகத்தை ஸ்தாபிப்பார். அது இவ்விதமான நாகரீகமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றைக்கு நாம் அடைந்திருக்கின்ற விதமான நாகரீகமாக அது இருக்காது. இல்லவே இல்லை! அந்நாகரீகம் முற்றிலும், அவருடைய வார்த்தையின்படியும், அவருடைய திட்டத்தின்படியும் இருக்கும். அப்பொழுது தற்போதைய பொல்லாத காலத்தின் தேவனானவன் அழிக்கப்பட்டு, அவனுடைய இராஜ்யமும் அவனோடு சேர்த்து நிர்மூலமாக்கப்படும். 69ஏதேன் தோட்டத்தில் தேவனுடைய வார்த்தையை திரித்துக் கூறுவதை ஆரம்பித்த சாத்தானைவிட, வேறு மேலான தலைவன், தற்கால நவீன அறிவு விரும்பும் காலத்திற்கு இருக்க முடியாது. ஆனால் அவன், தன் சுயபுத்தியின் மேல் சார்ந்து கொள்ளும் மனிதனுக்கு - நான் ஏற்கெனவே நீதிமொழிகள்:3:4-ல் இருந்து எவ்வாறு நாம் நமது சுயபுத்தியின் மேல் சாய்ந்து கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளேன் - அத்தகையோருக்கும் ஒரு தேவன் அவசியமாயுள்ளது. ஏனெனில் அவர்களும் மானிடர்தாம். அவர்கள் விருப்பத்தை அவன் நிறைவேற்றுகிறான். இந்தியர்கள் விக்கிரகங்களையும் சூரியனையும் மற்றும் பலவித காரியங்களையும் வணங்கி வந்தார்கள் என்பதை நாங்கள் அங்கு கண்டோம். மானிடர் என்ற முறையில் அவர்களுக்கு ஏதாவது ஒரு கடவுள் இருந்தாக வேண்டியுள்ளது. எனவே, இந்த மகத்தான பேரறிவுக் காலத்திற்கும் ஒரு கடவுள் தேவை. எனவே இப்பிரபஞ்சத்தின் தேவனென்னப்படுபவன், அறிவு, மத ஸ்தாபனம், விஞ்ஞானம் என்பவைகளாகி, தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவனாயிருக்கிறான். 70கவனியுங்கள், அவர்களது தேவன் அவர்கள் எப்படியிருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அவர்களை அவ்வாறே ஆக்கிவிடுகிறான். அவர்கள் மாம்ச இச்சையை விரும்புகிறார்கள். அதையே அவன் அவர்களுக்கு கொடுக்கிறான். “அவர்கள் பிகினிஸ்” (Bikinis) (இரு சிறு துணித்துண்டுகளால் தைக்கப்பட்ட குளியல் ஆடை - தமிழாக்கியோன்) அணிய விரும்புகிறார்கள், அணிந்து கொள்ளட்டும் (பார்த்தீர்களா?) அவர்கள் என்னென்ன காரியங்களைச் செய்ய விரும்புகிறார்களோ, அவைகளைச் செய்து கொள்ளட்டும். அவற்றால் எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்கள் ஆலயத்திற்குப் போகிறார்கள்; அவர்களது தாய் மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே, ப்ரெஸ்பிடேரியன் இவற்றில் இருக்கிறாள். “அவர்கள் அப்படியே இருக்கட்டும்'' என்று அவர்களது தேவன் கூறுகிறான். அவன்தானே இப்பொல்லாத காலத்தின் தேவனானவன். இக்காலம் புத்தி சாதுர்யமாயும், ஞானமுள்ளதாகவும், விஞ்ஞானப் பூர்வமாயும் அமைந்துள்ளது. அதற்கு விசுவாசம் தேவையில்லை. அதற்கு எதையும் நிரூபிக்க தேவையில்லை. அது ஏற்கெனவே அவர்களது அறிவினால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ”ஏன், இந்நகரத்திலேயே எங்களது சபை தான் பெரியது ஆகும். எங்களது போதகர் வேதபாண்டிதியத்தில் டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்“ எனக் கூறுகிறார்கள். அவர்களுக்கு விசுவாசம் தேவையில்லை. அவர்கள் தங்கள் அறிவில் சார்ந்து கொள்ளுகிறார்கள். தங்களது சபை ஸ்தாபனங்களினாலும், தங்கள் சமயக் கோட்பாடுகளினாலும், அவனை அவர்கள் தொழுது கொள்ளுகிற வரையிலும், அவர்கள் எவ்விதத்திலும் வாழ அவன் அவர்களை விட்டுவிடுகிறான். அங்கே ஒரு பெரிய கறுப்புக் கண் உள்ளது, அதை நோக்கி பாருங்கள். அது தேவனுடைய வார்த்தையை எள்ளி நகையாடுகிறது. தேவனுடைய வார்த்தைக்கு முரணானவைகளைப் பேசுகிறது. தேவனுடைய வார்த்தையானது உண்மையல்ல என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்க தங்களது அறிவினால் முயலுகிறார்கள். எப்படிப்பட்டதான காலத்தில் நாம் வாழ்கிறோம்! இக்காலத்தின் தேவனைப் பார்த்தீர்களா? 71ஆனால் தேவன், இந்நவீன எமோரியரின் மீறுதல்கள் நிறைவாகுமளவும் காத்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். கவலை வேண்டாம். தேவன் அவ்வேளையில் தமது மோசேயை ஆயத்தமாக வைத்திருப்பார். ஒருநாளில் அவ்வாக்குத்தத்த தேசத்திற்கு புறப்படும் யாத்திரை ஒன்று உண்டாயிருக்கும். அங்கே ஒரு மோசே மக்களை வெளியே அழைத்து பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களுக்கு திருப்புகிறவனாயிருப்பான். இந்நாட்களில் ஒன்றில் அது நிகழ்ந்துவிடும். “நல்லது, நாங்கள் எந்த அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பாருங்கள்” என்று நீங்கள் கூறலாம். நிச்சயமாக எமோரியருடைய பாவங்கள் இன்னும் நிறைவடையவில்லை. இந்நாட்களில் ஒன்றில் அது நிறைவடையும், அப்பொழுது அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளுவார்கள். நாகரீகமும், அறிவும், மக்களின் ரசனைக்கேற்றவாறு இருக்கும்படி தேவனுடைய வார்த்தையை திரித்துக் கூறுகின்றன. ஒவ்வொரு மதஸ்தாபனமும் அதையே செய்கின்றன. சாத்தான் தனது சொந்த சபைக்கு, தனது சொந்த சுவிசேஷமாகிய அறிவைப் பிரசங்கிக்கிறான். 72புதிய ஏற்பாட்டில் இரண்டேயிரண்டு சாராரைப் பற்றித்தான் கூறப்பட்டுள்ளது. ஒன்று தேவனுடைய பிள்ளைகள்; மற்றொன்று பிசாசின் பிள்ளைகளாகும். அதை நீங்கள் அறிவீர்களா? அதைக் குறித்ததான வேத வாக்கியத்தை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியெனில், 1யோவான்:3:10-ஐ குறித்துக் கொள்ளுங்கள். எபேசியருக்கு எழுதிய நிரூபம்.2:2-ல் அவர்கள், “தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமலிருந்து ஏவாளைப் போல், கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்” என்றழைக்கப்பட்டுள்ளனர். கீழ்ப்படிதலின் பிள்ளைகளுக்கும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளுக்கும் பொதுவான அம்சம் ஏதுமில்லை. ஒரு கிறிஸ்தவ மத ஸ்தாபனத்தில் ஒருவர் கீழ்ப்படிந்தவராகவும், இன்னொருவர் கீழ்ப்படியாதவராகவும் இருக்கையில், மணவாட்டியால் எவ்வாறு அதில் அங்கமாயிருக்கவும், ஒத்துழைக்கவும் முடியும்? எவ்வாறு ஒருவர் வார்த்தையாகவும், இன்னொருவர் புரட்டப்பட்ட வார்த்தையாகவும் இருக்கமுடியும்? எவ்வாறு வேசியான ஒரு ஸ்திரீயும், சுத்தமான ஸ்திரீயும் மனம் ஒருமித்து நடந்து போக முடியும்? அவ்வாறு செய்ய அவர்களால் கூடாது. அவர்களுக்குள் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொண்டிருக்க முடியாது. அவர்களை விட்டுவெளியே வாருங்கள். அது பிசாசினால் உண்டானதாயிருக்கிறது; அது மிருகத்தின் முத்திரையாயிருக்கிறது. சகல கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களும் மிருகத்தின் முத்திரையை நோக்கி நேராகப் போய்க் கொண்டிருக்கின்றன. அது யாருடையது என்பதைப் பற்றி எனக்கு அக்கரையில்லை. தேவன், ஒரு மத ஸ்தாபனத்தையல்ல, தமது நாமத்திற்கென ஒரு ஜனங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கிறிஸ்தவ மத ஸ்தாபனமானது இச்சத்தியங்களை ஏற்றுக் கொள்ளாது. ஆனால், தேவனைக் காணமுடிந்து, அவருடைய வார்த்தையை நோக்கி அதை விசுவாசித்து, மத ஸ்தாபனத்திற்காக ஜீவிக்காமல், தேவனுக்காக ஜீவிப்பதுமான ஒரு தனி மனிதனால் இச்சத்தியங்களை ஏற்றுக் கொள்ள முடியும்; அவன் தனது ஸ்தாபனத்திற்காகவோ, அல்லது ஏதோ ஒரு பேராயரின் (Bishop) பேரறிவுக்காகவோ, அல்லது அவர் போதித்தவைகளுக்காகவோ ஜீவிக்கமாட்டான். 73கீழ்ப்படிதலின் பிள்ளைகளுக்கும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளுக்கும் பொதுப்படையாக ஒன்றும் இல்லை. ஒருவர் பகலின் பிள்ளைகள் ஆவார்கள். இன்னொருவர் இரவுக்கும் இருளுக்குமுரிய பிள்ளைகள்; இப்பொல்லாத காலத்தின் பிள்ளைகள், இரவு விடுதிகள் நாட்டியங்கள், இவர்களின் அந்தகாரமுள்ள இப்பொல்லாத காலத்தின் பிள்ளைகள் இப்படியிருந்து கொண்டும் சபையைச் சேர்ந்தவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய தேவனுக்கு இவையெல்லாம் ஆட்சேபகரமானவையல்ல. அதைப் பற்றி எந்தவிதமான ஆக்கினையுமில்லை. ஒன்றும் அவர்களைப் பாதிக்கிறதில்லை. “ஏன், எனது முடியை நான் வெட்டிக் கொள்வதற்காக நான் ஆக்கினைக்குட்பட மாட்டேன்” என்று ஒரு ஸ்திரீ கூறினாள். “அது என் மனசாட்சியையும் புண்படுத்தவில்லை'' என்று கூறினாள். எவ்வாறு ஒரு பாம்புக்கு இடுப்பு என்ற ஒன்று இல்லையோ அது போல் இவளுக்கும் மனசாட்சி என்ற ஒன்று கிடையாது. அது அப்படித்தான்! நிச்சயமாக இல்லை, மனசாட்சியென்றால் என்னவென்று அவளுக்குத் தெரியாது. மனச்சாட்சியென்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு அவளுடைய மனசாட்சியானது சூடுண்டு போய், தீய்ந்து போய்விட்டது. தேவனுடைய வார்த்தையைச் சுற்றி நடந்து திரிந்து விட்டு, “அது ஒரு பழமையான (Fogy) பழமை விரும்பிகளின் கூட்டம்; ஒழுங்கற்று, கண்டபடி சப்தமிட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தினர். அங்கே போக வேண்டாம்” என்று கூறுகிறார்கள். ஒரு ஹாட்டன்டாட் (Hottentot) (தென்மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள நாடோடிக் கூட்டமான மந்தை மேய்க்கும் இனத்தைச் சார்ந்த ஒருவன் என்பது இதன் பொருள் - தமிழாக்கியோன்) எவ்வாறு 'எகிப்திய இரவு' (Egyptian Nights) பற்றி அறிந்திருக்க மாட்டானோ, அதே போல், இவர்களுக்கும் தேவனைப் பற்றித் தெரியாது. அது உண்மையானது. “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு''... ”இப்படிப்பட்டவர்கள் எப்போது கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் நுழைந்து அவர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள்“. (2தீமோத்தேயு 3:5, 7) ”ஓ, அருமையானவளே, நீ இன்னின்னதைச் செய்ய வேண்டும். ஓ, பிரியமானவளே, அந்த பழமை வாதியான உன்னுடைய பிரசங்கியை நம்பாதே, நீ 'பிகினி' ஆடையை அணிந்து கொண்டால் அழகாயிருப்பாய், அதினால் ஒன்றும் தவறு இல்லை. ஒரு சிகரெட் புகைத்தால் அதினால் என்ன வந்து விடப்போகிறது? நான் இந்த சபையைச் சேர்ந்தவள். எங்களது சபையானது வேறெந்த சபையைப் போலவும் உயர்வாக எண்ணப்படுகிறது'' என்று கூறுகிறார்கள். இவ்விதம் பொய்யுரைக்கும், வர்ணம் தீட்டியுள்ள அந்தப் பெண்ணின் வார்த்தைகளை நம்ப வேண்டாம். அவள் உங்களிடம் பொய் சொல்லுகிறாள். ஆம், அவ்வாறுதான் காரியமானது இருக்கிறது. ஆம், ஐயா. 74இம்மாறுபாடான காரியங்களெல்லாம் அவர்களுடைய தேவனுக்கு சம்மதம்தான். அது அருமையானது என்று அவன் எண்ணுகிறான். அதற்காக அவனை அவர்கள் நேசிக்கிறார்கள். உங்களோடு அவர்கள் வாக்குவாதம் செய்வார்கள். உங்களோடு முகமுகமாக நின்று, அதைப் பற்றி வீண் வாக்குவாதம் செய்வார்கள். நல்லது, நிச்சயம் அப்படித்தான். சாத்தானும் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவுக்கு முகமுகமாக எதிர்த்து நின்று, வார்த்தையில் 'எழுதப்பட்டிருக்கிறதே என்று கூற முயற்சித்தான். அங்கே அவர்தானே, உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தார். “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே'' என்று இயேசு கூறினார். அதைப் போலவே, நீங்களும் செய்து, அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள். ஒரு சமயம் என்னிடம் ஒரு நபர், ''இப்பொழுது, நீங்கள் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை சரியென்று விசுவாசிக்கிறீர்கள்; நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள் என்று விசுவாசிக்கிறீர்கள். அப்படியென்றால் என்னை நீங்கள் இப்பொழுதே குருடாக்குங்கள். பவுல் கூட ஒரு மனிதனை ஒரு சமயம் குருடாக்கியிருக்கிறான்'' என்று கூறினார். இவ்வாறு என்னிடம் கூறியவர் ஒரு பிரசங்கியாவார். நான் அவரிடம், “மிஸ்டர், நீங்கள் ஏற்கனவே குருடாயிருக்கையில், நான் மீண்டும் எப்படி உங்களை குருடாக்க முடியும்? நீங்கள் ஏற்கனவே மரித்திருக்கையில் மீண்டும் நான் எவ்வாறு உங்களைக் கொல்ல முடியும்?'' என்று கேட்டேன். அவர், “எனது கண்கள் 20-20 என்ற அளவில் பார்வையுடையதாக இருக்கிறதே'' (அதாவது எந்தவித கோளாறுமில்லாத, தெளிவான பார்வையுடைய கண்கள் - தமிழாக்கியோன்) என்று பதிலுரைத்தார். ''அது சரீரப் பிரகாரமான கண்கள், ஆயினும் நீங்கள் இன்னும் குருடாகவே இருக்கிறீர்கள்“ என்று கூறினேன். அது சாத்தியமல்ல, “வேதாகமம் எதையும் வியாக்கியானிக்கவில்லை. வேதம் எங்கெல்லாம் பேசுகிறதோ அங்கெல்லாம் நாங்களும் பேசுகிறோம்! வேதமானது எங்கெல்லாம் மெளனமாக இருக்கிறதோ, அவைகளில் நாங்களும் மெளனமாக இருக்கிறோம்'' என்று கூறினார். 75மேலும் நான், “அதுசரி, எலிசா தோத்தானில் இருந்தபோது, அவன் இருந்த இடத்தைச் சுற்றிலும் சீரியருடைய இராணுவமானது சுற்றி வளைத்துக் கொண்டது. அதைக் கண்ட எலிசாவின் வேலைக்காரன் ஓடிவந்து, 'ஓ, என் தகப்பனே, சீரியர்கள் நம்மைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறார்கள்!'' என்று கூறினான். எலிசா கண்களைத் துடைத்துக் கொண்டு படுக்கையிலிருந்து எழும்பி, அவர்களோடு இருப்பவர்களைப் பார்க்கிலும் நம்மோடு இருக்கிறவர்கள் அநேகம்' என்று கூறினான். அதற்கு வேலைக்காரன், 'நான் ஒன்றையும் பார்க்கவில்லையே' என்றான். 'தேவனே, இவன் கண்களைத் திறந்தருளும்' என்று எலிசா ஜெபித்தான். அப்பொழுது, குருடாயிருந்த வேலைக்காரனின் கண்கள் திறக்கப்பட்டு, அந்த வயது சென்ற தீர்க்கதரிசியைச் சுற்றிலும் அவன் மலைகளின் மேல் பார்த்த பொழுது, அக்கினிமயமான குதிரைகளாலும், இரதங்களாலும் நிறைந்திருக்க, ஏராளமான தூதர்களைக் கண்டான். தீர்க்கதரிசி வெளியே சென்று, சீரியருடைய கண்களைக் குருடாக்கினான். எதற்கு குருடாக்கப்பட்டார்கள்? தீர்க்கதரிசியாகிய எலிசாவைக் காணக் கூடாதபடி குருடாக்கப்பட்டார்கள். குருடாக்கப்பட்ட சீரியரிடத்தில், எலிசா, 'நீங்கள் எலிசாவைத் தேடுகிறீர்களா' என்று கேட்டான். அவர்கள் ஆம் அவனைத்தான் தேடுகிறோம். என்றார்கள். 'என் பின்னால் வாருங்கள், அவன் இருக்குமிடத்தை காண்பிக்கிறேன்' என்று எலிசா கூறினான். எலிசா குருடாயிருந்த அவர்களை எலிசாவிடத்திற்கே அழைத்துப் போகிறான்'' என்று கூறினேன். நான் அந்தப் பிரசங்கியிடம் இக்காரியங்களைக் கூறிவிட்டு, தொடர்ந்து, ”இப்பொழுது, நான் உங்களுக்கு என்ன சொல்லப் போகிறேன் என்றுஉங்களுக்குத் தெரியுமா?“ என் ஆண்டவர், உமது தகப்பனிடம் (சாத்தானிடம் - தமிழாக்கியோன்) ”எனக்குப் பின்னாகப் போ'' என்றாரே, அதையே உமக்கும் கூறுகிறேன் என்று கூறினேன். 76கவனியுங்கள்! கீழ்ப்படிதலின் பிள்ளைகளுக்கும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளுக்கும் ஒற்றுமை காணத் தக்கதான பொதுவான அம்சமேதும் இல்லை. கீழ்ப்படியாமையின் பிள்ளைகளும் தங்கள் கடவுளை வணங்குகிறார்கள். “நாங்கள் வேதத்தை விசுவாசிக்கிறோம்'' என்று கூட அவர்கள் கூறுகின்றனர். ஆம், அது ஒரு கலப்படமான மரம் தான். சாத்தானின் மரமானது, லெளகீகத்தையும், அறிவையும் வார்த்தையோடு கலந்து விட்டிருக்கிறதான ஒரு கலப்படமான மரம்தான். அவள் சாத்தானின் மரத்திலிருந்து நன்மையையும் தீமையையும் எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதைப் பாருங்கள். ''நாங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறோம், ஆனால் எல்லாவற்றையுமல்ல'' என்று அவர்கள் கூறுகிறார்கள். ஏவாளும் கூட வார்த்தையை விசுவாசித்தாள். ஆனால், சாத்தான் தன் மரத்தை எடுத்து, வார்த்தையை கொஞ்சம் புரட்டுவதற்கு அவள் விட்டுக் கொடுத்தாள். ”ஒருவன் இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால் அல்லது குறைத்தால் அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். கவனியுங்கள். 77இந்தப் பொல்லாத காலமானது அந்தகாரமுள்ளதாயிருக்கிறது; இருப்பினும் அது சபையைச் சேர்ந்ததாகவும் இருக்கிறது. அவர்கள் அவர்களுடைய கடவுளை, தங்களை அக்காரியங்களைச் செய்ய அவன் அனுமதிப்பதால், அதற்காக அவனை நேசிக்கிறார்கள். அவர்களைக் குற்றப்படுத்துபவர் யாரும் இல்லை. சபையைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருக்கும் வரைக்கிலும் ஒன்றும் அவர்களைத் தொல்லை பண்ணுகிறதில்லை. பிலேயாமும், ''நாம் ஒன்றாக இணைவோம்; நாம் யாவரும் ஒன்றாயிருக்கிறோம்'' என்று அவர்களுக்குப் போதித்தான். அதுதானே கடைசித் தந்திரமாக இருந்தது. அவ்விதமான பொய்யை அவர்கள் விசுவாசித்ததற்காக தேவன் அவர்களை மன்னிக்கவேயில்லை. தேவனுடைய வார்த்தையானது சத்தியம் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, அதனோடு எவனொருவன் தன் சொந்த வியாக்கியானமாகிய ஒரு வார்த்தையாகிலும் கூட்டினால் அது அவனுக்கு மன்னிக்கப்பட முடியாத பாவமாக இருந்தது என்பதாக வேதத்தில் மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏதேன் தோட்டத்தில் ஒரு வார்த்தையைக் கூட்டிய காரியமானது மரணத்தைப் பிறப்பித்தது. பிலேயாம், ''நாம் அனைவரும் ஒரே இனம்தான்...“ என்று ஒரு வார்த்தையைக் கூட்டிய போது, அதை இஸ்ரவேலர் விசுவாசித்தபோது, தேவன் அதை அவர்களுக்கு ஒருபோதும் மன்னிக்கவேயில்லை. எகிப்தை விட்டு தேவனால் வெளியே கொண்டுவரப்பட்டவர்களில் மூவரைத் தவிர, மற்ற அனைவரும் வனாந்தரத்தில் மரித்தார்கள். ”அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்'' என்று இயேசுவும் கூறினார்.(யோவான். 6:58). அதாவது நித்தியமாக அவர்கள் பிரிக்கப்பட்டார்கள். அவர்கள் யாவரும் ஒழிந்து போனார்கள். ஒருவரும் மன்னிக்கப்படவில்லை. அது அவர்களுக்கு மன்னிக்கப்படாத பாவமாக இருந்தது. ஓ, சாயங்கால வெளிச்சத்தின் பிள்ளைகளே! அதை விட்டு விலகி ஓடுங்கள். 78இந்த நவீன, மார்க்க சம்பந்தமானதும், பொல்லாததுமான காலத்தின் தலைவன் யார் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? அது பிசாசுதான்; அவன் நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தை எடுத்து அங்கே வைத்து, தனது அழகான சபை மணவாட்டியை 'எகுமெனிகல் கவுன்சிலுக்கு' (Ecumenical Council) (உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளை இணைப்பதற்கு உள்ள முயற்சிகளை ஊக்குவித்து செயல்படுத்தும் ஒரு சங்கம் - தமிழாக்கியோன்) விவாகத்திற்குக் கொண்டு வருகிறான்; அவனது அழகான விஞ்ஞானப் பூர்வமான சபையானது, என்னென்ன பட்டங்களை பெற முடியுமோ, அவைகளையெல்லாம் பெற்று இருக்கிறது; 'சர்ச் ஆஃப் க்ரைஸ்ட்' (Church of Christ) சபையிலிருந்தும், பாப்டிஸ்ட்டு சபையிலிருந்தும், ப்ரெஸ்பிடேரியன் சபையிலிருந்தும், பெந்தெகொஸ்தே சபையிலிருந்தும், டாக்டர் (Ph. D) பட்டங்களைப் பெற்றவர்களையெல்லாம் உடைய மிக அழகான விஞ்ஞானப் பூர்வமான சபை அவனது சபை. அவைகள் உயர்தர வேலைப்பாடான அலங்கரிப்பை உடையவைகளாய், பெரிய சபைகளாக இருக்கின்றன. அவையாவும், ''நாங்கள் அனைவரும் ஒன்றுதான்“ என்று கூறி இணையச்செய்கிற எகுமெனிகல் கவுன்சிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இச்செயல் மன்னிக்கப்படவே மாட்டாது. ஒரு மத ஸ்தாபனத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளுதல் மிருகத்தின் முத்திரையாகும். இது வரையிலும் இதைப் பற்றி நாம் பார்த்து வந்தோம். பிள்ளைகளே, அதைவிட்டு, விலகி ஓடுங்கள். அவனுடைய முத்திரையைத் தரித்துக் கொண்டு, மகத்தான ஏகுமெனிகல் (சபைகளை ஒன்றிணைக்கப் பாடுபடும் சங்கம் - தமிழாக்கியோன்) விவாகத்திற்கு, அந்த மகத்தான அழகுள்ள சபை வருகிறது; அது லெளகீகமானதும், பால் உணர்வைத் தூண்டும் விதத்தில் ஆடை அணிந்து கொண்டுள்ளதும், வர்ணப்பூச்சு பூசிக் கொண்டுள்ளதும், பிசாசின் உண்மையான நல்ல சீஷர்களாயிருக்கிறது. அவர்கள் தேவனுடைய புத்திரரை கண்ணியிலகப்படப் பண்ணி, முழுவதும் மறுபடியும் பிறந்த ஒருவனை, அந்த வயது சென்ற, தேவனால் இரட்சிப்புக்குப் புறம்பாக்கப்பட்ட அவளுக்கு, திருமணம் செய்து வைக்க பிசாசின் உண்மையான சீஷர்களாயிருக்கிறீர்கள். 79“முடியை வெட்டிக் கொள்ளுவதால் என்ன தவறு இருக்கிறது'' என்று அவள் கூறுகிறாள். சகோதரனே, இங்கு ஒரு நிமிஷம் நிதானிப்போம். இப்பொழுதே நான் பேசிக் கொண்டிருக்கையில் நான் சொன்ன இந்த காரியத்தைப் பற்றி, யாரோ மனதில் இடறுண்டு கோபப்படுவதாக உணருகிறேன். தொலைபேசி வாயிலாக இவ்வாரதனையில் பங்குகொள்ளும் ஏதாவது ஒரு நபராக அது இருக்கலாம். கவனியுங்கள், ஒரு ஸ்திரீக்கு நீண்ட தலைமுடி இருப்பது, அவளுக்கு நசரேயப் பொருத்தனையாகும். சிம்சோனுக்கு நீண்ட முடியிருந்தது. அவனுக்கு நசரேயப் பொருத்தனையாயிருந்தது. ஒரு ஸ்திரீ தன் தலைமுடியை வெட்டிக் கொள்வாளென்றால், அவள் முழுவதுமாக தன்னுடைய நசரேயப் பொருத்தனையை மறுதலிக்கிறாள். அவள் கிறிஸ்துவுக்கு மணவாட்டியாயிருப்பதைக் காண்பிக்கும் நசரேய விரதத்தை மறுதலிக்கிறாள். ஏனெனில் அந்த ஒரு காரியம் எல்லாவற்றையும் அடியோடு கெடுத்துவிடுகிறது. சரியாக அப்படித்தான். நசரேயன் என்னப்பட்டவன், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தன்னைப் பிரதிஷ்டை செய்துக் கொண்டவன் ஆவான். சிம்சோன் ஒரு காலத்திற்காக, ஒரு நோக்கத்திற்காக தன்னைப் பிரதிஷ்டை செய்து கொண்டிருந்தான். எனவேதான் அவன் நீண்ட முடியை உடையவனாய் இருந்தான். தேவனுடைய பிள்ளையாயிருக்கிற ஒரு ஸ்திரீயானவள், தான் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும், பிரதிஷ்டை செய்து கொண்டவள் என்பதைக் காண்பிக்கும்படி, தனது முடியை நீளமாக வளர விடுகிறாள். ஸ்திரீயானவள் தன் தலை முடியை வெட்டிக் கொண்டால், அவள் எவ்வளவு ஆவியில் நடனமாடினாலும், பாடல் குழுவில் இருந்து பாடினாலும், அந்நிய பாஷைகளில் பேசி மேலும் கீழும் குதித்தாலும், எல்லாவிதமான உதவிச் சங்கங்களில் இருந்தாலும், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை! அவள் மரித்தவள் தான். 1கொரிந்தியர். 14-ம் அதிகாரத்தின்படி, அது கர்த்தர் உரைப்பது என்னவென்றால் என்னும் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. பார்த்தீர்களா? அவள் தன்னுடைய நசரேய விரதத்தை மறுதலித்து தன்னை இந்த நவீன யுகத்தின் தேவனுக்கு விற்றுப் போட்டுவிட்டாள். அவள் அதைச் செய்துவிட்டாள். அப்பொழுது, இக்காரியத்தைச் செய்துள்ள ஸ்திரீயே, பெண்மணியே, நீ வெட்கத்திற்குரியவள். இவர்கள், தேவ புத்திரரை பிடித்திருப்பவர்கள். இயேசு கூறியதைப் போன்று “...நோவாவின் காலத்தில் சம்பவித்ததைப் போலவே, (நோவாவின் நாட்களில் ஸ்திரீகள் செளந்தர்யமுள்ளவர்களாயிருந்தார்கள்; தேவ புத்திரர் அவர்களுக்குள் விவாகம் செய்து கொண்டார்கள்) மனுஷகுமாரன் திரும்ப வரும் பொழுதும் சம்பவிக்கும்”. அவர்களுடைய தேவன் இது மகத்தானது, அழகுள்ளது, விஞ்ஞானப் பூர்வமானது என்று எண்ணுகிறான். சாத்தான் தன் சொந்த ஸ்தாபனத்தின் அறிவு, ஹாலிவுட் பணி நாகரீகம் மற்றும் இந்த விதமான இனிமையுள்ள பசையான காரியங்களை வைத்திருக்கிறான். 80அவனுடைய சபையாகிய அவள் அதை அப்படியே நேசிக்கிறாள். சாத்தான். “ஓ, நீ புத்தியடையப் பண்ணுகிறேன்” என்கிறான். “நான் மெத்தடிஸ்ட், நான் பிரெஸ்பிடேரியன், எங்களது போதகர் இவ்விதமான காரியங்களைக் கூறுவதற்கல்ல, மேலான காரியங்களைச் சொல்ல, மேலான புத்தி உள்ளவராயிருக்கிறார். தேவன் அப்பொழுது சொல்லக் கூடிய காரியங்களை சொல்வதற்கு போதகருக்கு போதுமான அறிவு இல்லை. சபையாகிய அவளோ, தேவன் கூறியபடியே தொழுது கொள்ளுகிறாள். அவள் அதை நேசிக்கிறாள். அதையே அவள் விரும்பியுள்ளாள். அவள் எந்த ஒன்றோடும் சேரமாட்டாள். “சகோதரனே! அவள் எதினுள்ளும் வரமாட்டாள், அவள் இந்நவீன கால யேசபேல்களினின்றும் வேறுபட்டவளாக நடந்து கொள்ள வேண்டியவளாயிருக்கிறாள்” ஏனெனில், அவளில் அப்படிப்பட்ட சுபாவம்தான் இருக்கிறது. ''உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டமுடியும்?“ (மத்.6:27). நீங்கள் ஐந்தடி உயரமுள்ளவர்களாயிருக்கும்படி பிறந்திருந்தால், நிச்சயமாக நீங்கள் ஆறு அடி உயரம் இருக்கமாட்டீர்கள் ? பூத் க்ளிப்பர்ன் என்பவரின் ஒரு வகையான நீளமாக்கும் இயந்திரத்தைப் போல் (Stretching Machine). 81மனிதனே செவிகொடு, 'ரிக்கிகள்' (Rickys) என்னும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே (இவர்கள் பெண்களைப் போல் தலைமுடியை வளர்ப்பவர்கள் - தமிழாக்கியோன்), மனிதனாக பிறந்திருந்தால், மனிதனாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் வந்து விழுமாறு வெட்டிவிடப்பட்டுள்ள சுருளாக்கப்பட்ட முடியை பாலுணர்வைத் தூண்டுவதற்காக வைத்துள்ளீர்கள். ஓ, கோணலும் மாறுபாடுமுள்ள சர்ப்ப சந்ததியே, உங்களோடு உள்ள காரியம் என்ன? என் தேவன் இத்தேசத்தை ஒரு நாள் அக்கினியால் நியாயந்தீர்ப்பார். சமுத்திரத்துக்கு அடியில் இந்த தேசம் அமிழ்ந்து போகும். அவருடைய நியாயத்தீர்ப்பின் வேளையானது நெருங்கிவிட்டது. முழு உலகமும் ஒழிந்து போகும். மத மாறுபாடு, மனுஷக மாறுபாடு - மனிதன் தான் ஆணா பெண்ணா என்று கூட அறியாதவனாயிருக்கிறான். அதைப் போலவே ஸ்திரீகளும் உள்ளனர். பெண்ணானவள், ஒரு ஜோடு ஆணின் மேலாடையுடன் எழும்பி நிற்கிறாள், அல்லது அரைக்கால் சட்டை மற்றும் உடலைக் காட்டும் ஆபாசமான ஆடைகளை அணிகிறாள்; அப்படியிருந்தும், தன்னை கிறிஸ்தவள் என்று அழைத்துக் கொள்கிறாள். அவள் கிறிஸ்தவள் அல்ல என்பது மாத்திரமல்ல, அவள் முதலில் ஒரு மரியாதை பெறத்தகுதியுள்ள பெண்ணே (lady) அல்ல. இயேசு கிறிஸ்து இவ்வாறு நடக்கும் என்று கூறிய வார்த்தை நிறைவேறத் தக்கதாக, சாத்தானால் உபயோகிக்கப்படும் ஒரு தெரு வேசியவள், சாத்தானால் ஏவப்படுகிறவள் அவள், அவளைக் கொண்டு, தேவ புத்திரரை நரகத்துக்கு அனுப்ப சாத்தான் கிரியை செய்கிறான். அவ்வாறு நான் சொல்ல முற்படவில்லை. அவரே கூறியிருக்கிறார். இந்த மார்க்க ஆவியானது எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்த்தீர்களா? அந்த கலப்பட மரத்திலிருந்து தான். 82''ஆண்கள் அணியும் இந்த 'ஸ்லாக்குகளை' (Slacks) அணிந்தால் என்ன தவறு?'' என்று கேட்கிறார்கள். அல்லது கெண்டைக் கால் வரைக்கும் அணிந்து கொள்ளும் இறுக்கமான ஒருவகை ஆடை (Pedal - Pushers) அணிந்து கொண்டால் என்ன தவறு என்று கேட்கிறார்கள். ஆணின் உடையை பெண் தரிப்பது தேவனுக்கு அருவருப்பானது என்று வேதம் கூறுகிறது. அது வேதம் இவ்வாறு கூறுகிறது என்பதாக இருக்கிறது. தன் தலை முடியை வெட்டிக் கொள்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். கட்டையாக வெட்டிக் கொள்ளப்பட்ட முடியுடன் ஒரு பெண் ஜெபிப்பதானது அவளுக்கு பாவமாயிருக்கிறது, ஏனெனில், வேதம், “தன் தலையை மூடிக்கொள்ளாமல் சபையில் ஜெபிப்பது...'' என்று கூறுகிறது. ஓ, நீங்கள், ''நான் ஒரு தொப்பியை அணிந்து கொண்டுள்ளேன்'' என்று கூறலாம். நீ மாய்மாலக்காரி. வேதமானது, தலைமயிரானது ஸ்திரீயானவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அப்படிப்பட்ட காரியங்களை அவர்களுக்கு போதியுங்கள். மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு தொப்பி அல்ல முக்காடு. தலைமயிரே முக்காடு என்று வேதம் கூறுகிறது. அப்படித்தான் வேதம் கூறுகிறது. நான் சத்தியத்தை எடுத்துரைக்க மாத்திரமே உத்திரவாதமுள்ளவன். வேறெதெற்கும் அல்ல. 'ரிக்கட்டாக்கள்' (Rickettas) என்னும் ஜனங்களின் வேண்டுகோளுக்காக நேர்மையுற்றிருக்க வேண்டாம். அவர்கள் தேவ வசனத்தை வஞ்சகமாகப் புரட்டுகிறவர்கள். 83நான் 'தீமை' (Evil) என்று குறிப்பெழுதுவற்குப் பதிலாக தவறாக ''எல்விஸ்“ (Elvis) என்று எழுதி வைத்திருக்கிறேன் (இங்கு பிரபல பாடகரான எல்விஸ் பிரஸ்லியை சகோ. பிரான்ஹாம் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). ஆனால் இரண்டும் ஒரே காரியத்தைப் பற்றியுள்ளதுதான். எல்விஸ் (Elvis) என்பதற்கு அர்த்தம் ”ஒரு பூனை“ என்பதாகும். ரிக்கி (Ricky) என்ற வார்த்தைக்கு அர்த்தம் ”சுண்டெலி“ என்பதாகும். நீங்கள் ஒருவனை என்ன பெயரிட்டு அழைக்கிறீர்களோ அவ்வாறே அவன் இருக்கிறான். உங்கள் பிள்ளைக்கு, 'எல்விஸ்' அல்லது 'ரிக்கி' என்று பெயரிட்டிருந்தால், அதை சுவிசேஷத்தினிமித்தம் உடனே மாற்றிவிடுங்கள். அவ்வாறு உங்கள் பிள்ளைகளுக்கு பெயரிட வேண்டாம் வேதத்திலோ அல்லது வேறு எந்தக் காலத்திலோ இவ்வாறான பெயரை நீங்கள் கேள்விப்பட்டதில்லை. அது இந்தக் காலத்திற்குரிய பெயராகும். எல்லாக் காலங்களிலும், இப்பொழுதுள்ள காலத்தில்தான், மாறுபாடான எலிகளும், பூனைகளும் உள்ளன. இன்றைய சிறு பிள்ளைகள் தங்கள் பள்ளிகளுக்கு செல்கையில், ''பூம் - டீ - பூம்'' என்று அலறும் ஒருவகையான இசையை கேட்க விரும்பி, அதற்காக தங்கள் பாக்கெட்டுகளில் சிறு ட்ரன் சிஸ்ட்டர் ரேடியோ எடுத்துச் செல்கின்றனர். எங்கள் வீட்டை வர்ணம் அடிக்க வந்தவர்கள், இந்த விதமான 'பூகி-வூகி' (Boogie - Woogie) என்ற ஒருவகை இசையை இசைத்துக் கொண்டு வேலை செய்ய நின்றனர். நாங்கள் அவர்களிடம், ''அதை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள். அதையல்லாமல் உங்களால் வேலை செய்ய முடியாவிடில், அந்த வேலையை நீங்கள் செய்யவேண்டாம், இங்கு நான் நிற்கக் கூட முடியாதபடிக்கு அதைக் கேட்கும் போது மிகவும் தளர்ச்சியடைகிறேன். இந்த ஸ்தலத்தை நாங்கள் தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்துள்ளோம், இந்த விதமான இசை அபத்தம் எங்களுக்கு வேண்டாம், மூடி எடுத்து வையுங்கள், அல்லது வேலையைச் செய்யாமல் போங்கள்'' என்று கூறினேன். கவனியுங்கள், அவர்கள் சபைக்கு போகிறவர்களாயும் மார்க்கத்திலமைந்தவர்களாயும் காணப்படுகின்றனர். ஆலயத்தின் தோரண வாயிலுக்கே போய், அங்கே நின்று கொண்டு, இந்த 'பூகி-வூகி' இசையைக் கேட்கின்றனர். 84மேலும் கவனியுங்கள், கிறிஸ்துவின் வார்த்தை மணவாட்டியானவள், தன் உச்சநிலையை அடைந்து கொண்டிருக்கிறாள் என்பதையும் அதே சமயத்தில் அந்திக் கிறிஸ்து தன் உச்சநிலையை அடைந்துள்ளான் என்பதையும் பார்த்தோம். ஆதியில் அவன் அவ்வாறு ஆரம்பித்து, இப்பொழுது தலைப் பகுதியை அடைந்துள்ளான். எகுமெனிக்கல் கவுன்சிலானது அத்தலைமையை ஒரு மத குரு சம்பந்தமான சபையின் தலைவனுக்குக் கொடுக்கும். இதன் அருகில் வளர்ந்து வரும் இச்சிறிய சபையானது கிறிஸ்துவின் வார்த்தை மணவாட்டியாக இருக்கிறது. அது ஒவ்வொரு காலத்தின் வழியாகவும் வளர்ந்து வந்து, இப்பொழுது அதுவும் தலைப் பகுதிக்கு வந்துவிட்டது; ஏனெனில் அது தன் துணையோடு மீண்டும் சேர்க்கப்படப் போகிறது. சபையானது தன் தலையோடு எவ்வாறு இணைக்கப்பட வேண்டுமோ, அவ்வாறே இதுவும் தன் தலையோடு இணைக்கப்பட்டாக வேண்டும். கோதுமை மணியானது ஆரம்பத்தில் தரையில் போடப்பட்டு, அது வளர்ந்து, தான் எவ்வாறு ஆரம்பித்ததோ, அதைப் போலவே தன் தலைப் பகுதியில் போய் முடிவடைகிறது. காயீனையும் ஆபேலையும் போன்று அது இருக்கிறது. வார்த்தை மணவாட்டி, நாம் வாழும் பொல்லாத இக்காலத்தில் பிரத்தியட்சமாகியுள்ள தேவனுடைய வார்த்தை என்ற நபரிடம் முன்னோக்கி வளருகிறாள். அது எங்கே முன்னோக்கி செல்கிறது என்று பாருங்கள்? 85சாத்தான் அதிவிரைவில், தனது பேரறிவு படைத்த மணவாட்டியை எடுத்து, இந்த மகத்தான மனிதனாகிய அந்திக் கிறிஸ்துவை, குருத்துவ அரசாட்சி உடையவனை , சிங்காசனத்தின் மேல் உட்கார வைப்பான், முழு உலகமும் அவனைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அதன் பிறகு கிறிஸ்து வருவார், மேலும் இருவர் ஒரே சமயத்தில் இருக்க முடியாது. அவனிடத்திலிருந்து அவனுடைய இராஜ்யம் பிடுங்கப்படும். அவன் அழிக்கப்படுவான். கிறிஸ்துவாகிய தேவனுடைய வார்த்தையும், அவருடைய சரீரத்தின் பாகமாகிய, ஸ்திரீயாகிய மணவாட்டியாகிய சபை, வார்த்தை, இவர்கள் இருவரும் இருவரல்ல, ஒருவர்தான். அவரது நாமத்திற்காக இங்கொன்றும், அங்கொன்றுமாக அழைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டவர்கள்; அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் இணைக்கப்படுவார்கள். அந்தக் கிறிஸ்துவினிட மிருந்து, அவனுடைய இராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவன் அழிக்கப்படுவான். கிறிஸ்து சிங்காசனத்தை எடுத்துக் கொண்டு, தமது பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்து, பூமியின் மேல் ஆயிரம் வருஷம் அரசாளுவார். பின்பு அவர் சபையை, கறை திறையற்றதாய் தேவனுக்கு அர்ப்பணிப்பார். 86தேவனுடைய வார்த்தைக்கென்று அவளுடைய நீண்ட முடியாகிய நசரேய பொருத்தனையைப் பாருங்கள். இப்பொழுது நான் கிறிஸ்துவின் மணவாட்டியை உங்களுக்கு சித்தரித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அந்தக் கிறிஸ்துவையும், அவனது மணவாட்டியையும், அவள் எங்கே இருக்கிறாள் அவளது மதம், விஞ்ஞானம் மற்றும் யாவற்றையும் நாம் சித்தரித்தோம். இப்பொழுது எளிய தாழ்மையுள்ள கிறிஸ்துவின் மணவாட்டி - அவள் வார்த்தையை எளிமையாக விசுவாசிக்கிறாள். அவள் யாராயினும் மணவாட்டியென்பது தனி நபர்களால் உருவாகியது ஆகும். இங்கு அமர்ந்திருக்கிறவர்களில் அநேகர் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நானும் நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மணவாட்டியில் அங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன். அதற்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள் யாவரும் அதில் தானாகவே அமைந்திருப்பார்கள், ஏனெனில் அதற்குரிய சுபாவம் அவர்களிலே காணப்படும். வார்த்தையினால் மாத்திரமே வார்த்தையை அங்கீகரிக்க முடியும். வார்த்தையினால் ஒரு மத ஸ்தாபனத்தையோ, அல்லது ஒரு மாறுபாட்டையோ அங்கீகரிக்க முடியாது. அது வார்த்தையாயிருக்கிறது. எனவே அது நன்கு அறிந்திருக்கிறது. வேறு எதையும் அதனால் அங்கீகரிக்க முடியாது. ஒரு கோதுமை கோதுமையாக அல்லாமல் வேறு எதுவாகவும் இருக்க முடியாது. கோதுமையாகவே ஆரம்பித்து, கோதுமையாகவே முடிவுறுகிறது. களை ஒருபோதும் கோதுமை மணியாகவே முடியாது. ஆயினும் கோதுமை, களை இரண்டுக்குமே ஒரே தண்ணீர்தான் பாய்ச்சப்படுகிறது. அவையிரண்டும் ஒரே அபிஷேகம்தான் பெறுகின்றது. ஆனால் களை ஒருபோதும் கோதுமை மணியல்ல; அன்று நான் ஒரே மரத்தில் பல்வேறு கனிகளைத் தரும் கிளைகள் இருப்பதைப் பற்றி பேசினேன். 87அவளது நீண்ட முடியாகிய நசரேய விரதமானது, அவள் தேவனுக்கென்று பொருத்தனை பண்ணிக் கொண்டவள் என்பதைக் காட்டுகிறது. அவள் அணிந்துள்ள அவள் வாழும் காலத்துக்குரிய அவருடைய வாக்குத்தத்த வார்த்தை என்னும் அழகான ஆடை, அவளை எபிரெயர்:13:8-ல் கூறப்பட்டுள்ள நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடன் இணைத்து உறுதிப்படுத்துகிறதாயிருக்கிறது. வார்த்தை மணவாளனின் பாகமாக அவள் இருப்பதால், அவள் ஒவ்வொரு அம்சத்திலும் அவருக்கு உண்மையாயிருக்கிறாள். இப்பொழுது பாருங்கள். ஒரு ஸ்திரீயானவள் ஒரு மனிதனை மணந்து, பிறகு இன்னொரு மனிதனை அவள் நேசித்து, அவனோடு அவள் தொடர்பு கொண்டு, அந்நிலையில் அவள் தன் கணவனிடம் திரும்பி வந்தால், அவன் அவளை தள்ளிவிட வேண்டும் அது சரிதானே? அவனுக்கு அவள் உண்மையாயிருப்பதாக ஆணையிட்டு இருப்பதால், அவள் அவனுக்கு உண்மையாயிருக்க வேண்டுமே. கிறிஸ்துவின் மணவாட்டி, கிறிஸ்துவுக்கு தன்னை ஆணையிடுவித்துக் கொண்டவள், அவர் வார்த்தையாயிருக்கிறார். ஒரு ஸ்திரீயானவள் வேறு எந்த புருஷனுக்கும் கண்சாடைக் காட்டக் கூடாது. அவள் முழுவதுமாக ஒரு மணவாளனுக்கு மணவாட்டியானபடியால், வேறொருத்தனுக்கு சைகை காட்டுவதோ உணர்ச்சிகளைக் காட்டுவதோ கூடாது. உங்கள் மத ஸ்தாபனங்களாகிய கலப்பட மரம் எங்களுக்கு வேண்டாம். வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு உண்மையாயிருங்கள். அது உண்மையானது என்று அவர் உறுதிப்படுத்துவார். அவனை நேசிக்குமுகமாக எந்தவித மனவெழுச்சியோ, அல்லது அவனது அணிகளில் சேருவதோ, அல்லது அவன் உங்களை தன் கரத்தில் எடுத்துக்கொண்டு, பேசி, உங்களை அதைச் செய், இதைச் செய் என்று கூறுவதோ கூடாது. ஒரேயொரு சத்தத்திற்குத் தான் நீங்கள் செவிகொடுக்க வேண்டும். ''...என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது. அன்னியனுடைய சத்தத்திற்கு அவைகள் செவி கொடுப்பதில்லை...'' அவருடைய சப்தமானது என்ன? எந்தவொரு மனிதனின் சப்தம் என்பது அவனுடைய வாயின் வார்த்தையே, அவருடைய சப்தம் என்பது, இவ்வேதாகமம் தான். ஒரு வார்த்தையை கூட்டுவதோ குறைப்பதோ செய்யாமல், அப்படியே அந்த சப்தத்துடன் நிலைத்திருங்கள். ஒரு மத ஸ்தாபனமாகிய அன்னியனின் சப்தத்திற்கு அவர்கள் செவி கொடுப்பதில்லை. 88அவள் மணவாளனின் பாகமாக இருப்பதால் அவள் அவருக்கு ஒவ்வொரு அம்சத்திலும் உண்மையாக இருக்கிறாள். ஆகாயத்தில் நடக்கும் கலியாண விருந்துக்காக, அவருடன் இணைவதற்காக அவள் காத்திருக்கிறாள். அவள் எகுமெனிக்கல் கவுன்சிலுக்காக (அகில உலகத்தின் கிறிஸ்தவ சபைகளையும் ஒன்றாக இணைக்க பாடுபடும் ஸ்தாபனம்) காத்திருக்கவில்லை. அவளுக்கு வேதத்தின் ஏழு முத்திரைகளின் இரகசியமானது வெளிப்படுத்தப்பட்டுள்ளது (இது நம் சொந்த சபைக்கே உரியது). அவள் வஞ்சகனின் மதியீனத்தைப் பார்க்கிறாள். அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்க தக்கதாக, சத்தியத்திற்கு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. அவள் அதைப் பார்க்கிறாள். இப்பொல்லாத காலத்தில், கிரியை செய்கிறதான ஒன்றுக்கொன்று எதிரிடையாக உள்ள இரு ஆவிகள் இருக்கிறதை அவள் பார்க்கிறாள். உங்களால் அதைக் காண முடிகிறதா? இருவருமே பக்திமார்க்கத்திலமைந்தவர்களாகக் காணப்பட்ட காயீனும் ஆபேலும், அவர்களுக்குள் இருந்த ஆவிகள், இப்பொழுது தலைப்பகுதிக்கு வந்துவிட்டன. அவை ஆரம்பிக்கும் போது எவ்வாறிருந்தனவோ, அவ்வாறே இருக்கின்றன. ஒருவர் தனது அழகு, அறிவு, கல்வி, விஞ்ஞானம், தனது கோட்பாடுகள் இவற்றால் தொழுது கொள்கிறார். இன்னொருவர் தேவனுடைய வார்த்தையின் பேரில் கிடைத்த வெளிப்படுத்தலாகிய விசுவாசத்தினால் தொழுது கொள்கிறார். அவ்விரு சாராருமே இக்காலையில் இக்கட்டிடத்திற்குள் நின்று கொண்டிருக்கிறார்கள். 89அவருடைய வார்த்தையின் பேரிலுள்ள விசுவாசம் அல்லது வெளிப்பாடு என்பது, அறிவை சொந்தம் கொண்டாடாது. உண்மையான அசல் கிறிஸ்தவனிடம், அவர்கள், ''நீ ஒரு டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறாயா?'' என்கின்றனர். அவனோ, ''நான் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன்'' என்று கூறிவிடுகிறான். அவன்தான் கல்வி கற்றுவிட்டதாக கூறிக் கொள்ளுகிறதில்லை. எந்தவொரு மத ஸ்தாபனத்தையோ, எந்தவொரு அரசியல் கட்சியையோ, எந்த வகுப்பையோ, சேர்ந்தவனாக அவன் இல்லாமல், கிறிஸ்துவையே சேர்ந்தவனாகவே இருக்கிறான். அப்படிப்பட்டவள், கிறிஸ்துவின் மனைவியாவாள், அது ஒரு சபை ஸ்தாபன மனைவி அல்ல; ஸ்தாபன சபை ஒரு வேசி. அவள் வேசியும், வேசிகளுக்கெல்லாம் தாயுமானவள் என்று வேதம் கூறுகிறது. அவர்கள் யாவரும் (மகள்கள் - தமிழாக்கியோன்) கூடிவந்து அதே வேசியை உண்டாக்குகிறார்கள். அந்த விதமான ஸ்திரீயானவள், தன் கணவன் கிறிஸ்து என்று கூறிக்கொண்டு, ஆனால் ஒரு மத ஸ்தாபனத்திற்கு சொந்தமானவளாயிருந்து கொண்டு, தன் கணவனுக்கு உண்மையற்றவளாயிருக்கிறாள். அது அப்படிப்பட்டதான ஒரு அபத்தம். நீங்களோ கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள். 90இங்கும், வேறெங்கும் உள்ள சபைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மணவாட்டியானவள், சிறிய விசுவாசப் பெண்மணியாக கீழ்ப்படிதலுள்ளவளாக இருந்து, விசுவாசத்தினால் ஜீவிக்கிறாள். கீழ்ப்படிதலோடு அவள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறாள். காலத்திற்குரிய வாக்குத்தத்தம் உறுதிப்படுத்தப்பட, அவள் அன்பினால் காத்திருக்கிறாள். அதற்காக அவள் கவனித்துக் கொண்டேயிருக்கிறாள். அவள் அந்த வார்த்தையின் பாகமாக இருக்கிறாள்!அந்த வார்த்தையை தனது ஜீவியமானது பிரத்தியட்சமாகும்படி விழித்துக் கொண்டிருக்கிறாள். சகோதரரே, இதை உங்களால் காண முடியவில்லையா? அது உங்களைக் கடந்து சென்றுவிடாது என்று நம்புகிறேன். வார்த்தையாகிய சரீரமானது, அந்த ஆவியாயிருக்கிற ஜீவனுக்காக, தன்னை பிழைக்க வைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் அவள் காத்துக் கொண்டிருக்கிறாள். வேறு எந்த ஜீவனும் அவளில் கிரியை செய்யாது. வேறு எந்த வழியிலும் அவள் ஜீவனடைய முடியாது. அது சம்பவிக்கப் போகிறதென்பதை அவள் உணர்ந்து அறிந்திருக்கிறாள்; அப்பொழுது இங்கே அது சம்பவிக்கிறது. அப்பொழுது விழித்தெழுகிறாள். தேவன் “உண்டாகக் கடவது'' என்று கூறின போது, முதலாவது எப்படி தோன்றினதோ, அவ்வாறே அவளும் புறப்பட்டு வருகிறாள். 91கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் - கீழ்ப்படியாமை என்றால் ''கலகம் செய்வது'' என்பது பொருளாகும். எதற்கு எதிராக கலகம் செய்வது? வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு எதிராகத்தான். நீதிமானென்று சாட்சி பெற்ற, உறுதிப்படுத்தப் பெற்ற, ஆபேலுடைய வெளிப்பாட்டுக்கு எதிராக காயீன் நின்றான். அதை காயீன் எதிர்த்து நின்று, தன் சகோதரனை கொலை செய்தான். தேவனுடைய வார்த்தையானது என்ன என்று அர்த்தம் கொடுக்க முற்பட்ட, அவர்களுடைய சொந்த மத ஸ்தாபன அறிவைக் கொண்ட, பரிசேயரில் பொறுக்கியெடுக்கப்பட்ட சிலர், அவர்களுடைய நாளுக்கென்று தங்கள் மத்தியில் பிரத்தியட்சமாக்கப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிர்த்து நின்று, அவரைக் கொலை செய்தார்கள். தேவனுடைய வார்த்தைக்கு எதிர்த்து நிற்கும் அவர்கள்தான் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாவார்கள். இப்பொழுது அவர்கள் எதில் இருக்கிறார்கள் என்று பாருங்கள்? ''அற்புதங்களின் காலம் முடிவடைந்துவிட்டது. இயேசு கிறிஸ்து மாறாதவரல்ல, பரிசுத்தாவியின் அபிஷேகம் என்று ஒன்று இல்லவேயில்லை, அவை யாவும் அபத்தமானது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். பார்த்தீர்களா, எதிர்த்து நிற்பதை? அவர்கள் இரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டியதில்லை, ஒரேயொரு காரியம் சொன்னாலே போதும். அதிலேயே அவர்களுடைய கலகம் செய்யும் போக்கை கண்டு கொள்ளலாம். ''உங்களுக்கு கண்கள் இல்லை. உங்களுக்கு காதுகள் இல்லை'' என்று அவர்களால் கூற முடியாது. முழு சரீரத்தையும், முழு வார்த்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த நாளுக்குரிய தேவனுடைய வார்த்தையை அவன் பரிகசித்து, எள்ளி நகையாடுகையில், மணவாட்டியிடத்திலிருந்து பரிசுத்த ஆவியின் அந்த அழைப்பு புறப்பட்டுச் செல்லுகிறது, “அவளுடைய மத ஸ்தாபன கொள்கைளுக்கு நீங்கள் பங்காளிகளாக வேண்டாம்” என்று தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். அவள் அதற்குரிய பலனை பெற்றுக் கொள்ளுவாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கவலைப்பட வேண்டாம். அவள் அதைப் பெறுவாள். கலாத்தியர்: 6:7. “...தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்! மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்'', இவ்வசனத்தை வேண்டுமானால் நீங்கள் குறித்துக் கொள்ளுங்கள். அவர்கள் பரியாசம் பண்ண முடியாது. நகைத்து இவ்விதமான காரியங்களைக் கூறிவிட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. தண்ணீர்கள் மேல் போட்ட ஆகாரம் போல், அது திரும்பும். 92அவள் பிசாசின் மணவாட்டியாவாள், அவள் அவனுடைய மார்க்க ரீதியான, பாவத்தை நேசிக்கிறதான அறிவினால் உடுத்துவிக்கப்பட்டிருக்கிறாள். அது இந்த தற்கால பொல்லாத காலத்திற்காக உள்ளதும், உன்னை வஞ்சிக்கிறதற் கேதுவானதாயுமிருக்கிறது. ஓ, இது விஞ்ஞானப் பூர்வமான அறிவு மற்றும் நவீன கால நாகரீகத்தாலும் நிறையப் பெற்ற ஒரு மத ஸ்தாபனக் கும்பலின் வஞ்சக ஆவிகள். (நான் விரைவில் முடித்து விடுவேன்). இவற்றைக் கொண்டு, அவள் நீங்கள் வாழ்வதற்கென மகத்தானதொரு உலகை நிர்மாணித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறாள். அவள் தனது நாகரீகத்தைக் கொண்டு அருமையான சபைகளையும் கல்லூரிகளையும், பள்ளிக் கூடங்களையும், மருத்துவ விடுதிகளையும், நூல் நிலையங்களையும், மனுஷனுடைய தற்காலிக உதவிகளையும், தேவனுடைய வார்த்தையில்லாமலேயே செய்துள்ளதாக அவள் கூறிக்கொள்கிறாள். அதை அவளால் செய்ய முடியும் என்பதை அவள் நிரூபித்துவிட்டாள். மக்கள் அதற்கு இரையாகிவிட்டார்கள். கல்விச் சாலைகள், மத ஸ்தாபனங்கள், சிறந்த கலாச்சாரம் இவற்றைப் பெற்றுள்ள, நன்கு உடுத்திக் கொண்டுள்ள மக்கள், நன்கு போஷிக்கப்பட்ட ஜனங்கள் இவர்கள், இவ்விதமானதொரு வேசியை சார்ந்து கொண்டு, நாளொன்றுக்கு மூன்று வேளைகளிலும், பொறிக்கப்பட்ட கோழி சாப்பிடுவதைப் பார்க்கிலும், தேவனோடு சரியாக இருந்துகொண்டு, வறுமையுள்ளவர்களுக்காக, கொடுக்கப்படும் ரொட்டி பெறுவதற்காக நிற்கும் மக்கள் வரிசையில் நிற்பதையே நான் விரும்புவேன். 93மிருகத்தின் முத்திரை வருவதற்கான வேளையானது சமீபித்துவிட்டது. இதை நினைவு கூருங்கள். ஒன்று, நீங்கள் அதினுள் இருப்பீர்கள். அல்லது அதை விட்டு வெளியே இருப்பீர்கள். அது இரவில் திருடனைப் போல் வரும். அது அவ்வாறு திடீரென்று உங்கள் மேல் வந்து உங்களை பிடித்துக் கொள்ளும். முத்திரையை தரித்துக் கொண்டவர்கள் ஒருவரும் அதைவிட்டு வெளியேவர முடியாது. வெளியே வாருங்கள். தன் முகம் மிகுந்த பிரகாசமுள்ளதாய் இருக்க, தூதனொருவன் வானத்திலிருந்து இறங்கி வந்து ஜனங்களை நோக்கி, பூமி அதிரத்தக்கதாய், “என் ஜனங்களே, அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும் படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்... அவள் விழுந்தாள்'' என்று பலத்த சத்தமிட்டான். அவளைவிட்டு வெளியேறுங்கள், வெளியேறுங்கள். ஒரு தூதன் என்பது, ”ஒரு செய்தியாளன்“ என்பதாகும் என்று வார்த்தையில் சற்று முன்னர் நாம் வாசிக்கவில்லையா? அத்தூதன் இறங்கி வருகிறான். ”...அவளுடைய வாதைகளில் அகப்படாதபடிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்'' என்று பரிசுத்த ஆவியனாவர் கூறுவதைக் கவனித்தீர்களா? 94இப்பொழுது அவள் இவை யாவும் நிர்மானித்திருக்கிறாள். அவள் மகத்தான சபைகளைக் கட்டியிருக்கிறாள். தேவனையும், அவர் வார்த்தையும் விட்டு அகன்று, மரணத்தின் குழியில் அவர்கள் விழும் படி, ஜனங்களுக்கு ஒரு நவீன நாகரீகத்தைப் பற்றிய அறிவியல் கல்வி கற்கச் செய்ய, கல்லூரிகளையும் பள்ளிக் கூடங்களையும் அவள் நிர்மாணித்திருக்கிறாள். அந்த முழு திட்டத்தையும் நீங்கள் பார்த்தீர்களா? சபையே, உன்னால் அதைக் காண முடிகிறதா? உங்களுடைய சபைகளில் நீங்கள் இக்காரியங்களைப் பார்த்திருந்தால், “ஆமென்'' என்று கூறுங்கள். அப்பொழுது இங்குள்ள மற்றவர்கள் நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கண்டுகொள்வார்கள். இவ்வுலகின் தேவன் இதுதான். அவள் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் கட்டியிருக்கிறாள். ஆஸ்பத்திரிகளையும் நூல் நிலையங்களையும் அவள் கட்டியிருக்கிறாள். மனிதனின் தற்காலிக உதவிக்காக இவையாவும் நிர்மாணித்திருக்கிறாள். இவையாவும் தேவனுடைய வார்த்தையை விட்டு அவர்கள் விலகுவதற்கு அவர்களை வஞ்சிப்பதற்கு போதுமானவையாயுள்ளன. அவர்களை அவள் எங்கே நடத்தி சென்றிருக்கிறாள்? முழு சபை உலகும் மரணத்தில் அமிழ்த்துவிட்டது. ஏனெனில் தேவன் அந்த வேசியைச் சுட்டெரித்து, அவளது பிள்ளைகளை நித்திய அக்கினியால் நிர்மூலமாக்குவதாகக் கூறியிருக்கிறார். அதை விட்டு வெளியே வாருங்கள் ஜனங்களே! அதில் பிடிபட வேண்டாம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அதை விட்டுவிலகுங்கள். தேவனுடைய வார்த்தையின்றி தனது விஞ்ஞானப் பூர்வமான அறிவினால் அவள் இதைச் சாதித்துள்ளாள். 95கல்விச் சாலைகளை ஏற்படுத்த தேவன் ஒருபோதும் நமக்கு நியமிக்கவில்லை. ஆஸ்பத்திரிகளைக் கட்டிக் கொள்ளும்படி தேவன் ஒருபோதும் நமக்குச் சொல்லவில்லை. அவைகள் நல்லவைதான். நூல் நிலையங்களை ஏற்படுத்திக் கொள்ளும்படி அவர் நமக்கு கூறவேயில்லை. ஒருபோதும் இவ்வாறு கூறவில்லை. “சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்...” என்றே கூறியுள்ளார். சுவிசேஷமானது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை பிரத்தியட்சப்படுத்து கிறதாயிருக்கிறது. ''எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும். முழு நிச்சயத்தோடும் வந்தது...'' (1தெச.1:5) என்று பவுல் கூறுகிறார். பவுல், ''நான் உங்களிடம் ஏதோ ஒரு வேத சாஸ்திரியின் பெரிய வார்த்தைகளோடு வரவில்லை. ஆனால் உங்கள் விசுவாசம் இப்பிரபஞ்சத்து மனிதனின் அறிவில் சார்ந்து இருக்காமல், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையில் சார்ந்திருக்க வேண்டுமென்று நான் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், அடையாளத்தோடும் வந்தேன். ஏனெனில் அவர் ஜீவிக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்றான். அதை மாத்திரம் விசுவாசிக்கும்படி தேவன் நமக்கு உதவி புரிவாராக. அவர் இம்மட்டும் செய்து வந்துள்ளது போல், அதை நமக்கு உறுதிப்படுத்துவாராக. 96சாத்தான், தனது கல்விச் சாலைகள், நூல் நிலையங்கள், இலக்கியங்கள், ஆஸ்பத்திரிகள் இவைகளினால், இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டையும், விசுவாசத்தையும் பார்க்கக் கூடாதபடி, உங்கள் கவனத்தை திசைத் திருப்புகிறான். அவன் பார்வோனிடம் சொல்லியது போல், இப்பொழுது உங்களிடம் உறுதிப்படுத்தப்பட்டதும், நிரூபிக்கப்பட்டுள்ளதுமான இச்சாயங்கால வெளிச்சத்தின் காலத்திற்குரிய வாக்குத்தத்த வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் கண்டு கொள்ளக் கூடாதபடிக்கு, உங்கள் கவனத்தை திசைத் திருப்பி, வேறு வியாக்கியானத்தை அவன் அளிக்கிறான். அவன் அதை, நன்கு கல்வி அளிக்கப்பட்டுள்ள தன்னுடைய மக்கள் மூலமாகவும் அறிவைக் கொண்டும், கல்விச் சாலைகளைக் கொண்டும், மத கோட்பாடுகளைக் கொண்டும் அதை நீங்கள் காணாதபடி இருக்க வேண்டிய முயற்சிகளைச் செய்துக் கொண்டு இருக்கிறான். அது இயேசு கிறிஸ்து என்று நீங்கள் பார்த்து விடாதபடிக்கு இருக்க, எதைக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டுமோ அவைகளை அவன் செய்கிறான். அது இயேசு கிறிஸ்து என்று எப்படி நீங்கள் அறிவீர்கள்? அவர் வார்த்தையாயிருக்கிறார். இந்த காலத்தில் அது சம்பவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறே அது சம்பவிக்கிறது. பார்த்தீர்களா? சாத்தான் உங்கள் கவனத்தை எந்த அளவுக்கு திசைத் திருப்ப வேண்டுமோ அந்த அளவுக்கு செய்துக் கொண்டிருக்கிறான். அதற்கு அவன், முடிந்த அளவு எந்த மோசமான பெயரைக் கொடுக்க முடியுமோ அதைக் கொடுக்கிறான். அவன் அதற்கு “பரிசுத்த உருளைகள்” மற்றும் பல நாமங்களை இடுகிறான். இயேசுவை அவன், “பெயல் செபூப்” என்றழைத்தான். வீட்டின் எஜமானை அவன் அவ்வாறு “பெயல் செபூப்” என்றழைத்திருந்தால், அவருடைய சீஷர்களை எவ்வளவு அதிகமாக அழைப்பான் என்று பாருங்கள்? 97வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் காணக் கூடாதபடி அவன் உங்களை திசைத் திருப்புகிறான். அவன் தானே வார்த்தைக்கு இன்னின்ன அர்த்தம் என்று வியாக்கியானிக்கிறான். “...நான் கடைசி நாட்களில் மல்கியா 4-ம் அதிகாரத்தின் காரியங்களை அனுப்புவேன் என வாக்குரைத்திருக்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளதற்கு எந்தவிதமான வியாக்கியானமும் தேவையில்லை. அவரே அதைச் செய்திருக்கிறார். ”லோத்தின் நாட்களில் நடந்தது போல் மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் உலகம் சோதோமின் நிலையில் இருக்கும். அப்பொழுது சரியாக நான் மனுஷகுமாரனை வெளிப்படுத்துவேன்“ என்று தேவன் கூறியிருக்கிறார். நம்மிடையே, எல்லாவிதமான போலிகளும் நடமாடுகின்றன. ஆனால் நமக்கு அசலும் உண்மையான அந்த ஒன்றும் உள்ளது. அவர் அதைச் செய்வேன் என்று கூறியிருக்கிறார். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாக அந்திக் கிறிஸ்து எழும்புவான் என்று கூறியிருக்கிறார். ''அவர்களை விட்டுவிடு, அவர்கள் தொடர்ந்து செல்லட்டும், அவர்கள் மதியீனம் வெளிப்படும்'' (2தீமோ. 3:9) என்று கூறியுள்ளார். எப்படி? வார்த்தை சோதனை அது என்னவென்று நிரூபிக்கிறது. அந்த வார்த்தையினிடம் நீங்கள் வந்து, ''அது இப்படித்தான் இருக்கிறது, சர்ப்பத்தின் வித்தை நான் விசுவாசிக்கவில்லை; நான் இன்னின்னதை விசுவாசிக்கவில்லை'' என்று கூறினால், அதற்கு அர்த்தம் அவைகள் உங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை! என்பதுதான். ஓ, சகோதரனே உற்று நோக்கு... 12மணி ஆகிவிட்டப்படியால் நாம் முடிக்கப் போகிறோம். 98தேவனால் வியாக்கியானிக்கப்பட்டுள்ள இந்த சாயங்கால வெளிச்ச காலத்தின் வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் காணக் கூடாதபடிக்கு அவன் உங்களைத் தடை செய்கிறான். அதன் அர்த்தம் என்ன? நாம் புறப்பட வேண்டிய வேளை வந்துவிட்டது என்றும், தேவன் தம் மணவாட்டிக்காக வந்து கொண்டிருக்கிறார் என்பதுமே. உலகமானது எப்படி நிச்சயமானதாக இருக்கிறதோ அதைப்போல். ஒரு கேள்வியை நான் இப்பொழுது உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இந்தப் பொல்லாத காலத்தின் தேவனை நீங்கள் கண்டு கொண்டீர்களா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது எவ்வாறு, பேரறிவு படைத்த விஞ்ஞானப் பூர்வமான சபையாக இருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா? முழு உலகமும் அந்த ஸ்தாபனங்களைச் சேர்ந்ததாக இருக்கிறது. “நான் ஒரு கிறிஸ்தவன், எந்த சபை ஸ்தாபனத்தை நீங்கள் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறீர்கள். நல்லது, நான் ஒரு சபை ஸ்தாபனத்தைச் சார்ந்தவனாக இருந்தால், நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பேன் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. அது ஒரு பெரிய வார்த்தை, ஆனால் அது சரிதான். அறிவு, விஞ்ஞானம் இவற்றுக்கும் கிறிஸ்தவத்திற்கும் எவ்வித ஐக்கியமும் கிடையாது என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒன்று பிசாசினுடையதும் இன்னொன்று தேவனுடையதுமாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பவற்றை விட்டு விலகுங்கள். அந்த வேசியை விட்டு, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை விட்டு, வெளியே வரும்படி, இக்கடைசிகால கிறிஸ்தவர்களை வேதமானது அழைக்கிறது. 99நிச்சயமாக அவளிடத்தில் நன்மை உள்ளது. ஒரு ஆஸ்பத்திரியைப் பற்றி எவராவது தீமையாக பேசக் கூடுமோ? இல்லை ஐயா. நூல்நிலையம் பற்றி? இல்லை ஐயா! கல்வியைப் பற்றி? இல்லை ஐயா! வார்த்தையைக் கழித்துக் கொண்டு, அவர்கள் அவைகளை மக்களுக்குக் கொடுக்கிறார்கள். அது எத்தனை வஞ்சகமானது என்று பாருங்கள்? அவர்கள் போவதற்கென ஒரு சபை, அவர்கள் ஆராதனைக்காக ஒரு ஆராதனை, அவர்களுக்கென ஒருதேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான். வேதம் அதைக் குறித்து முன்னுரைத்திருக்கிறது. அவ்விரு சரீரங்களில் ஒன்றை நீங்கள் சார்ந்தவர்களாக இருப்பீர்களாயின்... இப்பொழுது, பூமியில் அவ்விரண்டு மட்டும் உள்ளன. அது எப்பொழுதும் அவ்வாறு இருந்து வந்திருக்கிறது. அது இயேசு வரும் வரைக்கிலும் அப்படியே இருக்கும். அவைகளில் ஒன்று அழிக்கப்படும், இப்பொழுது நீங்கள் அவைகளில் ஏதாவது ஒன்றில் அங்கமாக இருக்கிறீர்கள். ஒன்றில் நீங்கள் சேருகிறீர்கள். இன்னொன்றில் நீங்கள் பிறக்கிறீர்கள். ஒன்றில் நீங்கள் அதினுள்ளாகவே பிறப்பதால், அதின் பாகமாக ஆகிறீர்கள், நீங்கள் அதின் பாகமாகவே இருக்கிறீர்கள். எனக்கு ஒரு பயமில்லை என்று நான் மறுதலிக்க முடியுமோ? தேவனுடைய வார்த்தையை நான் எவ்வாறு மறுதலிக்க முடியாதோ, அதைப் போலவே அதையும் மறுதலிக்க முடியாது. நான் தேவனின் பாகமாக இருக்கிறேன் என்றால், வில்லியம் பிரன்ஹாமாகிய நான், பல உறுப்புக்களால் ஆனவன், அவை ஒவ்வொன்றும், எனது பாகமாக இருக்கின்றன. மேலும் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் எனது ஆவிக்கு பொருந்துகிறதாயிருக்க வேண்டும். எனது ஆத்துமாவுக்கு பொருந்துகிறதாயிருக்க வேண்டும். எனது வாழ்க்கைக்கு பொருந்துகிறதாயிருக்க வேண்டும். எனது கருத்துக்களோடு பொருந்துகிறதாயிருக்க வேண்டும். எனது கருத்துக்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருந்தால், அப்பொழுது தேவனுடைய ஆவி என்னில் வாசம் பண்ணவில்லை. அது சரிதான். அதின் ஒரு வார்த்தையைக் கூட நான் மறுதலிக்க முடியாது. 100ஒன்றில் நீங்கள் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். அது அவ்வாறுதான் இருக்க முடியும். அதில் ஒன்று வார்த்தையினாலாகிய தேவனுடைய சரீரமாயிருக்கிறது. இன்னொன்று சபையாகிய சாத்தானின் சரீரமாயிருக்கிறது. இம்முழு உலகிலும், யாதொருவனும், ஏதாவது ஒரு சபையைச் சார்ந்தவனாக இருத்தல் வேண்டும் - ஏதோ ஒரு தேவனை தொழுது கொள்வது. ஒன்று, நீங்கள் அறிவின் தேவனை தொழுது கொள்ள வேண்டும், அதினால் அறிவைக் கொண்டு நீங்கள் செவி கொடுக்கும் காரியங்களைச் சார்ந்து கொள்ளல் வேண்டும். அல்லது விசுவாசத்தில் தேவனுடைய வார்த்தையைச் சார்ந்து கொள்ளல் வேண்டும். அப்பொழுது அவ்வார்த்தையை அவர் உறுதிப்படுத்தி அது உண்மையென்று ஆக்குவதற்கு காத்திருக்க வேண்டும். உண்மையான சபையானது, இப்பாடலின் படி இருக்கிறது. மகிழ்வான ஆயிரமாண்டு நாளுக்காய் நாம் காத்திருக்கிறோம் ஸ்தோத்தரிக்கப்பட்ட நம் கர்த்தரும் வந்து தன் மணவாளியை எடுத்துக் கொள்வார் அப்போது, நமது ஆண்டவர் பூமிக்கு திரும்பி வருவதால், அவருக்காய் காத்திருந்து ஜெபித்த என் உள்ளம் குதூகலத்தால் நிறைந்துள்ளது. ஓ, நமது கர்த்தர் மீண்டும் பூமிக்குத் திரும்பி வருகிறார் ........................................................... சாத்தானும் ஆயிரமாண்டு கட்டப்படுவான், அப்போது நமக்கு அமைதிகேடு இல்லை இவையாவும், இயேசு பூமிக்கு திரும்பி வந்த பிறகு உண்டாகும். 101ஓ, இச்செய்தி சென்று கொண்டிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்களே! நாம் வாழும் இக்காலத்தின் அறிவு, விஞ்ஞானம் இவைகளின்றும் எவ்வளவு வேகமாக விலகி ஓட முடியுமோ, அவ்வளவாக விலகி ஓடுங்கள். தேவனுடைய வார்த்தையினிடத்திற்கு ஓடிப் போங்கள். நீங்களோ, அல்லது நானோ அதை அறிய முடியாது. தேவனே வார்த்தையை நிரூபித்தலைச் செய்கிறார். வார்த்தையை வியாக்கினிக்க வேறொருவருக்கும் உரிமை இல்லை. எனக்கோ அல்லது வேறெந்த மனிதனுக்கோ அவ்வுரிமை இல்லை. தேவனே தம் சொந்த வார்த்தைக்கு வியாக்கினியாயிருக்கிறார். தேவன் தமது வார்த்தையை நமக்கு இக்கடைசி நாட்களில் வியாக்கியானித்துக் கொடுப்பதாக வாக்குரைத்திருக்கிறார். இக்கடைசி நாட்களில் இப்பொல்லாத காலத்தின் தேவனானவன், கலப்படமான மரமாகிய நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து கிடைக்கும் பேரறிவால் மக்களை குருடாக்குகிறான், அவன் இன்னமும் அதைச் செய்துக் கொண்டுத்தான் இருக்கிறான். சபைக் காலங்களின், இருண்ட காலங்களுக்கு முன்பிருந்த காலங்களின் வழியாகவும், இருண்ட காலங்களின் வழியாகவும் இப்பொல்லாத காலத்தின் தேவனுடைய வளர்ச்சி இருந்து வந்து, இப்பொழுது அவனுடைய உச்சகட்ட வளர்ச்சி தலைப் பகுதிக்கு வந்து எட்டியுள்ளது. அது ஒரு ஸ்தாபனமாக இருக்கிறது. இவ்வாறு வளர்ந்து வந்த சூப்பர்மேன் (அசாதாரண வலிமை படைத்த மனிதன்) சாத்தானுக்குள் இது முடிவுறும். அவன்தானே, ''நான் தேவ புத்திரருக்கு மேலாக என்னை உயர்த்திக் கொள்வேன். அவர்கள் எனக்கு செவிகொடுப்பார்கள்“ என்று கூறியிருக்கிறான். அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து கொண்டு இருக்க, தேவபுத்திரர் அதற்கு முன்பாக விழுந்து பணிவார்கள். 102தேவபுத்திரன், “என் மனைவி செய்வது ஒன்றும் தவறல்ல, அவள் நல்லவள்'' என்று கூறுகிறார். செய்யுங்கள், செய்து கொண்டேயிருங்கள். ”நல்லது, அவர் தேவ புத்திரர் என்று கூறுகிறாரே“ என்று நீங்கள் சொல்லலாம். ஆம் ஐயா! தேவனுடைய சாயலாக தேவனுடைய மகிமைக்காக உண்டாக்கப்பட்ட எந்தவொரு மனிதனும் அவ்வாறே உள்ளான். ஸ்திரீயானவள் உப உற்பத்தியாக (By Product) மனிதனுக்கு இருப்பவள். தேவனுடைய மூல (Original) சிருஷ்டிப்பில் அவள் இல்லை, அது சரிதான், தேவபுத்திரர், மனுஷ குமாரத்திகள் செளந்தர்யமுள்ளவர்களென்று கண்டபோது, அவர்களுக்குள் தங்களுக்கு பெண் கொண்டார்கள். ''நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்,” பாருங்கள், சபையானது இப்பொழுது என்ன நிலையிலிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், தற்கால பெண்களின் நிலையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், ஏனெனில் ஸ்திரீயானவளே சபைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறாள், அவள் என்ன செய்கிறாள் என்பதைப் பாருங்கள். இந்த பொல்லாத விபச்சார காலத்தில்... அந்நாட்களில், நாசரேத்தைப்போல, மிகவும் இழிவான, துன்மார்க்கமான, கீழ்த்தரமான விபச்சார நகரம் இப்பூமியில் வேறெதும் இருந்ததில்லை. அப்படியிருக்க அங்கிருந்துதான் தேவன் ஒரு கற்புள்ள கன்னிகையைத் தெரிந்தெடுத்தார். நாசரேத்தூரிலிருந்து எந்த நன்மையும் வரக் கூடுமோ? இப்பொல்லாத காலத்திலிருந்து கூட தேவன் தமது நாமத்திற்கென ஒரு ஜனத்தை தெரிந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட இக்காலத்தில்தான், இக்காலத்தின் தேவனானவன் ஜனங்களை, அவர்களது மதக் கொள்கைகளாலும், மத ஸ்தாபனங்களாலும் குருடாக்கிக் கொண்டிருக்கிறான். அவர் நாமத்திற்காய் ஓர் அற்புத ஜனம் அவர் தம் மணவாட்டியென பெயர் பெற்றோர் இங்கோ அவர் நிந்தித்து தள்ளப்பட்டாலும் ஓர் நாளில் தாம் தெரிந்து கொண்டோரை கர்த்தர் நகர வாசலுக்குள் கொண்டு வருவார் அது எனக்கு விலையேறப் பெற்றதுவே, ஆட்டுக்குட்டியானவர் நம் கண்ணீர் துடைப்பார் அப்போது நாம் ஆடிப்பாடி குதித்திடுவோம், நம் வீடு திரும்பும் ஆனந்த நாளதுவே முதல் பத்தாயிரமாண்டுக் காலமே (அது சரிதான்) அவர் நாமத்திற்காய் ஓர் அற்புத ஜனம் அவர் தம் மணவாட்டியென பெயர் பெற்றோர் இங்கோ அவர் நிந்தித்து தள்ளப்பட்டாலும் ஓர் நாளில் தாம் தெரிந்து கொண்டோரை கர்த்தர் நகர வாசலுக்குள் கொண்டு வருவார் அது எனக்கு விலையேறப் பெற்றதுவே. 103நான் வயது சென்ற மனிதனாக ஆகிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நாட்கள் மங்கிக்கொண்டிருக்கின்றன; என் கண் பார்வையும் மங்கிக் கொண்டிருக்கிறது. எனது ஜீவனாகிய அச்சிறு சுடர் மங்கி எரிகிறது. நான் மரண இருளைக்கண்டு அஞ்சவில்லை, ஏனெனில் நான் பவுலோடு சேர்ந்து கொண்டு, ''....நான் அவரையும் அவருடைய உயிர்தெழுதலின் வல்லமையும் அறிந்துள்ளேன். அவர்கள் என்னை எங்கே அடக்கம் செய்த போதிலும், அல்லது நான் கடலில் மூழ்கி மரிக்க வேண்டியதாயினும், ஓர் அக்கினிச் சூளையில் நான் எரிக்கப்பட்டாலும், ஓர் சிங்கத்தால் பீறுண்டாலும், அவர் என்னை எனது பெயர் சொல்லி அழைப்பார். அப்பொழுது நான் மறு உத்தரவு கொடுப்பேன்“ என்பேன். ஆமென்! நாம் ஜெபம் பண்ணுவோமாக. இச்சபையிலோ, அல்லது தொலைபேசி வாயிலாகவோ இத்தேசத்தில் பற்பல ஊர்களில் தங்கள் சபைக் கட்டிடங்களிலும், மன்றங்களிலும், குழுக்களாகவும், சபையாகவும் உட்கார்ந்து இச்செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கிறவர்களில் எவரவது இருப்பின், அவருக்கு சுவிசேஷத்தின் ஊழியக்காரனென்ற முறையில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் உங்களை வேண்டிக் கேட்டுக் கொண்டு, உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். இத்துன்மார்க்க காலத்தின் கோபாக்கினையை விட்டுவிலகி ஓடுங்கள். இப்பொல்லாத காலத்தின் தேவனை சேவிக்காதீர்கள். “அது நல்லதாக இருக்கிறது. அவர்களுடையவைகள் அருமையாயிருக்கிறது'' என்று நீங்கள் சொல்லுவீர்கள் என்று நான் அறிவேன். அது சரிதான், அது நன்மை, தீமை இரண்டும் கலந்த கலப்பட மரம்தான். தேவனுடைய வார்த்தையோடு அறிவை நீங்கள் கலக்க முடியாது. விசுவாசத்தினால் - அறிவினால் அல்ல - விசுவாசத்தினால் விசுவாசிக்கப்பட வேண்டிய வார்த்தையாகும். அது அதை நீங்கள் புரிந்து கொள்கிறதில்லை. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாத்திரம் செய்கிறீர்கள். அது சரியென்று நீங்கள் கூறி, அதின்படி ஜீவிக்கிறதாயிருக்கிறது. அது அதையே நீங்கள் செய்ய வேண்டுமென்று அவர் உங்களுக்கு கூறுகிறார். இங்கு கூடியுள்ளோரிலும், மற்றும் தொலைபேசிகள் வாயிலாக இச்செய்தியை பல்வேறு இடங்களிலிருந்தும் கேட்டுக் கொண்டிருப்பவர்களிலும் எவராவது தேவனை அறியாவிட்டால்... (நான் இப்பொழுது இங்கு கூடியுள்ளோருக்காக பீட அழைப்பு (Altar call) கொடுக்க இயலாது, ஏனெனில், அதற்கு இங்கு பீடத்தண்டையில் இடம் போதாது). 104ஓ, ஸ்திரீகளே, இக்காலையில் நான் உங்களை கடிந்து கொண்டேன். நானல்ல, தேவனுடைய வார்த்தையில் இன்னின்ன பிரகாரமாக கூறப்பட்டுள்ளது என்று மாத்திரம் கூறினேன். கட்டையாக வெட்டிக் கொள்ளப்பட்டமுடி, அறைகுறை ஆபாச ஆடைகள், உங்களை அசல் பால்உணர்வை தூண்டும் விதமாக உடுத்திக் கொள்ளுதல், இவற்றால் அது இன்னவிதமான ஆவியாகும் என்பதை நீங்கள் உணரவில்லையா? அருமையான சகோதரியே, உங்கள் சரீரத்தை பொருத்தமட்டில் நீங்கள் சுத்தமாக இருக்கக் கூடும், ஆனால், உங்கள் ஆத்துமாவில் உங்களைப் பிடித்துக் கொண்டுள்ளது என்னவென்பதை நீங்கள் காணவில்லையா? தேவன் தமது சொந்த புத்திரனை தமது மகளாகிய உங்களைக் கொண்டு, மயக்கி வஞ்சிக்கச் செய்து, உங்கள் பேரில் அவனுக்கு இச்சையுண்டாக்கும்படி, அதற்காக உங்களை பால்உணர்வைத் தூண்டும் விதமாக தோற்றமளிக்கச் செய்வாரா? அப்படி தேவனே செய்துவிட்டு இருவரையுமே விபச்சார பாவத்திற்காக பொறுப்பாளியாக்குவாரா? சகோதரியே, தேவனே அதைச் செய்வாரோ? அக்கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். தேவன் மேல் இப்பழியை சுமத்த வேண்டாம், தேவனுக்கும் இதற்கும் தொலைதூரம். சகோதரனே, இக்காரியங்களெல்லாம் தவறானவை என்பதை நீங்கள் காணக் கூடாதபடி, உங்களுக்கு தேவன் இவ்வுலகத்தின் ஆவியை அளித்துள்ளாரா? தேவன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தி அதை அவ்வாறிருக்குபடி செய்வதை நீங்கள் காணக் கூடாதபடி, உங்கள் கண்களை, சபைகளில் சாஸ்திரங்களுக்கும், ஸ்தாபன கோட்பாடுகளுக்குமாக குருடாக்கிப் போட்டுள்ளாரா? ஜீவனின் ஒரே ஆதாரமாகிய தேவனுடைய வார்த்தையினின்றும், உங்களது வேலை, உங்களது எஜமான், உமது மனைவி, உமது பிள்ளைகள், உமது சபை முதலானவை உங்களைப் பிரித்துவிட்டதா? அப்படியாயின் அவைகளை விட்டு ஓடிப் போங்கள். நான் உங்களை தேவ அன்புக்குள்ளாக அன்பு கூறுகிறேன். உங்களுக்கு மேலாக எனது சகோதரர்களை நான் மதிக்கவில்லை. அவ்வாறு நான் செய்வேனானால் முக்தாட்சண்யம் உள்ளவனாக இருப்பேன். உங்களைக் கோபப்படுத்துவதற்காக நான் இவைகளைக் கூறவில்லை. தேவனுடைய வசனத்தில் இவைகள் இருப்பதால், நான் அவற்றையே உங்களுக்கு எடுத்து காட்டினேன், நீங்கள் கண்டு உணர்ந்து கொள்ளும்படி, தேவனுடைய ஊழியக்காரனென்ற முறையிலும், என்னுள்ளத்தில் இருக்கும் தேவனுடைய அன்பினிமித்தமாகவும், இவைகளை நான் உங்களுக்குக் கூறினேன். நான் கூறாவிடில், ஒருவேளை நீங்கள் அறியாமல் இருந்துவிடக் கூடும். இப்பொல்லாப்பிலிருந்து நீங்கள் விலகிஓடுவீர்களா? எங்குமுள்ள யாவரும் இப்பொழுது தலைகளை வணங்குவோமாக. 105பிரியமுள்ள தேவனே, எனக்கு முன்பாக கைக்குட்டைகள் உள்ளன. மக்கள் வியாதியாயிருக்கிறார்கள். இக்குட்டைகளின் மேல் என் கைகளை நான் வைத்துள்ளேன். நீர் அவர்களை குணமாக்கும். இன்றிரவு, தேவனுடைய வல்லமை விளங்கும்படி ஒரு மகத்தான ஆராதனை உண்டாயிருக்கும் என்று நான் நம்புகிறேன். கர்த்தாவே. கடந்த இரு கூட்டங்களின் முடிவை நாங்கள் அறியும்பொழுது, மகத்தான அற்புத, அடையாளங்கள் நடைபெற்றுள்ளன. இன்றிரவு இரட்டிப்பான பங்கை எங்களுக்கு நீர் அளிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். தேவனே, உம்மையும், உமது வார்த்தையையும், ஜனத்தையும் நான் நேசிக்கிறபடியால், நான் உண்மையான இருதயத்துடன் அதற்காக ஜெபிக்கிறேன், கர்த்தாவே, பிரியமான தேவனே, அதை எங்களுக்கு அளித்தருளும். இங்கும், மற்றும் தேசமெங்கிலும் பல்வேறு இடங்களில் உள்ள சபைகளிலிருந்து கூடிவந்து இவ்வாராதனையில் தொலைபேசி வாயிலாக பங்கு கொள்வோருக்குள் வியாதிப்பட்டவரும், பாடுபடுவோரும் இருப்பின், அவர்களால் இன்றிரவுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் இரவுக்குள் வீடு திரும்ப வேண்டியிருக்குமானால், அவர்களை நீர் சுகமாக்கும் என்று நான் ஜெபிக்கிறேன். நீர் அவர்களது சரீரத்தில் உள்ள புற்றுநோய், காச நோய், நிமோனியா மற்றும் உள்ள வியாதிகளைச் சொஸ்தமாக்கினால், அவர்கள் மீண்டும் நிச்சயமாக வியாதிப்படுவர். அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தால், அவர்களது சரீரமானது இன்னும் பாவத்திலும், சாபத்திலும் தான் இருக்கும். ஆனால், அவர்களுக்கு, சுகத்தில் எல்லாம் மகத்தான சுகமளித்தலாகிய, தெய்வீக சுகமளித்தல் என்ற உண்மையான சுகமளித்தலை, அதாவது அவர்களது ஆத்துமா சுகம் பெறுவதை அவர்களுக்கு அளித்தருளும், கர்த்தாவே, அப்பொழுது அவர்கள் புது சிருஷ்டியாகி, மரணத்தைக் கடந்து ஜீவனையடைவர், அவ்வாறு அவர்களது ஆத்துமா மீட்கப்பட்டபின், இந்த பழைய கூடாரமாகிய சரீரத்தில், சரீர மீட்புண்டாகும்படி காத்திருப்பார்கள். அதை அளித்தருளும், கர்த்தாவே. அவர்கள் அந்த ஸ்தாபனங்களையும், சடங்காச்சாரங்களையும் விட்டு விலகி ஓடட்டும். அந்த மத ஸ்தாபன சித்தாந்தங்கள் உள்ள ஸ்தாபனங்களில், தேவனே, நான் மிக அருமையான சகோதரர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் அதைக் காண்பார்கள், அவர்கள் வார்த்தையைக் கண்டுகொள்ளட்டும் என்று நான் எவ்வாறு கூற முடியும், தேவனே? அது என்னை வருத்துகிறது, ஆயினும், ''ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருப்பினும், சாந்தமுள்ளவனாக இருப்பினும், மென்மையாக இருப்பினும், என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் தானாக என்னிடத்தில் வருவதில்லை, என் பிதா எனக்குத் தந்தவர்கள் யாவரும் என்னிடத்தில் வருவார்கள்'' என்று நீர் கூறியுள்ளதை நான் அறிந்திருக்கிறேன். சத்தியத்தை எடுத்துரைப்பதற்கு எனக்குள்ள முழுப் பொறுப்பையும் நான் உணருகிறேன். பவுல் கூறியதைப் போல், தேவனுடைய வார்த்தையை வஞ்சகமாய் கையாளாமலும், வார்த்தையோடு ஸ்தாபன கோட்பாடுகளை, கலப்படமான நன்மை, தீமையறியத் தக்க விருட்சம் போல் கலக்காமல், திறந்த மனதுடன் பரிசுத்த ஆவியால் தேவ வசனத்தை கையாளுகிறேன். தேவனே ஒவ்வொருவரையும் இரட்சித்தருளும், அதை அளித்தருளும். 106இப்பொழுது, உங்கள் தலைகள் வணங்கியிருக்கட்டும், கண்கள் மூடியிருக்கட்டும், எனக்கல்ல. ''நீங்கள் அதைச் செய்கிறீர்களோ, செய்யாதிருக்கிறீர்களோ, அது எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை“ என்று என்னால் கூற முடியாது. அது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. நான் கடுமையாக பேசினதினால் நீங்கள் வருத்தப்படவில்லை என்று நான் நம்புகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். பவுல் கூட ''இப்பொழுது நான் உங்களிடத்தில் வந்திருந்து வேறு வகையாகப் பேச விரும்புகிறேன்'' (கலா: 4:20) என்று கடுமையாக பேசியதைப் போல் அவர்களை பவுல் நேசிக்கவில்லை என்பதினால், அவன் அவ்வாறு பேசவில்லை, அவன் அவர்களை நேசித்தான், எனவே அவ்வாறு கடிந்து கொண்டான். இயேசு அவர்களை கடிந்து கொண்டு, பிறகு அவர்களுக்காக மரித்தாரே, ”பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமலிக்கிறார்களே...'' என்று இயேசு ஜெபித்தார். ஒரு மனிதன் தான் சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புவதும், தான் சரியாக ஆவதற்காக முயலுவதும் என்பதைப் பற்றி சிந்திக்கையில், அந்தப் பிசாசைப் பார்க்க... பிசாசனவன் மக்களுடைய கண்களைக் குருடாக்கியிருக்கிறான். 107இந்த தேசமானது தேவனுடைய மகிமையால் பற்றியெரிந்து இக்கடைசி நாட்களில், தன் மத்தியில் நடைபெற்றவைகளைக் காணக்கூடும்படி இருக்கவேண்டும். பழைய தேசங்களை ஏன் இந்த எழுப்புதல்கள் தொடவில்லை? இதுதான் இத்தேசத்தின் மேற்குக் கடைசியான மேற்குக் கடற்கரையாகும். இப்பொழுது, பாவக்கட்டுகளெல்லாம், பூமிக்கடியில் முழங்கி இப்பொழுது, அந்த இடம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சலிஸ், ஹாலிவுட் ஆகிய ஸ்தலங்கள் ஒவ்வொரு மணி நேரமும் பல அங்குலங்கள் கணக்கில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன, அதைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆம், நாம் இந்த அளவுக்கு வந்துவிட்டோம். எந்த வேளையிலும் அழைப்பை நாம் கேட்போம். அதை நீங்கள் அறிவீர்களாயின்... இப்பொழுது ஒருவரும் அங்குமிங்கும் பார்க்க வேண்டாம், ஆனால் உங்கள் இருதயத்திலிருந்து நீங்கள் அதை அறிவீர்களானால், நான் உங்களைக் கேட்கிறேன். தேவன் வெளிப்படுத்தினால் ஒழிய, உங்கள் இருதயத்தை நான் அறியேன். ஆனால் உங்கள் இதயப் பூர்வமாக, தேவனோடும், அவரது வார்த்தையோடும் விசுவாசத்தில், நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை என்பதை நீங்கள் கண்டு கொள்ளக் கூடுமானால், “ஆண்டவரே எனக்கு உதவி புரியும்'' என்று கேட்டு அவருக்கே உங்களது கரத்தை உயர்த்துவீர்களா? ஓ, தேவனே, இங்கு நிரம்பி வழியும் இந்த சபையில் சுற்றுமுற்றும் நூற்றுக் கணக்கான கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஒருவேளை இருநூறு கரங்கள் இருக்கக் கூடும். உங்களது உத்தமத்திற்காக உங்களுக்கு நன்றி. 108அன்புள்ள இயேசுவே, அவர்கள் ஒருவரும் இழந்து போகப்பட வேண்டாம், மரித்தோருக்கும், ஜீவனுள்ளோருக்கும் நடுவில் நிற்கிற உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையைச் சுட்டிக் காட்டிக் கொண்டு இருக்கிறேன். என்னால் அவர்களை இரட்சிக்க முடியாது. ஆண்டவரே, அவர்கள் இரட்சிக்கப்பட விரும்புகிறார்கள். மேலும் பிதாவே, நான் அடிக்கடி கூறுவது போல், சூரியனானது காலையில் உதித்து, பூமியின் மேல் கிளம்பி பிரகாசிக்கும்படி தேவனால் அனுப்பப்படும்போது, தானியங்களை முதிரச் செய்து, இயற்கையான வாழ்வுக்காக, இயற்கையான உணவை அது ஆயத்தப்படுத்துகிறது. ஆனால், ஓ, தேவனே, ''...அவருடைய நாமத்திற்கு பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும், அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்...'' என்பதாக நீர் கூறியுள்ளீர், தேவனுடைய வார்த்தையாகிய நீதியின் சூரியனாகிய குமாரன், அவருடைய நாமத்திற்குப் பயந்திருக்கிறவர்கள் மேல், தமது விசுவாசத்தின் கதிர்களின் கீழ் ஆரோக்கியம் உடையவராய் அவர்களுடைய இருதயங்களில் உதிக்கட்டும். அந்த வார்த்தையில், தேவ வார்த்தைக்கு உள்ள அவர்களுடைய கீழ்ப்படியாமையை அது சுகமாக்கி, தேவ புத்திரர், புத்திரிகளின் பூரணத்துவ நிலைக்கு கொண்டு வரப்படட்டும். அவர்கள் உம்முடையவர்கள் ஆண்டவரே. தங்களுடைய ஆத்தும இரட்சிப்புக்காக கரங்களை உயர்த்திய இங்கும் எங்குமுள்ளவர்களை உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், ஆமென்! ................................................. நதிக்கப்பால் இளைப்பாறுதலை (விசுவாசத்தால் நான் போகும் அவ்விடத்தைக் காண்கிறேன்) ஆனந்த பரவசமடைந்தேன் என்ஆத்துமா காணும் வரை, (எங்கே? இப்பீடத்தில்) என் மகிமை யாவும் சிலுவையில் (அங்கேதான் வார்த்தை தொங்கிக் கொண்டிருக்கிறது) சிலுவையில் இருக்கட்டும் இயேசுவே என்னை வைத்துக் கொள்ளும் (அவரோடு சிலுவையில் அறையப்பட்டு இருத்தல், அது உலகின் காரியங்கள் ஒன்றும் வேண்டாம். அவரோடு சிலுவையிலறையப்பட்டு வைக்கப்படுதல்) விலையேறிய ஊற்றுண்டாம் அங்கே கல்வாரியினின்றும் ஓடுதாம், அது சுகமளிக்கும், யாவருக்கும் இலவசமாய் இருப்பதுவே நதிக்கப்பால் இளைப்பாறுதலை ஆனந்த பரவசமடைந்த என் ஆத்துமா காணுமட்டும் என் மகிமை (யாவரும் கைகளை உயர்த்துவோம்) யாவும் சிலுவையில் இருக்கட்டும். 109“கிறிஸ்தவரே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்று கூறி உங்கள் அருகில் இருக்கும் எந்த ஒரு நபருக்கும் கரம் நீட்டி கைகுலுக்கி வாழ்த்துங்கள். (சகோதரர் பிரான்ஹாம் இசையாளர்களிடம் பேசுகிறார் - ஆசிரியர்) நீங்கள் அவருடைய பிரசன்னத்தை உணருகிறீர்களா? தொலைபேசி வாயிலாக தொலை தூர ஊர்களில் இருந்து கொண்டு, இதில் பங்கு கொள்ளும் சகோதரரே, நீங்கள் அங்குத்தானே ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டு, ''கிறிஸ்தவரே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக'' என்று கூறுங்கள். 110இக்கட்டிடத்தின் பின்னால், ஒரு ஞானஸ்நானத் தொட்டியுள்ளது, அவர் தம் நாமத்தை தரித்துக்கொள்ளும் ஜனங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். உங்கள் பாவ மன்னிப்புக்கென்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இதற்கு முன் ஞானஸ்நானம் பெற்றிருக்காவிடில், அதற்காக பின்னால் தொட்டியும், அங்கிகளும், ஞானஸ்நானம் கொடுப்பதற்கு சகோதரர்களும் ஆயத்தமாக உள்ளனர். நீங்கள் உண்மையாக இயேசுவை இரட்சகராக ஏற்று, அதைச் சத்தியம் என்று விசுவாசித்தால், நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். வேதத்தில் எந்தவொரு நபருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தவிர வேறு எவ்விதத்திலும் ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை, மட்டுமல்ல, கத்தோலிக்க சபையானது ஸ்தாபிக்கப்படும் முன்னரும் எந்தவொரு நபரும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தவிர வேறு எவ்விதத்திலும் ஞானஸ்நானப்படுத்தப்படவில்லை. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள்ளாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பட்டங்களின் நாமத்தில் ஒருவனும் ஞானஸ்நானப்படுத்தப்பட்டதாக, வேதத்திலோ, அல்லது சரித்திரத்திலோ காணப்படவில்லை. அது கத்தோலிக்க சபை கோட்பாடாகும். அது வேதத்தின் உபதேசம் அல்ல. 111ஒரு கத்தோலிக்க சபை பாதிரியாரால் நான் பேட்டி காணப்பட்டபோது, நான் அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். “அது (இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது) சத்தியமானதுதான். ஆனால் நாங்கள் தான் சபை நாங்கள் விரும்புபவைகளை மாற்றிக் கொள்ள எங்களுக்கு முடியும். எந்தவொரு வசனத்தையும் அனுஷ்டிப்பதற்கு உரிய அளவில் அதை செல்லும்படியாக்கும் உரிமை சபைக்கு இருக்கிறது. தேவன் தமது சபையில் இருக்கிறார்” என்று அவர் கூறினார். “தேவன் தம் வார்த்தையில் இருக்கிறார். தேவன் வார்த்தையாயிருக்கிறார். சபையானது அந்த வார்த்தைக்கு முரணாக நடந்து கொண்டால் அப்பொழுது நான் அந்தச் சபையை விசுவாசிக்கமாட்டேன்” என்று நான் அவருக்குப் பதிலளித்தேன். எந்த மனிதனின் வார்த்தையும் பொய் என்றும், அது மத குருவாயினும், போப் ஆயினும்; அவர் என்னவாயிருப்பினும் அது பொய்யே, ஆனால் தேவனுடைய வார்த்தையோ மெய்யாயிருக்கிறது. ஒருவன் எவ்வாறு ஞானஸ்நானப்படுத்தப்பட்டிருந்தாலும் சரி, அவன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவில்லையெனில், அவன் சரியான இந்த ஞானஸ்நானம் மீண்டும் எடுக்கும்படி ஒவ்வொருவரையும் பவுல் செய்தான். சிலர் ஞானஸ்நானம் பெறுமுன்னர், பரிசுத்த ஆவி பெற்றதற்கு பிறகு, பேதுரு, “...நம்மைப் போல் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களுக்கு எவனாவது தண்ணீரை விலக்கலாமா?'' என்று கேட்டான் (அப்: 10:47). பேதுருவிடம் இராஜ்ஜியத்தின் திறவுகோல் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே, அவன் ''நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்ட போதிலும், இங்கிருந்து புறப்பட்டு போகும் முன்னர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று கட்டளை கொடுத்தான். ''...இந்த பூமியில் கட்டுவது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்...'' என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. திறவுகோல் என்ன செய்கிறது? ஒரு ரகசியத்தைத் திறந்து கொடுக்கிறது. 112“நீங்கள் போய், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானநானம் கொடுங்கள்” என்று இயேசு கூறியது அவிசுவாசியைக் குருடாக்குவதற்காக இருந்து கொண்டிருக்கிறது... கவனியுங்கள்! வார்த்தைக்கு - வார்த்தை பேதுரு ஏன் அதை நிறைவேற்றவில்லை? அவன் அப்படித்தானே செய்ய வேண்டும். ஒரு மனிதன் ஞானஸ்நானம் பெறும்போது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று வெறும் பட்டங்களை மாத்திரம் உச்சரித்து ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டால், அவன் ஞானஸ்நானமே பெறவில்லை. அவனுக்கு நாமமே இல்லை. பிதா என்பது ஒரு நாமமல்ல, குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி என்பது நாமமல்ல. நான் மனிதன் என்றால் எப்படியோ, அவ்வாறே, பரிசுத்த ஆவி என்பதும். அவர் என்னவாக இருக்கிறாரோ அதுதான். அவர் பரிசுத்த ஆவியாயிருக்கிறார். பிதா என்பதும் ஒரு பட்டம். நான் ஒரு தகப்பன். குமாரன் என்பது ஒரு பட்டம்தான்; நான் ஒரு குமாரனாயிருக்கிறேன். மனுஷன் என்பது ஒரு பட்டம்தான். நான் அதுவாகத் தான் இருக்கிறேன். ஆனால் என்னுடைய பெயர் வில்லியம் பிரான்ஹாம் ஆகும். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது இயேசு கிறிஸ்துவின் நாமம் என்பதாகும். இயேசு, “நான் என் பிதாவின் நாமத்தினால் வந்திருக்கிறேன்'' (யோவான்: 5:43) என்று கூறினார். பிதாவின் நாமம் என்ன? தன் தகப்பனுடைய நாமத்தில் குமாரன் வருகிறார். பிதாவின் நாமம் இயேசு கிறிஸ்துவாகும். நான் சொல்வது என்ன என்று கண்டுகொண்டீர்களா? 113நான் உங்களிடம் அந்த விற்பனை ஸ்தலத்திற்குப் போய் இந்நகரத்தின் மேயரின் பெயரால் (அல்லது நாமத்தால்) ஒரு பொருளை வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கூறினால், உங்களில் எத்தனைப் பேருக்கு இந்நகரத்தின் மேயர் யார் என்பது தெரியும்? அவர்தான், எனது நல்ல நண்பர், ரிச்சர்ட் விஸ்ஸிங் என்பவராவார். நான் சொன்னதின் பேரில் நீங்கள் அங்கே போய், “இந்நகரத்தின் மேயரின் நாமத்தால் இன்னின்னதைத் தாருங்கள்” என்று கேட்கிறதில்லை. ''ரிச்சர்ட் விஸ்ஸிங் நாமத்தினால்“ என்று தான் கேட்கிறீர்கள். இந்நகரத்தின் மேயர் யார் என்பதை, ஜெபர்சன்வில்லில் உள்ளவர்கள் அறிவீர்கள், எனவேதான் அவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் என்று கூறினார். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் இயேசுவின் சரீரப் பிரகாரமாக வாசம் செய்கிறது. ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று அவர் கூறினார். இயேசு யார் என்பதைப் பற்றிய வெளிப்பாட்டின் மேல் தான் அவர் சபையைக் கட்டியிருக்கிறார். அவ்வெளிப்பாட்டை பெற்றுக் கொண்டவனாய் அங்கே நின்று கொண்டிருந்த பேதுரு, ''நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்“ என்று கூறினான். பரலோகத்திலும், ”பூலோகத்திலும் திறவுக்கோல்கள் போட்டு திறக்கப்பட்டன...“ நாம் இரட்சிக்கப்படும்படிக்கு... ”அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை “ என்று அவன் கூறினான் (அப்: 4:12). 114இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்கள் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள்? பாவ மன்னிப்புக்காக. “எவர்களுடைய பாவங்களை நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவர்களுடைய பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்பட்டிருக்கும்...'' (யோவா: 20:23). ஆனால் குறிப்பிட்ட நபர் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள தகுதியுள்ளவர், பொருத்தமானவர் என்று நீங்கள் காணவில்லையெனில், நீங்கள் அவருக்கு அதைச் செய்ய வேண்டாம். ஏனெனில் நீங்கள் அதை அவருக்குச் செய்யும்பொழுது, அது அவருக்கு உண்டாகும். நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? என் இரட்சகர் அழைப்பை (வார்த்தையானவர்) நான் கேட்கிறேன் (கல்லறைக்கு அழைக்கிறார்) என் இரட்சகர் அழைப்பை நான் கேட்கிறேன் (நீ என்னோடு எழுந்திருக்கும் படி என்னோடு மரிக்கமாட்டாயா? என்று கேட்கிறார்) என் இரட்சகர் அழைப்பை நான் கேட்கிறேன் (அதற்கு இவ்வுலகம் என்ன பதில் கூறப்போகிறது?) சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்று என்றழைக்கிறார் (நீங்கள் யாராவது ஞானஸ்நானம் பெறாவிடில்) நடப்பேன் நாம் உம்மோடே நடப்பேன் நான் (ஞானஸ்நானத் தொட்டி அங்கே உள்ளது) உம்மோடே (அவர் வார்த்தையாயிருக்கிறார்) நடப்பேன் நான் உம்மோடே நடப்பேன் நான் உம்மோடே எந்தன் நித்திய காலமெல்லாம் நடப்பேன் நான் உம்மோடே நம் தலைகளை வணங்குவோம். 115அன்புள்ள தேவனே! ஞானஸ்நானத் தொட்டி ஆயத்தமாயுள்ளது. ஆண்டவரே, இருதயங்களில் இப்பொழுது பேசியருளும். கிறிஸ்துவாகிய வார்த்தை அவர்களை நித்திய காலமெல்லாம் தம்முடன் நடந்து வரும்படி அழைப்பதைக் கேட்கட்டும். “தோட்டத்தின் வழியாக நான் அவருடன் நடந்து செல்வேன். நீர்நிலை வழியாக நான் அவருடன் நடந்து செல்வேன். நான் அவருடைய நாமத்தை எடுத்துக்கொள்வேன். அவருடைய வார்த்தையை நான் விசுவாசிப்பேன். அவர் தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை அழைக்கிறாரே, அதில் நான் ஒருவனாயிருக்க விரும்புகிறேன். நான் அவரைப் பின்பற்றுவேன். உலகத்தோடு நான் சரசமாட மாட்டேன். உண்மையான நியமிக்கப்பட்ட மணவாட்டியாய் நானிருப்பேன். அவருடைய வார்த்தையின் ஒரு உறுப்பை விட்டாகிலும் நான் விலகமாட்டேன். நான் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென அவர் கேட்கிறாரோ அவையெல்லாம் நான் செய்வேன். வரப்போகும் எனது மணவாளன் நான் என் முடியை நீளமாக வளர்த்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறாரென்றால், நான் அவ்வாறே முடியை நீளமாக வளரவிடுவேன். நான் அதைச் செய்வேன். இந்த நவீன ஒப்பனைகள் யாவையும் நான் அகற்றிவிட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரென்றால், நான் அவ்வாறே அகற்றிவிடுவேன். நான் உடுத்திக் கொண்டிருக்கிற இந்த அரை குறையான பால்உணர்வைத் தூண்டும் உடைகள் யாவும் பொல்லாதவை என்றும், அவை பொல்லாத ஆவியால் உண்டானவை என்றும், எனக்கு அவர் கூறுகிறாரென்றால் நான் அவைகளை களைந்துவிடுவேன். அவிசுவாசிகளின் ஐக்கியத்தை விட்டுவிலக வேண்டுமென விரும்புகிறாரென்றால், நான் அவ்வாறே செய்வேன். இதைப் பற்றி எவர் என்ன சொன்ன போதிலும் நான் கவலைப்பட மாட்டேன். அவர் என்னை விட்டு விலகுவதும் இல்லை, என்னை கைவிடுவதும் இல்லை என்று எனக்கு வாக்குரைத்திருக்கிறபடியால், நான் செய்யும் காரியங்களால் என் ஜீவனத்திற்கென அப்பத்தை அது தேடித்தருகிறதாயிருந்தாலும், நான் விட்டுவிடுவேன். நித்திய காலமெல்லாம் நான் அவரோடு நடப்பேன். அவருடைய நாமத்தினால் நான் ஞானஸ்நானம் பெற வேண்டுமென அவர் விரும்புகிறாரென்றால், நான் அதையும் செய்வேன் என ஒவ்வொருவரும் கூறட்டும். மேலும் கர்த்தாவே, இதைத் தான் நீர் விரும்புகிறீர். இதைப்பற்றி உம்முடைய வார்த்தையில் நீர் வாக்குரைத்திருக்கிறீர். ஒவ்வொரு நபரும், கர்த்தாவே! அதைக்கண்டு, அதற்கு, இனிமையாகவும், தாழ்மையாகவும், பணியட்டும். இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென்! 116நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். என்னுடைய இந்த இலக்கணமில்லாத அரைகுறையான சொற்களை தேவன் எடுத்து அவற்றை உங்களுக்கு உண்மையுள்ளதாக ஆக்கித் தருவராக. இதுவே என்னுடைய உண்மையான ஜெபமாயிருக்கிறது. ஞானஸ்நானத் தொட்டி ஆயத்தமாகிவிடும். யாராவது மனந்திரும்பி, இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற விரும்பினால், முன்னுக்கு வாருங்கள், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. தேவனுக்காக நீங்கள் வாழ்வதற்கு உரிய வகையில் உங்களுக்கு நாங்கள் உதவி செய்ய முடியுமோ, அவ்வகையிலெல்லாம் உங்களுக்கு செய்ய நாங்கள் இங்கு இருக்கிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். இப்பொழுது, நாம் எழுந்து நிற்போம், “அவர் என்னை முந்தி நேசித்தார், எனவே நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன்” என்ற நமது அந்த சிறிய பாடலை நாம் ஒவ்வொரு வரும் பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன் (நாம் கரங்களை உயர்த்திப் பாடுவோம்) நான் அவரை நேசிக்கிறேன் அவர் என்னில் முந்தி நேசம் வைத்ததால் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் கிரயம் வாங்கினார். நம் தலைகள் வணங்கியிருக்க, அவருக்கு இப்பாடலை மெதுவாக பாடுவோம். (சகோதரர் பிரான்ஹாம் மெதுவாகப் பாடி ஜெபிக்கிறார்). ஓ, எங்கள் பிதாவாகிய தேவனே, எளிய சிருஷ்டிகளாகிய எங்களிடம் இரக்கமாயிரும். கர்த்தாவே எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிற வேலைக்காக எங்களை பெலப்படுத்தியருளும். தேவனே, எனக்கு உதவி செய்யும் எனக்கு உதவி செய்யும். ஏதோ ஒன்று முன்பாக இருக்கிறதாக நான் உணருகிறேன். பிதாவே, சத்தியத்தை அறிந்து கொள்ளும்படி, எனக்கு உதவி செய்யும். ஓ, தேவனே அன்புள்ள தேவனே, இந்த மக்களை ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தினால் அவர்களை நடத்தும் என நான் ஜெபிக்கிறேன். நாம் தலைகளை வணங்கியிருக்கிற நிலையில், போதகர் சகோதரன் நெவில் அவர்கள், நமது விலையேறப்பெற்ற சகோதரன், இங்குவந்து, உங்களுக்கு ஞானஸ்நானத்தை குறித்து அறிவிக்கக் கேட்கிறேன்.